For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு உங்க ராசிக்கு இதெல்லாம் தான் நடக்குமாம்...

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

By Mahibala
|

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

horoscope

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்று எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு அதில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். பரம்பரை சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் நிதானமாக முடிவெடுங்கள். மனதுக்குள் இருக்கின்ற கவலைகள் நீங்கி மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

முக்கிய பதவியில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உங்களுடைய பேச்சுத்திறன் மற்றும் வாக்குவன்மையால் அதிக புகழ் உண்டாகும். வாகனங்களைக் கொண்டு தொழில் புரிகின்றவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

சின்ன சின்ன பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். வீடு மற்றும் மனை விருத்திக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெற்றோர்களுடைய சொத்துக்களின் மூலம் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றங்கள் உண்டாவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய உடன் பிறந்த சகோதரர்களின் உதவியால் நல்ல செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சின்ன சின்ன விரயச் செலவுகள் வந்து போகும். உங்களுடைய பேச்சுத்திறமையால் லாபங்களை அடைவீர்கள். உடல் நலனில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். புதிதாக தொழில் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

மனதுக்குள் உண்டாகிற பலவிதமான எண்ணங்களினால் மனதில் பெரும் குழப்பங்கள் உண்டாகும். உயர்கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படுத். கால்நடைகளின் மூல் லாபங்கள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

ஆன்மீக வழிபட்டில் மனம் மகிழ்ச்சி உண்டாகும். புண்ணிய காரியங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சுப செய்திகள் வந்து சேரும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வாகனங்களில் செல்லுகின்ற பொழுது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் ஈடேறுவதில் கொஞ்சம் மந்தத்தன்மை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்

துலாம்

தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனம் தைரியத்துடன் செயல்பட்டு தொழிலில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகளை சரி செய்ய முயற்சி செய்வீர்கள். முக்கியப் பணிகளில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். கல்வி சம்பந்தப்பட்ட விவகாரங்ளில் கலந்து கொள்வீர்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

மனதில் உள்ள கவலைகள் நீங்கி மனம் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சுக்களினால் புதிய நபர்களுடைய அறிமுகங்கள் உண்டாகும். வீட்டில் விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகிற பொழுது, கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கை வேண்டும். அரசாங்கத் தரப்பிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

நிர்வாகம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளினால் உங்களுடைய தனித்திறமைகள் வெளிப்படும். வியாபாரத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கு தொழிலில் நீங்கள் நினைத்த லாபங்கள் கிடைக்கும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களுக்குத் தெரிந்த கலைகளால் பெரும் தனலாபங்கள் உண்டாகும். மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கு சாதகமற்ற நட்பு நிலைகள் உருவாகும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருங்கள். உங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களுடைய உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்த்துவிட்டு கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் உங்கள் மனதில் வந்து போகும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பணிகளைத் தாங்களே முடிப்பது தான் நல்லது. அலைச்சல்களுக்கு தகுந்தபடி சேமிப்பும் உயர ஆரம்பிக்கும். வெிலை உயர்ந்த பொருள்களைக் கையாளுகின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

மீனம்

மீனம்

தொழிலில் பங்குதாரர்கள் மூலம் சுப விரயச் செலவுகள் ஏற்பட்டு, அதன்மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். பெற்றோர்களுடைய உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சர்வதேச வணிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபங்கள் உயரும். மனைவியிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். எதிலும் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 9th septempter 2019 Monday

Each horoscope article on the Boldsky astrology section will cover all aspects of your life, right from career, personal life, finances, health to even travel and education. While the daily horoscopes will provide you with all the information you need to know ahead of your day. It will also help you take business or job-related decisions. see your Daily Horoscope For 9th septempter 2019 monday
Story first published: Saturday, September 7, 2019, 18:12 [IST]
Desktop Bottom Promotion