Latest Updates
-
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா?
கை விரல்களை வைத்தே ஒருவரின் எதிர்காலம், குணாதிசயத்தை தெரிஞ்சுக்கலாம்.. உங்களுக்கு எப்படின்னு பாருங்க..
சாமுத்ரிகா சாஸ்திரத்தில், ஒரு நபரின் உடலில் உள்ள உறுப்புக்களின் வடிவம், அளவு மற்றும் அமைப்புக்களின் அடிப்படையில் குணாதியங்கள் கூறப்படுகின்றன.

ஒருவரின் குணாதிசயங்களை பல வழிகளில் அறியலாம். அதில் ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் குணாதியமானது கிரகங்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்களைக் கொண்டு கூறப்படுகின்றன. அதேப் போல் சாமுத்ரிகா சாஸ்திரத்தில், ஒரு நபரின் உடலில் உள்ள உறுப்புக்களின் வடிவம், அளவு மற்றும் அமைப்புக்களின் அடிப்படையில் குணாதியங்கள் கூறப்படுகின்றன. உங்களுக்கு உங்களின் உடல் உறுப்புக்களின் வடிவம், அளவு மற்றும் அமைப்பைக் கொண்டு குணாதிசயங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே கை விரல்கள் ஒருவரின் குணாதியம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறது என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்களின் குணாதிசயம் சரியாக உள்ளதா என்பதை பாருங்கள்.

பெருவிரல்
சாமுத்திரிகா சாஸ்திரத்தின் படி, பெருவிரல் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேல் பகுதி, நடுப்பகுதி, கடைசிப்பகுதி, முதல் பகுதி நீளமாக இருந்தால், அந்நபர் இளம் வயதிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார். அதே சமயம் தொழிலில் தீவிரமாக இருப்பார் மற்றும் சொல்வதை செய்து காட்டுவார்.

நடுவிரல்
கையில் இருக்கும் மிகவும் நீளமான விரல் தான் நடுவிரல். சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, இது ஒருவரின் வேலை மற்றும் தொழிலைப் பற்றி கூறுகிறது. இந்த நடுவிரல் எவ்வளவு நீளமாக உள்ளதோ, அந்நபர் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெறுவார். ஒருவேளை இந்த விரல் மோதிர விரலுக்கு இணையாக இருந்தால், அந்நபர் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் மற்றும் அவருக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. முக்கியமாக இந்த விரலில் மச்சம் இருந்தால், அது அசுபமாக கருதப்படுகிறது.

ஆள்காட்டி விரல்
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, ஒருவரின் ஆள்காட்டி விரல் நீளமாகவும், நேராகவும் இருந்தால், அந்நபர் வாழ்வில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார். மேலும் இவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். அதோடு இத்தகையவர்கள் வாழ்வில் அனைத்து வகையான பொருள் இன்பங்களையும் பெற்றிருப்பார்கள். ஒருவேளை ஆள்காட்டி விரல், மோதிர விரலுக்கு சமமாக இருந்தால், அது அசுபமாக கருதப்படுகிறது மற்றும் இத்தகையவர்கள் மனதளவில் பலவீனமாக இருப்பார்களாம்.

சுண்டு விரல்
கையில் இருக்கும் மிகச்சிறிய விரல் தான் சுண்டு விரல். இந்த விரலில் ஒருவரின் பொருளாதார நிலையும், குடும்ப வாழ்க்கையும் தெரியும். இந்த சுண்டு விரல் நீளமாக இருந்தால், அந்நபர் தொலைநோக்கு பார்வை கொண்டவராக மற்றும் நல்ல தர்க்க திறன் கொண்டவராக இருப்பார். மேலும் இவர்கள் சமூகத்தில் தங்களுக்கு என்று தனி அடையாளத்தை உருவாக்குவார்கள்.

மோதிர விரல்
ஒருவரின் உணர்வுகள், ஆரோக்கியம் மற்றும் புகழ் ஆகியவற்றை பற்றி வெளிப்படுத்துவது தான் மோதிர விரல். சமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, மோதிர விரல் நீளமாக இருந்தால், அந்நபர் மிகவும் பிடிவாத குணமுள்ளவர்களாகவும், கோபக்காரர்களாகவும் இருப்பார்கள். இந்த விரல் மிதமான அளவில் இருந்தால் அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது மற்றும் இத்தகையவருக்கு அதிர்ஷ்டம் எப்போதும் சாதகாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications