Latest Updates
-
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா?
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
உங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் பிப்ரவரி மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என கொடுக்கப்பட்டுள்ளன.

February Horoscope 2023: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் பிப்ரவரி மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் பிப்ரவரி மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என பிப்ரவரி மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2023 பிப்ரவரி மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதம் உங்களுக்கு பணம் சம்பாதிக்க பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும் பட்ஜெட் போட்டு செலவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதிக செலவுகள் ஏற்பட்டு, நிதி பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் இம்மாதம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். திடீர் பண ஆதாயத்திற்கு வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் உங்களின் கவலை அதிகரிக்கும். வியாபாரத்தில் பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் மாத இறுதியில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். காதலைப் பொறுத்தவரை, இந்த மாதம் சிறப்பாக இருக்கும். போட்டிக்கு தயாராகும் மாணவர்கள் இந்த மாதத்தில் நற்செய்திகளைப் பெறுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட வேலைகள் இம்மாதத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மாதத்தின் இரண்டாவது வாரத்தில் திடீரென்று பணம் உங்களைத் தேடி வரும். மொத்தத்தில், இந்த மாதத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் உங்களின் பொருளாதார நிலை ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். அதிக செலவுகளை சந்திப்பீர்கள். ஆனால் மாதத்தின் பிற்பகுதியில் நல்ல பண ஆதாயத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இருப்பினும் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமண பேச்சு வார்த்தைகள் வெற்றி பெறும். குடும்ப சூழல் சற்று டென்சன் நிறைந்திருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதமானது உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். தொழில் ரீதியாக சுமாராக இருக்கும். இம்மாதத்தில் பண பரிவர்த்தனைகளின் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த மாதத்தில் உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்காது. நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக உங்கள் பேச்சை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த பிப்ரவரி மாதத்தில் நீங்கள் தொழிலில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு இந்த மாதம் சராசரியாக இருக்கும். முக்கியமாக இந்த மாதத்தில் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தின் தொடக்கம் உங்களுக்கு சற்று மோசமாக இருக்கும். ஆனால் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு நற்பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவதோடு, முன்னேற்றத்தையும் காண்பார்கள். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்ட அறிவுறுத்தப்படுகிறது. திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடனான உறவு மோசமாக வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் உங்களின் பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இம்மாதம் லாபகரமானதாக இருக்கும். இம்மாதத்தில் லாபத்தை மட்டுமின்றி, நஷ்டத்தையும் சந்திக்க நேரிடும். மேலும் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இம்மாதம் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பண வரவு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உண்டு.

மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த மாதமானது தொழில் ரீதியாக ஏற்றஇறக்கம் நிறைந்ததாக இருக்கும். நல்ல பண ஆதாயம் கிடைத்தாலும், செலவுகளும் அதிகம் இருக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இம்மாதத்தில் பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இம்மாதம் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதமானது தொழில் ரீதியாக சற்று சவாலானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரம் கூட சற்று மோசமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்து இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களே! பிப்ரவரி மாதத்தில் நீங்கள் தொழிலில் சவால்களை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் இம்மாதத்தில் கடுமையான போட்டியை சந்திப்பார்கள். அதிக செலவுகள் காரணமாக இம்மாதத்தில் பணத்தை சேமிக்க முடியாமல் போகும். ஆரோக்கிய பிரச்சனைகள் தொந்தரவு செய்யும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இதனால் குடும்ப சூழல் சற்று அமைதியிழந்து இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











