Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
ஆகஸ்ட் மாதத்தில் வரும் இந்து பண்டிகைகள் என்னென்ன? எந்த பண்டிகைக்கு நீங்க விரதம் இருக்கணும் தெரியுமா?
ஆடி பதினெட்டு அன்று காவிரி, வைகை, தாமிரபரணி பாயும் நதிக்கரையோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி நம்மை வாழ வைக்கு ஜீவ நதிகளை வணங்கும் நன்னாள். ஆடிப்பெருக்கன்று புனித நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வ
பொதுவாக பண்டிகை என்றாலே நமக்கு மகிழ்ச்சிதான். ஏனெனில், பண்டிகை காலங்களில் உறவுகளோடு மகிழ்ச்சியாக இருப்பது என்பது அனைவருக்கும் பிடித்த விஷயம். மகிழ்ச்சியாக எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் பண்டிகைகள் மிகவும் கோலாகலமாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இறைவனை வழிபட்டு, இறைவனுக்கு உகந்த பொருட்களை வைத்து வணங்குவார்கள். மேலும், விரதம் மேற்கொண்டு வேண்டிய வழிபாடுகளை செய்வார்கள். இது இந்து மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

எனவே, ஆகஸ்ட் மாதத்தில் மக்கள் கொண்டாட பல்வேறு பண்டிகைகள் மற்றும் காரணங்கள் இருக்கும். ஹரியாலி தீஜ், நாக பஞ்சமி, ரக்ஷா பந்தன், கிருஷ்ண ஜன்மாஷ்டமி போன்றவை இந்த ஆண்டு ஆகஸ்டில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றன. ஆகஸ்ட் 2021 இல் பண்டிகை தேதிகளின் பட்டியலை அறிய இக்கட்டுரையை முழுவதுமாக படிக்கவும்.

ஆடி பெருக்கு - ஆகஸ்ட் 2
இந்துக்களின் பண்டிகைகளில் ஆடிப்பெருக்கு விழா முக்கியமான விழா. இதில் ஆடி 1, ஆடி பதினெட்டு அல்லது ஆடி பெருக்கு, ஆடி 28, ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி அமாவாசை, என ஆடி மாதத்தில் மட்டும் அதிக பண்டிகை நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி பெருக்கு என்பது ஆடி மாதத்தின் 18 வது நாளில் நீரின் உயிரை வளர்க்கும் பண்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு தமிழ் விழாவாகும். எனவே, மக்கள் நீர்நிலைகளை வழிபட்டு, ஆறு, குளம், ஏரி அல்லது கடற்கரையின் கரையில் அமர்ந்து உணவருந்துவார்கள்.

செல்வம் பெருகும்
ஆடி பதினெட்டு அன்று காவிரி, வைகை, தாமிரபரணி பாயும் நதிக்கரையோர மக்கள் ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி நம்மை வாழ வைக்கு ஜீவ நதிகளை வணங்கும் நன்னாள். ஆடிப்பெருக்கன்று புனித நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை

காமிகா ஏகாதசி - ஆகஸ்ட் 4
பகவான் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள், காமிகா ஏகாதசி. இது மிக முக்கியமான ஏகாதசிகளில் ஒன்றாகும். இந்த நாளில் ஒரு பக்தர் விஷ்ணுவுக்கு புனித துளசி இலைகளை வைத்து வணங்குவதன் மூலம் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம், ஒரு பக்தர் மோட்சத்தை அடைய முடியும்.

பிரதோஷ விரதம்- ஆகஸ்ட் 5 மற்றும் ஆகஸ்ட் 25
பிரதோஷ விரதம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் திரயோதசி திதியில் (சந்திர பதினைந்தின் பதிமூன்றாம் நாள்) ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடித்து, பிரதோஷ காலத்தின் போது (பூஜைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன் மற்றும் ஒன்றரை மணி நேரம் கழித்து) சிவ பூஜை செய்கின்றனர்.

மாத சிவராத்திரி - ஆகஸ்ட் 6
ஆகஸ்ட் 6 ஆம் தேதி பக்தர்கள் மாத சிவராத்திரியை கொண்டாடுவார்கள். இது சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது தெய்வங்களின் திருமண தேதி.

ஹரியாலி தீஜ் - ஆகஸ்ட் 11
சிவன் மற்றும் பார்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஹரியாலி தீஜ், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களால் கொண்டாடப்படுகிறது. சிறந்த ஆடைகளை அணிந்து, திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ய ஒரு நாள் விரதத்தை அனுசரிக்கிறார்கள்.

