Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
நீங்கள் அடிக்கடி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்கள் உடலில் வினோத மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா?
நமது உடலின் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான உணவுகள் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் ஆரோக்கியமான உணவுகளாக மாறிவிடாது.
நமது உடலின் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான உணவுகள் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் ஆரோக்கியமான உணவுகளாக மாறிவிடாது. ஏனெனில் ஒவ்வொரு உணவுக்கும் சில பக்கவிளைவுகள் இருக்கும். அவை நமது உடலில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அவை பாதுகாப்பானதா? இல்லையா? என்பதை கூறமுடியும்.

நாம் சாப்பிடும் சில ஆரோக்கிய உணவுகள் ஆபத்தில்லாத சில பாதிப்புகளை உண்டாக்கும், ஆனால் அந்த பாதிப்புகள் விநோதமானதாக இருக்கும். இந்த பதிவில் உங்களில் உடலில் வித்தியாசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆரோக்கியமான உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

அஸ்பார்கஸ்
அஸ்பார்கஸ் உங்கள் சிறுநீரில் வித்தியாசமான வாசனையை உண்டாக்கும். இந்த நிகழ்வுக்கு காரணம் இதிலிருக்கும் அஸ்பாரகூசிக் அமிலம் இருக்கும். உங்கள் உடல் இந்த காயை ஜீரணிக்கும் போது, இது அஸ்பாரகூசிக் அமிலத்தை சல்ப்யூரிக் அமிலமாக மாற்றுகிறது. இந்த அஸ்பாரகஸ் விளைவுகள் சிறுநீரின் வாசனைக்கு காரணமாக அமைகிறது. மேலும் இது கோடைகாலத்தில் மோசமானதாக மாறும்.

பீட்ரூட் மற்றும் பெர்ரி
உங்கள் சிறுநீரின் நிறம் மாறியிருப்பதை நீங்கள் உணர்ந்தால் அதற்கு நீங்கள் சாப்பிட்ட பொருள்தான் காரணமாக இருக்கலாம். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் படி பெர்ரிஸ் மற்றும் பீட்ரூட் போன்ற பொருட்கள் உங்கள் சிறுநீரை தற்காலிகமாக சிவப்பு நிறமாக மாற்றும். இது நீண்ட காலம் நீடித்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

கேரட்
இதில் பீட்டா கரோட்டின் என்னும் ஆரஞ்சு-சிவப்பு நிறமி அதிகமாக இருப்பதால் அதனை அதிகமாக சாப்பிடுவதால் கரோட்டினீமியா ஏற்படலாம், இது சருமத்திற்கு ஆரஞ்சு நிறத்தை ஏற்படுத்தும். உள்ளங்கைகள், பாதங்கள் மற்றும் உங்கள் முகத்தின் சிரிப்பு கோடுகள் ஆகியவற்றில் இது வெளிப்படையாகத் தெரியும். ஆனால் இது மிகவும் பொதுவானதல்ல. உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கிறதா என்று பார்க்க தினமும் பத்து கேரட் வீதம் தினமும் சாப்பிட வேண்டும்.

செயற்கை சாயங்கள்
செயற்கை சாயங்கள் சேர்க்கப்பட்ட உணவை நீங்கள் அதிகம் சாப்பிடும்போது அது உங்கள் மலத்தின் நிறத்தை மாற்றும். ஐசிங், ஜெல்-ஓ, கம் மற்றும் பிற மிட்டாய்கள் போன்ற உணவுகள் பெரும்பாலும் இந்த விளைவைக் கொண்டிருக்கின்றன.

வாழைப்பழம்
உங்கள் உடலில் வீக்கம் ஏற்பட்டால் காலை நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளவும். தினமும் வாழைப்பழம் சாப்பிடும் பெண்கள் வெறுமனே தண்ணீர் குடிக்கும் பெண்களை விட குறைவாக வீக்கத்தை உணர்வதாக ஆய்வுகள் கூறுகிறது. இது சோடியத்தை சமப்படுத்தவும், தண்ணீர் குறைவதையும் தடுக்க உதவுகிறது.

தூக்கத்தை ஏற்படுத்தும் உணவுகள்
வான்கோழியில் உங்களுக்கு அதிக தூக்கத்தை ஏற்படுத்தும் பொருட்கள் உள்ளது. ஆனால் வான்கோழியை விட விட மயக்கத்தை ஏற்படுத்தும் அமினோ அமிலம் இன்னும் அதிகமான டிரிப்டோபான் உள்ளது. பாதாம், பீன்ஸ், கொழுப்பு நிறைந்த மீன் போன்றவற்றில் தூக்கத்தை ஏற்படுத்தும் பொருட்கள் அதிகமுள்ளது.

டார்க் சாக்லேட்
சாக்லேட் சாப்பிட இந்த காரணத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கார்டிசோல் ஹார்மோனைக் குறைப்பதன் மூலம் இருண்ட வகைகள் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது உங்களின் நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமிலம் நிறைந்த பழங்கள்
நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க விரும்புகிறீர்களா? அதற்கு நீங்கள் சாப்பிடும் அமிலம் நிறைந்த பழங்கள்தான் முக்கிய காரணம். ஆரஞ்சு, திராட்சைப்பழம் அன்னாசிப்பழம் மற்றும் தக்காளி போன்ற சிட்ரஸ் பழங்கள் அதிக அமிலத்தன்மை கொண்டவை. இது உங்கள் சிறுநீர்ப்பையை எரிச்சலடையச் செய்யும். இது உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வைத் தூண்டும்.

சுவிங்கம்
சுவிங்கம் மென்ற பிறகு உங்கள் வயிற்றில் வாயு அதிகரித்தது போல உணருகிறீர்களா? இது உங்கள் மூளையால் அல்ல, சுவிங்கம் மெல்லுவது காற்றை விழுங்குவதற்கு வழிவகுக்கிறது, இதனால் வாயு மற்றும் வீக்கங்கள் ஏற்படலாம்.



Click it and Unblock the Notifications