Latest Updates
-
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இன்னும் 3 மாதத்தில் சனியால் இந்த ராசிக்காரங்களுக்கு கஷ்ட காலம் ஆரம்பிக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி இடம் மாறப் போகிறார். இதனால் ஏழரை சனியின் தாக்கம் பின்வரும் 3 ராசிகளில் இருக்கும்.
என்ன தான் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், பலருக்கு நமது ராசிக்கான பலன்களைத் தெரிந்து கொள்வதில் ஒருவித ஆர்வம் இருக்கும். ஜோதிடத்தில் 9 கிரகங்கள் மற்றும் 12 ராசிகள் குறித்து கூறப்பட்டுள்ளன. இந்த கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராசிக்கு அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு ராசியுடன் தொடர்பு கொண்டது என்பதால் கிரகங்களின் இடமாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரக இடமாற்றங்கள் சிலருக்கு நல்லதாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம்.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் பல முக்கிய கிரகங்கள் இடம் மாறுகின்றன. அதில் ஒன்று தான் சனி. ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவராக கருதப்படுகிறார். சனி ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் இருந்து, பின் இடம் மாறும். அப்படி சனி பகவான் ராசியை மாற்றும் போது தான் ஏழரை சனி அல்லது சனியின் தையா தொடங்குகிறது.

2022-ல் சனி பெயர்ச்சி
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் மகர ராசியில் பயணித்து வருகிறார். இதனால் மகர ராசியில் ஏழரை சனியின் இரண்டாம் கட்டமும், கும்ப ராசியில் முதல் கட்டமும், தனுசு ராசியில் 3 ஆம் கட்டமும் நடக்கிறது. ஆனால் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி இடம் மாறப் போகிறார். இதனால் ஏழரை சனியின் தாக்கம் பின்வரும் 3 ராசிகளில் இருக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார், எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ஏழரை சனி
ஏழரை சனியில் மூன்று கட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டமும் இரண்டரை ஆண்டுகள் நீடித்திருக்கும். முதல் கட்டத்தில் மனப் பிரச்சனைகளும்,இரண்டாம் கட்டத்தில் உடல், மன மற்றும் நிதி பிரச்சனைகளும் காணப்படுகின்றன. மூன்றாம் கட்டத்தில் சனியினால் சந்திக்கும் துன்பங்கள் குறைய தொடங்குகின்றன. ஏனெனில் மூன்றாம் கட்டத்தில் சனி ஒருவருக்கு தனது தவறை சரிசெய்யும் வாய்ப்பை வழங்குகிறார்.

கும்ப ராசிக்கு சிரமங்கள் அதிகரிக்கும்
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி இடம் பெயர்ந்தவுடன், கும்ப ராசியில் ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது. ஆகவே கும்ப ராசிக்காரர்கள் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். இத்தகைய சூழ்நிலையில் நல்ல செயல்களை செய்ய முயலுங்கள். தான, தர்மங்களை செய்யுங்கள். இதனால் சனி தொடர்பான தொல்லைகள் குறையும்.

ஏழரை சனியின் முதல் மற்றும் மூன்றாம் கட்டம்
கும்ப ராசிக்கு சனி பகவான் இடம் மாறுவதால், மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டமும், மீன ராசிக்காரர்களுக்கு முதல் கட்டமும் தொடங்குகிறது. இதனால் மகர ராசிக்காரர்கள் இதுவரை சனி பகவானின் சோதனையால் சந்தித்த துன்பங்கள் குறைந்து, சற்று நற்பலன்களைப் பெறுவார்கள். மீன ராசிக்காரர்கள் மனப் பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள்.

ஏழரை சனியில் இருந்து விடுபடும் தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறார்கள். ஏழரை சனி முடியும் போது சனி பகவான் அந்த ராசிக்காரர்களுக்கு எதையாவது கொடுத்துவிட்டு செல்வார் என்று சொல்வார்கள். ஏனெனில் அந்த நபர் சனி பகவான் கொடுத்த அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து, தனது செயல்களுக்கு பரிகாரங்களை செய்துவிட்டார். இத்தகைய சூழ்நிலையில் தனுசு ராசிக்காரர்கள் சில நன்மைகளைப் பெறுவார்கள்.

அஷ்டம, அர்தாஷ்டம சனி
அஷ்டம, அர்தாஷ்டம சனியின் தாக்கம் இரண்டரை வருடங்கள் ஆகும். 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி நடக்கும் சனி பெயர்ச்சியால், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஷ்டம, அர்தாஷ்டம சனி ஆரம்பமாகிறது. அதே வேளையில் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் அஷ்டம, அர்தாஷ்டம சனியில் இருந்து விடுபடுவார்கள்.



Click it and Unblock the Notifications











