For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈத்-அல்-பித்ர் 2020: ஏன் மற்றும் எப்போது கொண்டாடப்படுகிறது?

ஈத்-அல்-பித்ர் ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. இது இஸ்லாமியர்களின் புனித மாதமாகும். இதன் போது இஸ்லாமியர்கள் சடங்கு விரதங்களை கடைப்பிடிக்கின்றனர்.

|

ஈத் என்பது உலகெங்கிலும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஈத்-அல்-பித்ர் மற்றும் பக்ரித் என இரண்டு வகையான ஈத் உள்ளன. அதில் ஈத்-அல்-பித்ர் புனித ரமலான் மாதத்திற்குப் பிறகு விழும். இந்த ஆண்டு, ஈத்-அல்-பித்ரின் தேதி 23 மே 2020 ஆகும் (சந்திர இயக்கத்தின் படி தேதி மாறுபடலாம்).

Eid-Ul-Fitr 2020: Date, Significance And Eid-Special Foods

ஈத்-அல்-பித்ர் கொண்டாட்டங்களின் போது பெரும்பாலும் ஷீர் குர்மா, குபானி கா மீதா மற்றும் கல்ஜா ஃபெனி போன்ற இனிப்பு வகைகள் உள்ளடங்கியிருப்பதால், ஈத்-அல்-பித்ர் 'மீதி ஈத்' என்றும் அழைக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து, பின் சுவையான ஈத் விருந்துக்குத் தயார் செய்கிறார்கள். இந்த விருந்தில் இனிப்பு பலகாரங்கள் மட்டுமின்றி பானங்களும் இடம் பெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈத்-அல்-பித்ர் 2020 தேதி

ஈத்-அல்-பித்ர் 2020 தேதி

ஷவ்வால் பிறை 22 ஆம் தேதி தென்படாததால், ஈத்-அல்-பித்ர் பண்டிகை மே 24 அன்று கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23 தான் ரமலான் மாதத்தின் கடைசி நாள் என கணிக்கப்பட்டிருப்பதால், இஸ்லாமிய மாதமான ஷவ்வால் மே 24 அன்று ஆரம்பமாகும். எனவே இந்த ஆண்டு ஈத்-அல்-பித்ர் பண்டிகை மே 23 முதல் தொடங்கி மே 24 வரை கொண்டாடப்படுகிறது.

ஈத்-அல்-பித்ரின் முக்கியத்துவம்

ஈத்-அல்-பித்ரின் முக்கியத்துவம்

ஈத்-அல்-பித்ர் ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. இது இஸ்லாமியர்களின் புனித மாதமாகும். இதன் போது இஸ்லாமியர்கள் சடங்கு விரதங்களை கடைப்பிடிக்கின்றனர். இஸ்லாமிய நாட்காட்டியின் படி, 10 ஆவது மாதமான ஷவ்வாலின் முதல் மூன்று நாட்களில் ஈத் கொண்டாடப்படுகிறது.

பரிசுகள் மற்றும் இனிப்புக்கள்

பரிசுகள் மற்றும் இனிப்புக்கள்

ஈத்-அல்-பித்ர் நாளில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதோடு, பரிசுகளையும், இனிப்புக்களையும் பரிமாறிக் கொள்கிறார்கள். சிறு குழந்தைகளுக்கு இந்நாளில் 'ஈடி' (பெரியவர்களிடமிருந்து அன்பின் அடையாளமாக சிறிய பரிசுகள்) வழங்கப்படுகிறது. இந்த அற்புதமான நாளில், பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து விழா போன்று சேர்ந்து கொண்டாடவும் முடிவு செய்வார்கள். ஆனால் தற்போது கொரோனா ஊரங்கால், ஒன்றுகூட முடியாது என்பதால், வீட்டிலேயே கொண்டாட வேண்டியுள்ளது.

ஈத்-அல்-பித்ரின் போது வீட்டில் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய பலகாரங்கள்

ஈத்-அல்-பித்ரின் போது வீட்டில் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய பலகாரங்கள்

ஈத் கொண்டாட்டங்கள், மற்ற எல்லா பண்டிகைகளையும் போலவே பலவிதமான இனிப்பு மற்றும் சுவையான உணவுகள் சமைத்து உண்டு கொண்டாடப்படுகிறது. ஈத் ஸ்பெஷலே பிரியாணி. இது ஒரு ஆரோக்கியமான இறைச்சி-அரிசி காம்போ ஆகும். இவை இரண்டையும் ஒன்றாக சமைக்கும் போது, அது சுவையான உணவாகிறது. மேலும் கலூட்டி, போட்டி மற்றும் சீக் கபாப் போன்ற அனைத்து வகையான கபாப் மற்றும் டிக்காக்களும் சமைக்கப்படும். அதோடு ஹலீம் - ஒரு இறைச்சி கஞ்சி, குருமா - ஒரு கெட்டியான இறைச்சி சார்ந்த குழம்பு போன்றவையும், ஈத் பண்டிகையின் ஸ்பெஷல் ரெசிபிக்களாகும்.

இது 'மீதி ஈத்' என்றும் அழைக்கப்படுவதால், இந்த பண்டிகையின் போது சேமியா, பால் புட்டிங், உலர் திராட்சை, பேரிச்சம் பழம் மற்றும் நட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் ஷீர் குர்மா முக்கிய இடம் பெறுகிறது. இது ஈத் பண்டிகையின் போது செய்யும் முக்கியமான ரெசிபிகளுள் ஒன்று. மேலும் ஈத்-அல்-பித்ர் கோடையின் உச்சத்தில் வருவதால், இஸ்லாமிய மக்கள் தங்கள் உணவை நிறைவு செய்வதற்கான ஒரு டம்ளர் ரோஸ் சர்பத் தயாரித்துக் குடிப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eid-Ul-Fitr 2020: Date, Significance And Eid-Special Foods

Eid-Ul-Fitr: On Eid, Muslims across the world offer their prayers to the almighty, and then prepare for a lavish Eid feast featuring scrumptious delicacies and drinks.
Desktop Bottom Promotion