Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
இந்த 8 உணவுகள் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு வாரி வழங்குமாம்... இதனால் உங்க தலையெழுத்தே மாறுமாம் தெரியுமா?
சில கலாச்சாரங்களின்படி, பருப்பின் வட்ட வடிவம் நிதி மகிழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றை உண்பதும் தானம் செய்வதும் நல்ல அதிர்ஷ்டத்தையும் நிதி நிலைத்தன்மையையும் தருவதாக நம்பப்படுகிறது.
நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உங்களிடம் கடின உழைப்பு இருந்தபோதிலும் எதுவுமே உங்களுக்கு சாதகமாக செயல்படவில்லை, வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை, நிம்மதி மற்றும் சந்தோஷம் இல்லை என்று. ஆம், எனில் உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாததுதான் காரணம். இப்படியெல்லாம் நடக்கும்போது, அதிர்ஷ்டத்தின் மீது நாம் குற்றம் சாட்டுகிறோம். அதிர்ஷ்டம் உங்கள் கடின உழைப்பை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறுவது உங்களுக்கு பழமையானதாகத் தோன்றலாம். ஆனால் பழமையின் மீது நம்பிக்கை கொண்ட விசுவாசிகள் இது விதியின் விளையாட்டு என்று நம்புகிறார்கள். சரி, நீங்களும் பழமைவாதத்தின் மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தால், உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றும் ஆற்றல் கொண்ட சில சுவாரஸ்யமான உணவுகளை நாங்கள் இங்கே பகிர்கிறோம்.

இது, சிலருக்கு முட்டாள்தனமாகத் தெரியலாம். ஆனால், இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உங்கள் வாழ்க்கையில் சேர்ப்பது மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நீண்ட காலமாக நம்பப்படுகிறது. அவை என்னென்ன என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

மாம்பழம்
மாம்பழம் லக்ஷ்மி தேவியுடன் தொடர்புடையது. அதனால்தான் இலைகள் மற்றும் பழங்கள் பெரும்பாலும் பிரசாதமாக அல்லது பூஜை கலசமாக பயன்படுத்தப்படுகின்றன. வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து மாம்பழம் சாப்பிடுவது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாகவும் நம்பப்படுகிறது. அதன் இனிப்புச் சுவையைப் போலவே, உங்கள் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். மாம்பழங்களைச் சாப்பிடுவது, பிரசாதம் செய்வது அல்லது மற்றவர்களுக்கு தானம் செய்வது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.

நெய்
நெய் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து புராணங்களின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. பழங்காலத்திலிருந்தே இது சடங்குகள், பூஜைகள், யாகம் மற்றும் நெய்யில் தீபம் ஏற்றுவது கூட செழிப்பைக் கொண்டுவருவதாகவும், வீட்டிலிருந்து எதிர்மறை ஆற்றல்களை விரட்டுவதாகவும் நம்பப்படுகிறது.

கிராம்பு
உங்கள் பையில் சில கிராம்புகளை வைத்திருப்பது அல்லது ஒரு விசேஷ பணிக்குச் செல்லும் போது அவற்றை மென்று சாப்பிடுவது அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. எனவே, இனிமேல் நீங்கள் எந்த நல்ல விஷயத்திற்கு சென்றாலும் சில கிராம்புகளை எடுத்துச் செல்லுங்கள். உதாரணமாக வேலை தேடி செல்லும்போது, பெண் பார்க்க மற்றும் வீடு வாங்க இதுபோன்ற வேலைகளுக்கு செல்லும்போது, கிராம்பு எடுத்துச் செல்வது நல்லது.

இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை ஒரு மாயாஜால மசாலாவாக நம்பப்படுகிறது. மேலும் இது பெரும்பாலும் நிதி ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதோடு தொடர்புடையது. உங்கள் பணப்பையில் இலவங்கப்பட்டையை வைத்திருப்பது தேவையற்ற செலவுகளைக் குறைக்க உதவும். மேலும், பண வரவை அதிகரிக்க உதவும்.

மிளகாய்
பல இந்திய கலாச்சாரங்களின்படி, சிவப்பு மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தீய கண் திருஷ்டி மற்றும் தீய சக்திகளின் விளைவுகளை அகற்ற பயன்படுத்தப்படுகிறது. மிளாகாய் மற்றும் எலுமிச்சையை அடிக்கடி நூலில் கட்டி வீட்டு வாசலுக்கு அருகில் வைப்பதற்கு இதுவே காரணம். மேலும், புதிதாக திருமணமானவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு என மிளகாயை சுற்றி தீயில் போட்டு திருஷ்டி கழிப்பார்கள்.

மீன்
மீன் உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் பல இந்திய கலாச்சாரங்களில் மீன் சாப்பிடுவது அல்லது வழங்குவது செழிப்பையும் மகிழ்ச்சியையும் தருவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக பெங்காலி கலாச்சாரத்தின்படி, திருமணத்தின் போது மீன் பரிசளிக்கப்படுகிறது. திருமண சீரின் போது மீன் வழங்குவது மகிழ்ச்சியையும் திருமண மனநிறைவையும் தருவதாக நம்பப்படுகிறது.

பருப்பு
சில கலாச்சாரங்களின்படி, பருப்பின் வட்ட வடிவம் நிதி மகிழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றை உண்பதும் தானம் செய்வதும் நல்ல அதிர்ஷ்டத்தையும் நிதி நிலைத்தன்மையையும் தருவதாக நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications