Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
வாஸ்துப்படி காதலர் தினத்தன்று இந்த பொருட்களை உங்க லவ்வருக்கு கொடுத்துடாதீங்க... இல்ல பிரேக்கப் ஆயிடும்...
வாஸ்து சாஸ்திரத்தின் படி காதலர் தினத்தன்று எந்த பொருட்களை லவ்வருக்கு பரிசாக கொடுக்கக்கூடாது என்பதைக் காண்போம். அதைப் படித்து அவற்றை உங்கள் காதலருக்கு கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.
காதலர் தினம் வரப்போகிறது. காதலிப்பவர்கள் அனைவரும் பிப்ரவரி மாதம் வந்துவிட்டால், காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக காதலர் தினத்தன்று தங்கள் லவ்வருக்கு பலவிதமான பரிசுகளை வழங்கி ஆச்சரியப்படுத்த நினைப்பார்கள். அதற்காக பல நாட்கள் திட்டம் போட்டும் இருப்பார்கள்.

நீங்கள் உங்கள் காதலருக்கு பரிசுகளை வழங்க நினைத்தால், காதல் வாழ்க்கை நீண்ட நாட்கள் சிறப்பாக இருக்க, வாஸ்துப்படி ஒருசில பொருட்களை பரிசாக வழங்கக்கூடாது. அந்த பொருட்கள் என்னவென்பதை அறிந்து, அவற்றை தவிர்ப்பதே நல்லது. இல்லாவிட்டால், அது காதலர்களுக்கு இடையே பிரச்சனைகளை அதிகரித்து, உறவில் கசப்பை உண்டாக்கி, பிரிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இப்போது வாஸ்து சாஸ்திரத்தின் படி காதலர் தினத்தன்று எந்த பொருட்களை லவ்வருக்கு பரிசாக கொடுக்கக்கூடாது என்பதைக் காண்போம். அதைப் படித்து அவற்றை உங்கள் காதலருக்கு கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

பேனா, கைக்குட்டை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, பேனா மற்றும் கைக்குட்டையை ஒருவருக்கு எப்போதும் பரிசாக கொடுக்கக்கூடாது. அப்படி கொடுத்தால், அது அதை கொடுப்பவர் மற்றும் பெறுவர் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் பரிசாக பெற்ற அந்த பேனாவை தொழிலில் பயன்படுத்தினால், அது நஷ்டத்தை அல்லது தோல்வியை சந்திக்க வைக்கும். மேலும் அது இருவருக்கு இடையேயான உறவுகளில் கசப்பை ஏற்படுத்தி, பிரிவை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.

வாட்ச்
பெரும்பாலானோர் ஒருவருக்கு பரிசளிக்க ஏற்ற பொருளாக வாட்ச்சை நினைப்பார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, வாட்ச்சை ஒருவருக்கு பரிசளிப்பது நல்லதல்ல. ஒருவேளை வாட்ச்சை பரிசளித்தால், அது ஒருவரது முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. எனவே வாட்ச்சை பரிசாக வழங்காதீர்கள்.

கருப்பு நிற ஆடைகள்
நிறைய பேருக்கு கருப்பு மிகவும் பிடித்த நிறமாக இருப்பதோடு, எந்நேரமும் கருப்பு நிற ஆடைகளை அணிவார்கள். ஆனால் இந்து மதத்தில் கருப்பு நிறம் ஒரு மங்களகரமற்றதாக கருதப்படுகிறது. எனவே யாருக்கும் எப்போதும் கருப்பு நிற ஆடைகளை மட்டும் பரிசாக கொடுக்கக்கூடாது. அப்படி யாராவது இந்த கருப்பு நிற ஆடைகளை பரிசாக வழங்கினால், அதை பெறுபவர் நிறைய சிரமங்கள் மற்றும் துன்பங்களை சந்திக்க நேரிடும்.

பர்ஃப்யூம்
வாட்ச்சிற்கு அடுத்தபடியாக நிறைய பேர் பரிசளிக்க சிறந்த பொருளாக நினைப்பது பர்ஃப்யூம் தான். ஆனால் வாஸ்துப்படி இவற்றை ஒருவருக்கு பரிசளிக்கக்கூடாது. அவ்வாறு செய்தால், அது அந்த உறவில் பிரச்சனைகளை அதிகரித்து, ஒரு கட்டத்தில் பிரிவையே ஏற்படுத்திவிடும்.

காலணிகள்
உங்கள் காதலருக்கு காலணிகள் மிகவும் பிடித்ததாக இருக்கலாம். நீண்ட நாட்களாக அவர் ஒரு காலணியை வாங்க ஆசைப்பட்டிருக்கலாம். அந்த காலணியை நீங்கள் காதலர் தினத்தன்று வாங்கி பரிசாக கொடுத்து ஆச்சரியமளிக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் வாஸ்துப்படி, காலணிகளானது பிரிவின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே நீங்கள் காலணியை வாங்கி கொடுத்தால், அது உங்கள் இருவருக்கும் பிரிவினையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications