Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
மீனத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் டிசம்பர் 31 முதல் இந்த 3 ராசிக்கு பெரிய லக் அடிக்கப்போகுது..
மீன ராசியில் டிசம்பர் 31 ஆம் தேதி குரு, சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
ஜோதிடத்தில் கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுகின்றன. அப்படி மாற்றும் போது அது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். இப்படி உருவாகும் யோகத்தால் 12 ராசிக்காரர்களிலும் அதன் தாக்கம் இருக்கும். அதில் சில ராசிக்காரர்கள் நற்பலன்களையும், சில ராசிக்காரர்கள் கெடு பலன்களையும் பெறலாம். இப்போது 2022 ஆம் ஆண்டில் இறுதி மாதத்தில் உள்ளோம். இந்த மாதத்தின் கடைசி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி சந்திரன் மீன ராசியில் இருப்பார்.

ஏற்கனவே மீன ராசியில் நவம்பர் 24 ஆம் தேதி முன் குரு வக்ர நிவர்த்தி அடைந்து பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் டிசம்பர் 31 ஆம் தேதி குரு, சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பதோடு, வாழ்வில் பல நற்பலன்களையும் பெறுவார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை காண்போம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜ யோகம் நற்பலனைத் தரும். ஏனெனில் இந்த யோகமானது 2 ஆவது வீட்டில் உருவாகிறது. இது செல்வம் மற்றும் பேச்சின் வீடாகும். எனவே இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு விரைவான நிதி ஆதாயம் கிடைக்கும். முதலீடுகள் நல்ல பலனைத் தரும். இக்காலத்தில் சிக்கியிருந்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். மீடியா, மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அசையா சொத்துக்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.

மிதுனம்
கஜகேசரி ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு நிதியில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். ஏனெனில் இந்த யோகம் மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் உருவாகவுள்ளது. இது வேலை இடத்தின் வீடாகும். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். சில புதிய பொறுப்புக்களும் கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சொத்து அல்லது வாகனம் வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அது நிறைவேறும் வாய்ப்புள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி ராஜயோகம் தொழில் மற்றும் வியாபாரத்தில் நற்பலனைத் தரும். ஏனென்றால் இந்த ராஜயோகம் ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் உருவாகவுள்ளது. இதனால் புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். இக்காலத்தில் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கிய பணம் இக்காலத்தில் மொத்தமாக கைக்கு வரும். இக்காலம் நல்ல லாபகரமானதாக இருக்கும். ஏதேனும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தால், இந்த யோகத்தால் நல்ல வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

கஜகேசரி ராஜயோகம் எம்மாதிரியான பலன்களைத் தரும்?
கஜ என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். வலிமைமிக்க இரண்டு விலங்குகளைக் கொண்டு உருவாகும் இந்த யோகமானது வலிமை, ஆற்றல் மற்றும் புத்திசாலித்தனத்தைக் குறிக்கிறது. ஒருவரது ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால், அவர் வலிமையானவராக இருப்பார் மற்றும் எதிரிகளை வீழ்த்தும் திறன் கொண்டவராக இருப்பார். மேலும் இவர்கள் பணியிடத்தில் உயர் பதவியை வகிப்பார்கள். நல்ல நிதி நன்மைகளுடன் இருப்பார்கள். மொத்தத்தில் கஜகேசரி ராஜயோகம் உள்ளவர்கள் செல்வம், ஞானம், சக்தி, புகழ் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications