For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலிசபெத் ராணி நம்ம சாப்பிடற இந்த 9 உணவுகளை சாப்பிட்டதே இல்லையாம்... தொடவே மாட்டாங்களாம்...

By Mahibala
|

சாதாரண மக்கள் என்ன சாப்பிடுவார்கள் என்று வேண்டுமானால் அரச குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்குமே ஒழிய அது எப்படி இருக்கும், என்ன சுவை என்று கூட தெரியாது. அதேபோலத்தான் ராஜ பரம்பரையினர் என்ன சாப்பிடுவார்கள் என்று ஆச்சர்யமும் அடைவோம்.

Queen Elizabeth II

ராணி எலிசபெத் என்ன சாப்பிடுவார் என்று தெரிந்து கொள்வதும் முக்கியம் என்றாலும் அவர் நாம் வழக்கமாக சாப்பிடும் எந்த உணவை கையிலே தொடமாட்டார் என்று தெரிந்து கொள்வது எப்படி இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழக்கமான உணவுகள்

வழக்கமான உணவுகள்

நாம் பொதுவாக சாப்பிடும் சில உணவுப் பொருள்கள், நாம் ஆரோக்கியம் என்று நினைக்கிற, நம்முடைய உணவில் தவிர்க்க முடியாத சில உணவுப் பொருள்களை எலிசபெத் ராணி இதுவரை சாப்பிட்டதே இல்லையாம். நம்ம சாப்பிடறதெல்லாம் அவங்க சாப்பிடுவாங்களா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இதெல்லமால் இல்லாமல் ஒரு சமையலா என்று நினைத்துப் பார்க்கும் அளவு அவருடைய டயட் இருந்திருக்கிறது. அது என்னவென்று இங்கு பார்க்கலாம்.

MOST READ: இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...

பாஸ்தா

பாஸ்தா

எப்போதெல்லாம் தன்னுடைய மதிய நேர உணவை தனியாக எலிசபெத் ராணி சாப்பிடுகிறாரோ அப்போது அவருக்கு வகைவகையான உணவெல்லாம் தேவைப்படாதாம். குறிப்பாக பாஸ்தா போன்ற ஸ்டார்ச் உணவுகளை சாப்பிடவே மாட்டாராம். ஏதேனும் சாலட், கிரில் செய்த மீன், சிக்கன் துண்டுகள் மற்றும் ஏதேனும் இரண்டு காய்கறி இதுபோன்று தான் சாப்பிடுவாராம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

எலிசபெத் ராணி வெறுமனே பிரட், பாஸ்தா போன்ற மாவுப்பொருள்களால் செய்யப்பட்ட ஸ்டார்ச் உணவுகளை மட்டும் ஒதுக்குவதில்லை. ஸ்டார்ச் இருக்கிறது என்பதால் உருளைக்கிழங்கும் அவர் உணவில் இருக்காதாம்.

இறைச்சி

இறைச்சி

வழக்கமாக நாம் சாப்பிடுகிற இறைச்சியைத் தாண்டி, மன்னர் பரம்பரையினர் மான், ஒட்டகம், முயல் இப்படி வகைவகையான இறைச்சியை ருசித்துப் பார்க்க வேண்டும் என்றும் இது அவர்களுடைய ராயல்டியையும் காட்டுவதாக உணர்வார்கள். ஆனால் அது சுத்தமாக எலிசபெத் ராணிக்குப் பிடிக்கவே பிடிக்காது. அந்த மாதிரி அரிய வகை இறைச்சியை இவர் சாப்பிட்டதே இல்லை.

முட்டை வெள்ளை

முட்டை வெள்ளை

முட்டை ஸ்ரேம்பல்டு எக் (பொரியல்) பற்றிய நன்மைகள், கிறிஸ்துமஸ் சமயங்களில் செய்யப்படுகிற சால்மன், ட்ரஃபிள் ஆகிய உணவுகளில் நிச்சயம் முட்டை சேர்க்கப்படும். அந்த உணவுகளைப் பார்த்தாலே எலிசபெத் ராணி தன்னுடைய மூக்கை மூடிக்கொள்வார். அதற்கான அவர் முட்டையே சாப்பிட மாட்டார் என்றில்லை. பிரௌன் எக் விரும்பி சாப்பிடுவார். அதில் ருசி அதிகம் என்றும் சொல்வார்.

MOST READ: உங்க மார்பு அளவை அதிகமாக்கணுமா?... இத மட்டும் தினமும் கொஞ்சநேரம் செய்ங்க...

வெங்காயம், பூண்டு

வெங்காயம், பூண்டு

வெங்காயமும் பூண்டும் அதிகமாகச் சேர்க்கப்பட்ட உணவு, அது எந்த உயர்தர உணவாக இருந்தாலும் அதை அவர் சாப்பிடவே மாட்டாராம்.

பிரெட்

பிரெட்

எலிசபெத்துக்கு டீயுடன் ரஸ்க் வைத்து சாப்பிட மிகவும் பிடிக்குமாம். ஆனால் ரஸ்க்கின் ஓரங்களில் இருக்கும் பிரௌன் கலர் க்ரஸ் பிடிக்காதாம். அதனால் அவர் டீ குடிக்கும்முன், ரஸ்க்கின் ஓரங்களில் இருக்கும் பிரட் க்ரஸ்டை வெட்டி பறவைகளுக்காக சேமித்து வைக்கச் சொல்வாராம்.

சீசன் இல்லாத பழங்கள்

சீசன் இல்லாத பழங்கள்

பொதுவாக மதிய உணவிற்கு பழங்கள், சாலட் சாப்பிடுவது வழக்கம். ஆனால் சீசன் இல்லாத ஹைப்ரிடு பழங்களை ஒரு போதும் ராணி சாப்பிடவே மாட்டார். ஸ்டிராபெர்ரி அவருக்கு மிகப் பிடிக்கும். ஸ்டிராபெர்ரி சீசன் இல்லாத சமயங்களில் கொடுத்தால் தொடக்கூட மாட்டார்.

முழு வாழைப்பழம்

முழு வாழைப்பழம்

முழு வாழைப்பழத்தை குரங்குகள் தான் கையில் எடுத்து உரித்து சாப்பிடும். ராயல் குடும்பத்தில் உள்ளவர்கள் அப்படி செய்ய மாட்டார்களாம். அதனால் பழத்தை கட் பண்ணி பௌலில் போட்டு ஃபோர்க் வைத்து தான் சாப்பிடுவார்களாம்.

MOST READ: வேண்டா வெறுப்பாக உறவில் ஈடுபடுகிறவர்களை எப்படி கண்டுபிடிப்பது? (ஆண்- பெண் இருவருக்கும்)

இனிப்பு சேர்த்த டீ

இனிப்பு சேர்த்த டீ

நுரையுடன் இருந்த பால் சேர்த்த டீ ராணிக்குப் பிடிக்கவே பிடிக்காதாம். அதிலும் சர்க்கரை சேர்க்காத பிளாக் மற்றும் க்ரீன் டீ தான் அவருடைய சாய்ஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Foods Queen Elizabeth II Would Never Eat

Elizabeth was born in London as the first child of the Duke and Duchess of York, later King George VI and Queen Elizabeth, and she was educated privately at home. Her father acceded to the throne on the abdication of his brother King Edward VIII in 1936, from which time she was the heir presumptive.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more