For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூகுள்ள வேலைய விட்டுட்டு நாடு முழுக்க 93 ஏரிய தூர் வாரியிருக்காரு... நம்ம சென்னைப்பையன்

|

சுற்றுச்சூழலைப் பற்றி அக்கறை கொண்ட எவரும் அதை ஒரு சிறிய மற்றும் அர்த்தமுள்ள வழியில் பாதுகாக்க முடிந்தவரையில் தங்கள் முயற்சியைச் செய்கிறார்கள்.

அத்தகைய ஒரு உதாரணம், சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஒரு சுற்றுச்சூழல் இயக்கத்தைத் தொடங்கினார். இது 14 இந்திய மாநிலங்களில் குறைந்தது 93 நீர்நிலைகளை சுத்தம் செய்து மீட்டெடுத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூகிள் முன்னாள் ஊழியர்

கூகிள் முன்னாள் ஊழியர்

கூகிள் முன்னாள் ஊழியரான அருண், அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டு விட்டு, மீன், தவளைகள், பறவைகள் மற்றும் பசுமையுடன் கூடிய சுத்தமான ஏரிகளைக் காண சுற்றுச் சூழலைக் காப்பாற்றுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். நீர்நிலைகள் மீதான அவரது காதல், வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தொடங்கியது, ஏனெனில் அவர் நீர்நிலைகள் சுற்றியுள்ள ஒரு பகுதியில் வளர்ந்தார்.

MOST READ: பிரனாப் முகர்ஜிக்கு ஏன் பாரத ரத்னா கொடுத்தாங்க தெரியுமா?... இதோ அவரைப்பத்தி தெரிஞ்சிக்கங்க...

எங்கிருந்து தொடங்கியது?

எங்கிருந்து தொடங்கியது?

32 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் கூகிளில் தனது வசதியான வேலையை விட்டுவிட்டு, ஒரு தூய்மையான மற்றும் பசுமையான சூழலைக் காண விரும்பினார். எனவே, முதலில் சென்னை மற்றும் பின்னர் மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே, கோவை, ஹைதராபாத், பெங்களூரு, போன்ற பல நகரங்களிலும் நீர்நிலைகளை புதுப்பிக்க முயற்சிகளைத் தொடங்கினார்.

சுற்றுச்சூழல் இயக்கம்

சுற்றுச்சூழல் இயக்கம்

சமூகத்தால் வழி நடத்தப்படும் இந்த இயக்கம் மத்திய மற்றும் மாநில அரசுடன் நெருங்கிய செயல்பாட்டில் இருந்தபோதும் அவர்களுக்கு எந்த ஒரு நிதியும் வழங்கப்படவில்லை. பல்வேறு அனுமதி மற்றும் ஒப்புதல்களுக்கு அவர்கள் அரசாங்கத்தை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமை இருந்து வருகிறது. நீர்நிலைகளில் இருக்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதும் பல்வேறு நீர்நிலைகளின் அணைகளை வலிமைப்படுத்துவதும் இவர்களின் முக்கிய பணியாக உள்ளது.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இன்றைய நாட்களில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பதன் காரணமாக, அதிகமான மக்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த முயற்சியை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.

அருணின் ஏரி மறுசீரமைப்பு முயற்சிகள் அவருக்கு எண்டர்பிரைஸ் 2012 க்கான ரோலக்ஸ் விருதுகளைப் பெற்றுத் தந்தன, இது உலக வாழ்க்கையை மேம்படுத்தும், பெரிய சவால்களுக்கு தீர்வுகளை வழங்கும், அறிவை விரிவுபடுத்தும் அல்லது எதிர்கால தலைமுறையினருக்கான இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் புதுமையான திட்டங்களைக் கொண்ட தனிநபர்களுக்கு ஒரு உந்துதலாகவும் உதவியாகவும் உள்ளது.

MOST READ: செவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...

பெரும் ஆதரவு

பெரும் ஆதரவு

இவரது முயற்சிகளுக்கு தி இந்துஜா அறக்கட்டளை, ஸ்ரீராம் குழுமம், தி முருகப்பா குழு உள்ளிட்ட கூட்டாளர் அமைப்புகளும், மற்ற அமைப்புகளும் நிதி மற்றும் தன்னார்வலர்கள் மூலம் ஆதரவு தந்து வருகின்றன.

இந்த இயக்கம் தற்போது 39 திட்டங்களில் பணி புரிந்து வருகின்றது. மேலும் முழு நேர பணியாக மைசூரு, விஜயவாடா மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பணி தொடங்கவுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ex-Google Employee Arun Krishnamurthy Revives 93 Waterbodies Across 14 Indian States

One such example is of Chennai-based environmentalist Arun Krishnamurthy, who launched an eco-movement, which has cleaned and restored at least 93 freshwater bodies across 14 Indian states.
Story first published: Saturday, August 17, 2019, 13:50 [IST]