Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்க வாழ்க்கையில் பிரச்சனை அதிகம் இருக்கா? அப்ப செவ்வாய்கிழமை இத செய்யுங்க...
செவ்வாய்க்கிழமை செவ்வாய் கிரகத்துடன் நேரடி தொடர்புடையது. எனவே செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் பரிகாரம் செய்வது நல்லது.
சாஸ்திரங்களின் படி, செவ்வாய்க்கிழமை அனுமனுக்குரிய நாளாகம். இந்நாளில் அனுமனை வழிபட்டால், அவரின் ஆசியைப் பெறலாம். சனாதன தர்மத்தில், செவ்வாய் புனிதமானதாகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. இந்த செவ்வாய் கிழமைகளில் அனுமனை வழிபடுபவர்களின் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, அவர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

மேலும் செவ்வாய்க்கிழமை செவ்வாய் கிரகத்துடன் நேரடி தொடர்புடையது. எனவே செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் பரிகாரம் செய்வது நல்லது. இதனால் வாழ்வில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதோடு, மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். இப்போது செவ்வாய்க்கிழமைகளில் செய்ய வேண்டிய சில பரிகாரங்களைக் காண்போம்.

கடன் பிரச்சனையில் இருந்து விடுபட..
கடன் பிரச்சனையால் சிரமப்படுபவர்கள், செவ்வாய்க்கிழமை அன்று அனுமனுக்கு வெல்லம் அல்லது இனிப்புக்களை வாங்கி கொடுங்கள். இப்படி செய்வதனால் கடன் பிரச்சனை நீங்குவதோடு மட்டுமின்றி, வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதோடு சொத்து தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்க...
செவ்வாய்கிழமைகளில் 4 பச்சை மிளகாய் மற்றும் ஒரு எலுமிச்சையை ஒரு நூலில் கோர்த்து, அதன் பின் 3 பச்சை மிளகாயை கோர்த்து, அதை வீட்டின் முன் அல்லது கடையின் முன் கட்டித் தொங்க விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம், அப்பகுதியைச் சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, நேர்மறை ஆற்றல் நிறைந்து இருக்கும்.

விரும்பிய வேலை கிடைக்க..
நீங்கள் விரும்பும் வேலை கிடைப்பதில் பிரச்சனையை சந்திக்கிறீர்களா? அப்படியானால் இன்டர்வியூ செல்லும் போது பசுவிற்கு வெல்லம் மற்றும் பிரட்டை கொடுங்கள். பசு அனைத்து தெய்வங்களுக்குமான உறைவிடமாக நம்பப்படுகிறது. எனவே பசுவிற்கு வெல்லத்தைக் கொடுப்பதனால் வேலை தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, வெற்றிக்கான பாதைகள் திறக்கப்படும்.

திருமண தடைகள் நீங்க...
உங்களின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறதா? அப்படியானால் செவ்வாய்க்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் கொடுங்கள். இப்படி செய்வதனால் திருமணத்தில் வரும் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

பணப்பற்றாக்குறையை சமாளிக்க...
பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, ஒரு ரூபாய் நாணயம் மற்றும் சிறு வெல்லத் துண்டை எடுத்து, சிவப்பு துணியில் கட்டி, பின் அதை லட்சுமி தேவியின் பாதத்தில் வைத்து வணங்க வேண்டும். பின்பு அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படி செய்வதனால் பணப்பற்றாக்குறை நீங்குவதாக நம்பப்படுகிறது.

குடும்ப பிரச்சனை நீங்க...
உங்கள் வீட்டில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால், செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் 1 1/2 கிலோ வெல்லத்தை வாங்கி, தரையில் புதையுங்கள். இப்படி செய்வதால், குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்பு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

குழந்தை அதிகம் அழுவதைத் தடுக்க...
உங்கள் வீட்டில் குழந்தை அதிகமாக அழுதால், செவ்வாய்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மயிலிறகை எடுத்து, குழந்தை தூங்கும் படுக்கையின் அடியில் வையுங்கள். இப்படி செய்வதனால் குழந்தையின் அழுகை சீக்கிரம் நின்றுவிடும்.



Click it and Unblock the Notifications