Latest Updates
-
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க.. -
சௌ சௌ வாங்குனா இந்த செட்டிநாடு பொரிச்ச குழம்பு செய்யுங்க - சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
தீபாவளி 2019: சகோதர சகோதரியின் பாசம் சொல்லும் எம துவிதியை கொண்டாடுவது எப்படி தெரியுமா?
தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் ஒருநாள் திருவிழாவாக முடிந்து விடுகிறது. ஆனால் வட இந்தியாவில் ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். ஐப்பசி மாதம் வளர்பிறை துவிதியை எம துவிதாவாக வட மாநிலத்தவர் கொண்டாடுகிறார்கள்.
தீபாவளியை ஒட்டி வரும் எம துவிதியை மற்றும் எம தீபம் ஏற்றும் திரயோதசி ஆகிய தினங்கள் தனக்கு உகந்தவை ஆதலால், தீபாவளிப் பண்டிகை கையை எமதர்மன் விரும்புவதாக புராணங்கள் கூறுகின்றன. தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் ஒருநாள் திருவிழாவாக முடிந்து விடுகிறது. ஆனால் வட இந்தியாவில் ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். கோவத்ஸ துவாதசி, தன திரயோதசி, தன்வந்திரி ஜெயந்தி, எம தீபம், நரக சதுர்த்தசி தீபாவளி, கேதார கௌரி விரதம், அமாவாசை, கோவர்தன பூஜை, யம துவிதியை என ஐந்து நாட்களும் அற்புதமாக கொண்டாடுகின்றனர். இதில் சகோதர பாசத்திற்காக கொண்டாடுவதே எம துவிதியை.
தீபாவளி பண்டிகை தினத்தின் முதல்நாளும், தீபாவளி பண்டிகை முடிந்து துவிதியை நாளிலும் எமனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடுகின்றனர். எமன் தர்மராஜன். நீதிமான். நாம் எம தீபம் ஏற்றுவதன் மூலம் எமனை மகிழ்விக்கிறோம். அதே போல எம துவிதியை நாளில் அண்ணன் தம்பிகளை அழைத்து விருந்து கொடுக்கும் சகோதரிகளை வாழ்த்துகிறார் எமன் என்பது ஐதீகம். சகோதரர்களுக்கு அகால மரணங்கள், விபத்துகள் ஏற்படுவதில்லை என்பது ஐதீகம்.

வட இந்தியாவில், தீபாவளித் திருநாள் ஐந்து நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முதல்நாளில் யமதீபம் ஏற்றி வழிபடுகின்றனர். தனத்திரயோதசி நாளில் மகாலட்சுமி வீட்டிற்கு வருகிறார் என்பது ஐதீகம். லட்சுமி குபோர பூஜை செய்கின்றனர். கோத்ரி ராத்ரி, தன்வந்திரி ஜெயந்தி கொண்டாடுகின்றனர். நரக சதுர்த்தசி தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் தீபாவளி சர்வ அமாவாசை நாளில் கொண்டாடுகின்றனர். கேதார கௌரி விரதம் இருப்பவர்கள் லட்சுமி பூஜை செய்கின்றனர். பிரதமை நாளில் கோவர்த்தன பூஜை செய்கின்றனர். மூன்றாம் நாள் எமத்துவிதியை கொண்டாடுவது வட இந்தியாவில் சிறப்பு சகோதரர்களை அழைத்து விருந்து போட்டு புத்தாடைகள் கொடுத்து அவர்களுக்கு பொட்டு வைத்து ஆசி வழங்குகின்றனர் ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக்கொள்கின்றனர்.

முன்னோர் வழிபாடு
புரட்டாசி மாதம் மஹாளய பட்ச நாட்களில் குறிப்பாக மஹாளய பட்ச அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படி வரும் முன்னோர்கள் தீபாவளி நாட்களில் தான் பித்ருலோகத்துக்கு திரும்புகின்றனர். அவர்களை வழியனுப்பும் வகையில் தெற்கு நோக்கி தீபம் ஏற்ற வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றனர்.

அகல் விளக்கு
தீபாவளிக்கு முதல் நாள் அன்று மாலை நேரத்தில் எம தீபம் ஏற்ற வேண்டும். எம தீபத்தை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது வழக்கம். இதற்கு வசதி இல்லாதவர்கள் வழக்கமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றும்போது, தனியே ஓர் அகல் ஏற்றி வழி படலாம். இதனால் முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவானாம். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை ஏற்படாது. நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம்.

எம துவிதியை
ஐப்பசி மாதம் வளர்பிறை துவிதியை எம துவிதா வாக வட மாநிலத்தவர் கொண்டாடுகிறார்கள். பால்பிஜி என்றும், பையாதுஜ் என்றும் போற்றப்படுகிறது இந்தத் திருநாள். மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும், நேபாளத்திலும் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இதற்கு புராண கதையும் உள்ளது.

எமனின் சகோதரி
ஒரு முறை ஐப்பசி மாத வளர் பிறை துவிதியை அன்று தன் சகோதரி எமி யின் வீட்டுக்குச் சென்றார் எமதர்மன். அவருக்கு ஆரத்தி எடுத்து, மாலை சூடி, திலகம் இட்டு அன்புடன் வரவேற்றாள் எமி. இருவரும், ஒருவருக்கு ஒருவர் பரிசுகளையும் பலகாரங்களையும் கொடுத்து தங்கள் பாசத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

எமனின் ஆசிர்வாதம்
சகோதரியின் அன்பில் மகிழ்ந்த எமதர்மன், ''இந்த தினத்தில், தன் சகோதரியின் கைகளால் திலகம் இட்டுக் கொள்பவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு அகால மரணம் கிடையாது என்று வரம் தந்தாராம். எனவே எம துவிதியைத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள்!

எமனுக்கு பிடித்த பண்டிகை
சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை எமனுக்குப் பிடித்த விழா என்று புராணங்களும் போற்றுகின்றன. தீபாவளியை ஒட்டி வரும் எம துவிதியை மற்றும் எம தீபம் ஏற்றும் திரயோதசி ஆகிய தினங்கள் தனக்கு உகந்தவை என்பதால் தீபாவளிப் பண்டிகை கையை எமதர்மன் விரும்புவதாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தீபாவளிக்கு அக்கா தங்கை யாராக இருந்தாலும் அண்ணன் தம்பிகளை அன்போடு அழைத்து பாசத்தை பரிமாறுங்க. எமனை சந்தோஷப்படுத்துங்க.



Click it and Unblock the Notifications