Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
சிவபெருமானிடம் இருந்து அனைத்து செல்வங்களையும் பெற இந்த மலரை வைத்து வழிபடுங்கள் போதும்...!
அனைத்து கடவுள்களையும் போல சிவபெருமானுக்கும் மலர்கள் என்றால் பிடிக்கும். சிவபெருமானிற்கு வைத்து வழிபடும் ஒவ்வொரு மலருக்கும் ஒரு அர்த்தமும், பலனும் உள்ளது.
இந்து மதத்தின் முக்கியமான கடவுள் என்றால் அவர் சிவபெருமான்தான். பொதுவாக சிவபெருமான் லிங்க வடிவத்தில் வழிபடப்படுகிறார். சிவலிங்கத்தின் அமைப்பு என்பது படைப்பு மற்றும் அண்ட ஆற்றலைக் குறிக்கிறது. சிவலிங்க வழிபாடு சிவன் மற்றும் சக்தி-பார்வதியின் ஒன்றிணைப்பைக் குறிக்கிறது, இதன் விளைவாக பிரபஞ்சம் உருவாகிறது.

அனைத்து கடவுள்களையும் போல சிவபெருமானுக்கும் மலர்கள் என்றால் பிடிக்கும். சிவபெருமானிற்கு வைத்து வழிபடும் ஒவ்வொரு மலருக்கும் ஒரு அர்த்தமும், பலனும் உள்ளது. இந்த பதிவில் சிவபெருமானுக்கு எந்த மலரை வைத்து வழிபடுவது எந்தெந்த பலன்களை வழங்கும் என்று பார்க்கலாம்.

வில்வ இலைகள்
சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தது என்றால் அது இந்த முக்கோண வடிவ இலைதான். வில்வ இலைகள் இல்லாமல் செய்யப்படும் சிவ வழிபாடு என்பது பயனற்றது என்று சிவபுராணம் கூறுகிறது. இந்த வில்வ மரம் பிரம்மாவால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மரத்தை லட்சுமியின் வலது கரத்தில் இருந்து உருவாக்கியதாக கூறப்படுகிறது.

தும்பை பூ
சிவபெருமானை பிரார்த்திக்கப் பயன்படும் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உள்ளது. தும்பை பூவை வைத்து சிவபெருமானை வழிபடுவது உங்களுக்கு சிறப்பான பலன்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.

செம்பருத்தி பூ
ஆயிரம் செம்பருத்தி மலர்களால் ஆன மாலையை சிவபெருமானுக்கு வைத்து வழிபட்டால் அவர்கள் மரணத்திற்கு பிறகு கைலாயத்தில் வாழும் வாய்ப்பை பெறுவார்கள் பெறுவார்கள் என்று புராணம் கூறுகிறது. இந்த பூவை வைத்து வழிபடுபவர்கள் வாழும்போதே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது.

ரோஜா
சிவபெருமானை ரோஜா மலர்களை கொண்டு வழிபடுவது அது பத்து குதிரைகளை கொண்ட யாகத்தை செய்வதற்கு சமம் என்று புராணம் கூறுகிறது. எட்டு ரோஜா மலர்களை கொண்டு சிவபெருமானை வழிபடுபவர்கள் கைலாச பதவியை பெறுவார்கள்.

ஊமத்தம் மலர்
ஊமத்தம் மலர் என்பது சோலனேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வகையான விஷ வெஸ்பெர்டைன் பூக்கும் தாவரங்களின் ஒரு இனமாகும். இது பேய்களின் ஊதுகுழல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மலர்களை வைத்து வழிபடுவது சிவபெருமானின் ஆசீர்வாதத்தை பெற்றுத்தரும்.

எருக்கை
சிவபெருமானை எருக்கை மலர் கொண்டு வழிபடுபவர்கள் அவர்கள் செய்த பாலியல் குற்றங்களில் இருந்து மன்னிக்கப்படுவார்கள் என்று புராணங்கள் கூறுகிறது. உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதியாக செய்த பாவங்களும் இந்த மலரைக் கொண்டு சிவபெருமானை வழிபடும்போது மன்னிக்கப்படும்.

தாமரை
சிவபெருமானிடம் இருந்து செல்வத்தை பெற விரும்புபவர்கள் தாமரை மலரை வைத்து வழிபடலாம். வெள்ளை, பிங்க், நீலம் என பல மலர்களில் தாமரை இருக்கிறது. சிவபெருமானுக்கு வழிபடுவதற்கு நீல தாமரை மிகவும் உகந்ததாகும்.

அரளி பூ
சிவபெருமானுக்கு அரளி பூவை பக்தியுடன் வைத்து வழிபடுட்டால் நமது மனதில் இருக்கும் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இந்த பூவை வைத்து சிவனை வழிபடலாம். வெள்ளை அரளி மலரை வைத்து சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு அழகான மனைவி கிடைப்பார்கள்.



Click it and Unblock the Notifications
