For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனிமேல் வீட்ல துடைப்பத்தை இப்படி வெக்காதீங்க... இல்லன்னா அது பணப் பிரச்சனையை அதிகரிக்கும்...

துடைப்பத்தால் வீட்டை சுத்தம் செய்வது முதல் துடைப்பத்தை வைக்கும் முறை வரை சில விதிகள் பின்பற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால், லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

|

வீட்டை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஓரு பொருள் தான் துடைப்பம். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில் இதற்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அதே வேளையில், சுத்தம் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே துடைப்பமும் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாக கருதப்படுகிறது.

Dont Make These Mistakes While Sweeping According To Vastu

துடைப்பத்தால் வீட்டை சுத்தம் செய்வது முதல் துடைப்பத்தை வைக்கும் முறை வரை சில விதிகள் பின்பற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால், லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இம்மாதிரியான சூழ்நிலையில், வீட்டின் அழகு பாழாகி, பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை துடைப்பம் தொடர்பான சில வாஸ்து விதிகளை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரவு நேரத்தில் வீட்டை பெருக்காதீர்கள்

இரவு நேரத்தில் வீட்டை பெருக்காதீர்கள்

புராணங்களின் படி, இரவு நேரத்தில் வீட்டைப் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வது நல்லதல்ல என்று கருதப்படுகிறது. இது தவிர, வீட்டில் இருந்து ஒருவர் வெளியே சென்ற உடனேயே வீட்டை பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், அவர் சென்ற பிறது ஒரு மணிநேரம் காத்திருந்து பின் வீட்டை பெருக்க வேண்டும்.

துடைப்பத்தை மிதிக்காதீர்கள்

துடைப்பத்தை மிதிக்காதீர்கள்

துடைப்பம் லட்சுமி தேவியின் விருப்பமான ஒன்றாக கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், துடைப்பத்தின் மீது கால் வைத்தால், செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி கோபப்படலாம். வாஸ்துப்படி, துடைப்பத்திற்கு மரியாதை செய்வது லட்சுமி தேவியை மகிழ்விக்கும். இதனுடன், அத்தகைய வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைத்திருக்கும்.

தலைகீழாக துடைப்பம் பிடிப்பதைத் தவிர்க்கவும்

தலைகீழாக துடைப்பம் பிடிப்பதைத் தவிர்க்கவும்

பெரும்பாலும் வீட்டை துடைப்பத்தால் சுத்தம் செய்த பின்னர், பலர் அதை அவசரமாக தலைகீழாக வைப்பார்கள். ஆனால் இப்படி வைப்பது வீட்டில் முரண்பாடு அதிகரிக்கும் வாய்ப்புக்களை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில் வீட்டில் டென்சனும் அதிகரிக்கும். எனவே எப்போதும் துடைப்பத்தை சரியான இடத்தில் நேராக வையுங்கள். இது தவிர துடைப்பத்தை நிற்க வைத்தால், வீட்டில் எதிர்மறையான விளைவை அதிகரிக்கும். எனவே எப்போதும் துடைப்பத்தை கால் படாத இடத்தில் படுக்க வையுங்கள்.

வீட்டிற்கு வெளியே துடைப்பத்தை வைப்பது நல்லதல்ல

வீட்டிற்கு வெளியே துடைப்பத்தை வைப்பது நல்லதல்ல

எப்போதும் வீட்டிற்கு வெளியே அல்லது மொட்டை மாடியில் விளக்குமாறு வைப்பதைத் தவிர்த்திடுங்கள். வாஸ்து படி, இதை செய்வதால் வீட்டில் திருட்டு ஆபத்து அதிகம் ஏற்படும்.

துடைப்பத்தை மறைத்து வைக்கவும்

துடைப்பத்தை மறைத்து வைக்கவும்

வாஸ்துப்படி, துடைப்பம் வீட்டின் செழிப்பின் அடையாளமாகும். எனவே இதை எப்போதும் மறைத்து வைக்க வேண்டும். உங்கள் வீட்டிற்கு வரும் யாரும் உங்கள் வீட்டில் உள்ள துடைப்பத்தைப் பார்ப்பது கெட்டதாக கருதப்படுகிறது.

குழந்தைகள் வீட்டைப் பெருக்குவது நல்லது

குழந்தைகள் வீட்டைப் பெருக்குவது நல்லது

உங்கள் வீட்டில் உள்ள குழந்தை திடீரென்று துடைப்பத்தால் வீட்டைப் பெருக்கினால், வீட்டிற்கு விருந்தினர்கள் வரப் போவதைக் குறிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சில நல்ல செய்திகளையும் பெறலாம்.

புது வீட்டிற்கு புதிய துடைப்பத்தை கொண்டு செல்லுங்கள்

புது வீட்டிற்கு புதிய துடைப்பத்தை கொண்டு செல்லுங்கள்

பெரும்பாலான மக்கள் புதிய வீட்டிற்கு மாறும் போது, பழைய துடைப்பத்தையும் மீதமுள்ள பொருட்களையும் கொண்டு செல்வார்கள். ஆனால் அது நல்லதல்ல. இம்மாதிரியான சூழ்நிலையில், நீங்கள் புதிய வீட்டிற்கு செல்கிறீர்கள் என்றால், பழைய துடைப்பத்தை எடுத்துச் சென்று பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.

கனவில் துடைப்பத்தைப் பார்ப்பது

கனவில் துடைப்பத்தைப் பார்ப்பது

உங்கள் கனவில் ஒரு புதிய துடைப்பத்தைப் பார்த்தால், அது நல்லதாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, இது ஒரு நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளம். இத்தகைய சூழ்நிலையில் வீட்டில் சந்தோஷம், செழிப்பு போன்றவை நிறைந்து இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Don't Make These Mistakes While Sweeping According To Vastu

Here are some common mistakes you are doing while sweeping. Read on...
Desktop Bottom Promotion