Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
சௌ சௌ வாங்குனா இந்த செட்டிநாடு பொரிச்ச குழம்பு செய்யுங்க - சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்
Chow Chow Poricha Kulambu Recipe in Tamil: மதியம் சிம்பிளா அதிகம் மெனக்கெடாம சமையலை முடிக்க நினைக்கிறீங்களா? உங்கள் வீட்டில் சௌ சௌ உள்ளதா? அப்படியானால் அதை வைத்து சூப்பரான ஒரு பொரிச்ச குழம்பு செய்யுங்கள். இந்த பக்குவத்தில் சௌ சௌ பொரிச்ச குழம்பு செய்யும் போது, அது சூடான சாதத்துடன் மட்டுமின்றி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

மேலும் இந்த சௌ சௌ பொரிச்ச குழம்பு செய்வதற்கு ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்களும் இதை எளிதாக செய்யலாம். முக்கியமாக இந்த குழம்பு நீங்கள் வழக்கமாக செய்வதை விட சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதால், சௌ சௌ பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். சௌ சௌ சாம்பார், பொரியலாக சாப்பிட்டே போரடித்தவர்கள் இந்த குழம்பை முயற்சி செய்து பார்க்கலாம். மேலும் இது எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் இது பொருத்தமான தேர்வாக இருக்கும்.
உங்களுக்கு செட்டிநாடு சௌ சௌ பொரிச்ச குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ பொரிச்ச குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சௌசௌ - 2 (சிறியவை)
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க
வறுத்து அரைக்க வேண்டியவை:
- தனியா - 2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- மிளகு - 1/2 ஸ்பூன்
- பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 2
- வர மிளகாய் - 2
- துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
- தக்காளி - 1
செய்முறை:
- சௌ சௌவைக் கழுவி, தோலை உரித்து, சதுரங்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில், கொத்தமல்லி விதைகள், வர மிளகாய், சீரகம், மிளகு, பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றை வறுக்கவும்.
- வறுத்த பொருட்கள் ஆறியதும், அதை மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் துருவிய தேங்காயைச் சேர்த்து கொரகொரப்பான பொடியாக அரைக்கவும்.
- இறுதியாக, நறுக்கிய ஒரு தக்காளியைச் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதைத் தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துச் சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் நறுக்கிய சௌசௌ துண்டுகள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அதன்பின் அரைத்து வைத்துள்ள தக்காளி மசாலா விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கலக்கவும்.
- உப்பின் அளவை சரிபார்த்து, குக்கரை மூடி குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- பிரஷர் தானாக அடங்கியதும் குக்கரைத் திறக்கவும். இப்போது எண்ணெய் மிதக்கும் சுவையான சௌ சௌ பொரிச்ச குழம்பு தயார்.
- இறுதியாகக் கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரித்து அடுப்பை அணைக்கவும். இது சாதம், இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