நாக பஞ்சமி - ஆகஸ்ட் 13
பக்தர்கள் பாம்புகளுக்கு பாலை வழங்கி நாக பஞ்சமி தினத்தில் வழிபடுகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் பாம்புகளின் கடவுளின் ஆசிகளைப் பெறுகிறார்கள். மேலும், நாக தோஷம் போன்ற பிரச்சனைகளும் இதனால் தீரும்.

துளசிதாஸ் ஜெயந்தி - ஆகஸ்ட் 15
ஸ்ரீராமரின் மிகப் பெரிய பக்தர்களில் ஒருவரான துளசிதாஸின் 524 வது பிறந்தநாள் சப்தமி திதியில் (ஏழாம் நாள்), ஷ்ரவன், சுக்ல பக்ஷத்தில் கொண்டாடப்படுகிறது. இது இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அனுசரிக்கப்படும். அவர் பல பாடல்களை எழுதினார், மற்றும் பட்டியலில் ராமசாரித்மனாக்கள் மற்றும் அனுமன் சாலிசா ஆகியவை அடங்கும்.

ஷ்ரவன் புத்ரதா ஏகாதசி - ஆகஸ்ட் 18
ஸ்ரீ விஷ்ணுவின் பக்தர்கள் இந்த ஏகாதசி திதியில் ஒரு நாள் விரதத்தை கடைப்பிடித்து அவருடைய ஆசீர்வாதம் பெறவும் மோட்சத்தை அடையவும் செய்வார்கள்.

வரலக்ஷ்மி விரதம் - ஆகஸ்ட் 20
தமிழ் பெண்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகை, வரலட்சுமி விரதம். இது ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும். இந்த நாளில், பெண்கள் தங்கள் குடும்பங்களின் நல்வாழ்வுக்காக விரதத்தை கடைப்பிடித்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

ஓணம் - ஆகஸ்ட் 21
ஓணம் கேரளாவின் மிகப்பெரிய பண்டிகை. கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. சிங்கம் மாதத்தில் திருவோணம் நட்சத்திரம் நிலவும் போது அனுசரிக்கப்படுகிறது. மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த நல்லாட்சி புரிந்த மன்னர் மகாபலி, விஷ்ணுவின் வாமன அவதாரத்தால் பாதள உலகிற்கு அனுப்பப்பட்டார். வருடத்திற்கு ஒருமுறை அவர் ராஜ்யத்திற்கு வருகை தருகிறார் என்று மக்கள் நம்புகிறார்கள்.

ரக்ஷா பந்தன், ஆவணி அவிட்டம் மற்றும் காயத்ரி ஜெயந்தி - ஆகஸ்ட் 22
ரக்ஷா பந்தன், ஆவணி அவிட்டம் (புனித நூல் மாற்றும் விழா), காயத்ரி தேவியின் பிறந்த நாள், மற்றும் ஹயக்ரீவ ஜெயந்தி போன்றவற்றை மக்கள் கொண்டாடுவதால், ஷ்ரவண மாதத்தில் பெளர்ணமி நாள் முக்கியமானது. இது சமஸ்கிருத திவாஸைக் குறிக்கும் நாளாகும்.

கஜாரி தீஜ் - ஆகஸ்ட் 25
கஜாரி தீஜ் திருமணமான பெண்கள் மற்றும் திருமணமாகாத பெண்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிவபெருமானும் அவரது துணைவியார் பார்வதியும் வணங்கப்படுகிறார்கள். பெண்கள் தங்கள் கணவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ய அல்லது ஒரு சிறந்த வாழ்க்கைத் துணையை விரும்புவதற்காக இந்த விழாவை கொண்டாடுகிறார்கள்.

ஹேரம்ப சங்கஷ்டி சதுர்த்தி - ஆகஸ்ட் 25
பத்ரபாத மாதம், கிருஷ்ண பக்ஷம், பூர்ணிமந்த் நாட்காட்டியின்படி வரும் சங்கஷ்டி சதுர்த்தி, ஹேரம்ப சங்கஷ்டி சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில், பக்தர்கள் விநாயகப் பெருமானை வணங்கி வழிபடுகின்றனர். சங்கஷ்டி என்றால் உண்மையில் விடுதலையாகும். இது மக்கள் பிரச்சனைகள் மற்றும் துயரங்களிலிருந்து விடுதலை அடைவார்கள் குறிக்கிறது.



Click it and Unblock the Notifications











