Latest Updates
-
சாணக்கியர் கூறும் வெற்றிக்கான 5 அடிப்படை ரகசியங்கள் - இதை பாலோ பண்றவங்க பெரிய ஆளா வருவார்களாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: ஜூன் கடைசி இந்த 4 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. -
செட்டிநாடு கார குழிப்பணியாரமும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா?
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் கண்டிப்பாக வைரம் அணியக்கூடாது... இல்லனா ஆபத்துதான்...!
பூமியில் இருக்கும் மிக விலையுயர்ந்த கற்களில் வைரம் மிகவும் முக்கியமானதாகும். ஆனால் வைரத்தை அனைவரும் அணியலாமா என்பது இன்றும் சந்தேகத்திற்கு உரிய கேள்வியாகத்தான் இருக்கிறது.
இரத்தின கற்கள் தொடர்பான மூட நம்பிக்கைகள் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இந்த மூட நம்பிக்கைகள் ஒவ்வொரு நாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாறுபடும். அதன்படி வைரக்கற்கள் தொடர்பான மூடநம்பிக்கைகளும் நமது நாட்டில் அதிகம் நிலவுகிறது. வைரம் அணிவது என்பது பலரின் கனவாக இருக்கிறது.

பூமியில் இருக்கும் மிக விலையுயர்ந்த கற்களில் வைரம் மிகவும் முக்கியமானதாகும். வைரத்தில் பரிசு வேண்டும் என்று எதிர்பார்க்காத பெண்கள் எவருமில்லை. ஆனால் வைரத்தை அனைவரும் அணியலாமா என்பது இன்றும் சந்தேகத்திற்கு உரிய கேள்வியாகத்தான் இருக்கிறது. இந்த பதிவில் இந்த கேள்விக்கான பதிலை பார்க்கலாம்.

வைரத்துடன் தொடர்புடைய நம்பிக்கைகள்
வைரங்கள் பாரம்பரியமாக நிச்சயதார்த்தம் மற்றும் திருமண மோதிரங்களில் பயன்படுத்தப்படுகிது. இவை ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாசத்தை அடையாளப்படுத்துவதாகவும், ஒரு ஆணில் தைரியத்தையும் ஒரு பெண்ணில் பெருமையையும் தூண்டுவதாகவும் கூறப்படுகிறது. தலையணைக்கு அடியில் வைக்கப்பட்டுள்ள ஒரு வைரமானது துரோகம் செய்யும் மனைவியைக் காட்டிக் கொடுக்கும் என்றும் நம்பப்படுகிறது.

வைரங்கள் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்
ஜோதிடத்தின் படி வைரம் உங்கள் ராசிக்கு பொருத்தமாக இருந்தால் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும். அனைவருக்கும் வைரம் பொருந்தும் என்று கூற முடியாது, ஏனெனில் வைரம் அணிந்த பின் சிலர் பல துன்பங்களை அனுபவிப்பார்கள். திருமண தோல்வி, தொழில் நஷ்டம், குடும்பத்தில் விரிசல், ஆரோக்கிய கோளாறு என பல பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது.

வைர ஜோதிடம்
வைரத்துடன் தொடர்புடைய கிரகம் சுக்கிரன் ஆகும். சூரியன் மற்றும் சந்திரனுக்கு பிறகு வானில் அதிக ஒளிவீசக்கூடிய கிரகம் இதுதான். எனவே இயற்கையாகவே நேர்மறை ஆற்றலை பரப்பும் குணம் கொண்டது.

சுக்கிரனின் ராசிக்கல் வைரம்
ஜோதிடம் சுக்கிரனுக்கு பல பண்புகளை அளிக்கிறது. அழகான, ஆடம்பரமான அனைத்தையும் சுக்கிரன் ஆளுகிறார். லை மற்றும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுவோரின் வாழ்க்கையையும் இது கட்டுப்படுத்துகிறது. இந்த காரணத்தினால் வைரம் சுக்கிரனைக் குறிக்கிறது, வைரத்தை அணிவது உங்கள் விதியைக் கட்டுப்படுத்த உதவும்.

வைரத்தின் ராசிகள்
சில ராசிக்காரர்கள் வைரத்தை அணிவது அவர்களுக்கு ஆபத்துகளை உண்டாக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன்படி மேஷம், விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்கள் வைரம் அணிவதை தவிர்க்க வேண்டும். இவர்கள் வைரம் அணிவது அவர்களின் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தையும், குழப்பங்களையும் உண்டாக்கும்.

யாரெல்லாம் வைரம் அணியலாம்?
கன்னி மற்றும் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இது மிகவும் அதிர்ஷ்டமான இரத்தினக் கல் ஆகும். இது அவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் ஏற்படுத்தும். மற்ற ராசிக்காரர்கள் சில நிபந்தைகளின் கீழ் வைரத்தை அணியலாம்.

வைரங்களுடன் தொடர்புடைய பண்புகள்
தாழ்வு மனப்பான்மையை அகற்ற வைரங்களுக்கு சக்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்ற படைப்பாளிகளுக்கு இது சிறந்த இரத்தினைக் கல்லாகும். இரத்தினக் கற்களின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்வைரம் எதிர்மறை ஆற்றலை விரட்டவும், நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும் என்று கூறுகிறார்கள்.

வைரம் அணியலாமா?
வைரமானது விலைமதிப்பற்ற கற்களில் ஒன்றாகும், இது உங்களுக்கு பொருத்தமாக இருந்தால், உங்களுக்கு ஆடம்பரமான வாழ்க்கை, ஆரோக்கியமான உடல், கவர்ச்சிகரமான கண்கள் மற்றும் உங்கள் ஹார்மோன் அமைப்பை சமநிலைப்படுத்துவதன் மூலம் உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும். இது உங்கள் ராசிப்படி பொருத்தமில்லாத கல்லாக இருந்தால் இது நிறைய சிக்கல்களைக் கொண்டு வரும். இது உங்கள் உடலில் கொழுப்பைஅதிகரிக்கும், உங்களுக்குள் கோப உணர்வைத் தூண்டும், உங்கள் நண்பர்களை உங்களிடம் இருந்து பிரிக்கும், விபத்துக்களைக் கூட ஏற்படுத்தும்.

வைரத்தின் குணப்படுத்தும் சக்தி
பாலியல் குறைபாடுகள், ஆண்மைக்குறைவு, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவது போன்ற பிரச்சினைகளை வைரம் குணப்படுத்துகிறது. சுக்கிரனால் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க தரமான வைரங்களை அணியவும்.

பொதுவான ஜோதிட விதிகள்
நீங்கள் 6, 15, மற்றும் 24 ஆம் தேதிகளில் பிறந்திருந்தால், எண் 6 ஆல் நிர்வகிக்கப்படுகிறீர்கள் என்றால், உங்கள் ராசி அடையாளத்திற்கான அதிர்ஷ்ட கல் வைரம் ஆகும். வைர என்பது ஏப்ரல் மாதத்தின் பிறப்புக்கல் ஆகும். ரிஷபம் மற்றும் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு வைரம் அதிர்ஷ்டத்தைத் தருகிறது.



Click it and Unblock the Notifications