Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூரின் அதிரடி விளக்கம்! -
உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க -
2 ஆண்டுகள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
தீபாவளி அன்று நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்களுக்கு லக்ஷ்மியின் சாபத்தை பெற்றுத்தருமாம் தெரியுமா
தீபாவளி சமயத்தில் நீங்கள் செய்ய வேண்டிய செயல்கள் போலவே செய்யக்கூடாத செயல்கள் என்று சில உள்ளது. இந்த செயல்கள் புனிதமற்ற செயல்களாக கருதப்படுகிறது.
இந்தியாவில் பெரும்பாலான மக்களால் விரும்பப்பட்டு கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது தீபாவளிதான். தீபாவளி அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை கொண்டுவரக்கூடிய ஒன்றாகும். லக்ஷ்மி தேவியை உங்கள் வீட்டுக்கு அழைக்கும் விழாவாக தீபாவளி இருக்கிறது. எனவே தீபாவளி அன்று நீங்கள் செய்யும் சரியான செயல்கள் உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்தும்.

தீபாவளி சமயத்தில் நீங்கள் செய்ய வேண்டிய செயல்கள் போலவே செய்யக்கூடாத செயல்கள் என்று சில உள்ளது. இந்த செயல்கள் புனிதமற்ற செயல்களாக கருதப்படுகிறது. தீபாவளி நெருங்கிவிட்ட இந்த சமயத்தில் நீங்கள் செய்யக்கூடாத செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

தாமதமாக எழக்கூடாது
நீங்கள் தினமும் காலையில் சீக்கிரம் எழ வேண்டியது நல்லது என்றாலும், தீபாவளி அன்று காலையில் சீக்கிரம் எழ வேண்டியது அவசியமாகும். சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து விடுவது நல்லது. தீபாவளி அன்று நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு லக்ஷ்மியின் அருள் கண்டிப்பாக கிடைக்காது.

பெரியவர்களை அவமதிக்கக் கூடாது
பொதுவாகவே பெரியவர்களை அவமதிப்பது தவறான செயலாகும். தீபாவளியன்று இதனை செய்வது அதனால் கிடைக்கும் மோசமான பலன்களை அதிகரிக்கும். எனவே உங்கள் குடும்பத்தாரிடமும், பெரியவர்களிடமும் தீபாவளி அன்று மரியாதையாக நடந்து கொள்வது நல்லது. அவர்களுக்காக ஏதாவது சிறப்பாக செய்ய முயற்சியுங்கள்.

வீட்டை அசுத்தமாக வைத்திருக்காதீர்கள்இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தீபாவளி சமயத்தில் உங்கள் இல்லத்தை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க முயலுங்கள். குறிப்பாக வீட்டில் குப்பைகள் இல்லாமல் நல்ல வாசனையுடன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். MOST READ: இராமருக்கே சாபம் கொடுத்த பெண் யார் தெரியுமா? அதனால் இராமர் இழந்தது என்ன தெரியுமா? https://tamil.boldsky.com/insync/pulse/curses-from-ramayana-and-mahabharata-that-no-one-knows-about-026532.html
இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தீபாவளி சமயத்தில் உங்கள் இல்லத்தை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க முயலுங்கள். குறிப்பாக வீட்டில் குப்பைகள் இல்லாமல் நல்ல வாசனையுடன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கோபப்படக்கூடாது
தீபாவளி என்று கோபப்படுவது, கூச்சலிடுவது போன்றவை மிகவும் தவறான மற்றும் புனிதமற்ற செயலாகும். தீபாவளியன்று உங்கள் மனநிலையை நீங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதை உறுதிசெய்து, உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும் அன்பாக பழகுவது நல்லது.

மாலையில் தூங்கக்கூடாது
நீங்கள் நோய்வாய்பட்டிருந்தாலோ அல்லது கர்ப்பிணியாகவோ இல்லாத பட்சத்தில் மாலையில் தூங்குவதைத் தவிர்க்கவும். மதிய நேரத்தில் தூங்குவது சரிதான் ஆனால் மாலை நேரத்தில் தூங்குவது வறுமை மற்றும் துயரத்திற்கு வழிவகுக்கும்.

சண்டைகளில் ஈடுபடக்கூடாது
தீபாவளி அன்று உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நீங்கள் சண்டையிட வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - நீங்கள் வீட்டில் ஒரு நேர்மறையான சூழ்நிலையைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், எல்லோரும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். அதுதான் உங்கள் வீட்டிற்கு லக்ஷ்மி தேவியை அழைத்து வரும்.

போதை பொருட்கள்
தீபாவளி அன்று புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இது லக்ஷ்மி தேவியை மிகவும் கோபப்படுத்தும் செயலாகும். இது லக்ஷ்மி தேவியின் சாபத்தை உங்களுக்கு பெற்றுத்தரும்.



Click it and Unblock the Notifications