For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செவ்வாய் சுக்கிரனால் யாருடைய காதல் வாழ்க்கை களைகட்டும் தெரியுமா?

மார்ச் 9ஆம் தேதி திங்கட்கிழமை இன்றைய தினம் சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்னைக்கு யாருக்கு ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக இருக்கும், யாருடைய பிரச்

|

மார்ச் 9ஆம் தேதி திங்கட்கிழமை இன்றைய தினம் சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்னைக்கு யாருக்கு ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக இருக்கும், யாருடைய பிரச்சினைகள் தீரப்போகுது, பணம் வரும் வாய்ப்பு யாருக்கு, செலவு யாருக்கு வரும் என்று கேட்கறீங்களா? இன்றைய ராசிபலனை படிங்க. உங்க எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

சந்திரன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வீண் பிரச்சினைகளை தவிர்க்க உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் ஏற்படலாம். செலவுகளும் அதிகரிக்கும் சேமிப்பு குறையும். உங்க உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். தராள பணவரவு மனதில் தன்னம்பிக்கையை தரும். காதல் விவகாரங்களில் கவனமாக இருங்க. மண வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமாக இருக்காது கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்க. மன அழுத்தம் தீர மாசி பவுர்ணமி தினத்தில் மகேஸ்வரனை வணங்குங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 29

சாதகமான நேரம் : மாலை 5:30 முதல் இரவு 9:50 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் இன்று உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும் என்றாலும் வரவேண்டிய பணம் தாமதமாக வரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்க வாழ்க்கை துணைவர் உங்களுக்கு சிறந்த சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்து மகிழ்ச்சிபடுத்துவார்.

அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : காலை 8:25 முதல் நண்பகல் 12:55 மணிவரை

மிதுனம்

மிதுனம்

சந்திரன் இன்று முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். உங்களுக்கு செல்வம் செல்வாக்கு கூடும். குடும்பம் குதூகலமாக இருக்கும். சுக்கிரன் செவ்வாய் பார்வை உங்கள் மீது மன்மதன் அம்பு பாய நேரம் வந்தாச்சு கவனமாக இருங்க. எச்சரிக்கையாகவும் இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 17

சாதகமான நேரம் : காலை 9:20 முதல் பிற்பகல் 1:30 மணிவரை

கடகம்

கடகம்

சந்திரன் இன்றைய தினம் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலையில் சுமாராக இருக்கும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மண வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் சந்தோஷத்தை தரப்போகிறது. குடும்பத்தில் இன்று குதூகலமாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சந்திரன் இன்று உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். இன்று இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள். எல்லா நன்மைகளும் இன்று உங்களுக்கு கிடைக்கும் யோகம் வந்து விட்டது. பெண்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும். இன்று உங்களின் மணவாழ்க்கை மிகவும் வண்ணமயமான நாளாக அமையப்போகிறது.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் மாலை 4:00 மணிவரை

கன்னி

கன்னி

சந்திரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும், பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டாகும். உங்கள் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பணவரவு சுமாராக இருக்கும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். இன்று காதல் அரும்பும் ரொம்ப ரொமான்ஸ் ஆன நாளாக அமையும். ஆலய வழிபாடு மன அமைதியை தரும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 27

சாதகமான நேரம் : காலை 8:40 முதல் நண்பகல் 12:30 மணிவரை

துலாம்

துலாம்

சந்திரன் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகி லாபம் பெருகும். இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். பெரியவர்களின் சந்திப்பும் அவர்களின் ஆசியும் கிடைக்கும். உங்க மண வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். என்னதான் வேலை இருந்தாலும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்யுங்கள். உங்க உடல் ஆரோக்கியம் இன்று சுமாராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் மாலை 4:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் உங்க ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் திறமை அற்புதமாக இருக்கும். வருமானம் பெருகும். இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்ப வாழ்க்கை குதூகலத்தை கொடுத்தும். மண வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். காதல் வானில் இன்று உங்கள் அன்புக்குரியவருடன் சிறகடித்து பறப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் நண்பகல் 12:05 மணிவரை

தனுசு

தனுசு

சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விட்டு கொடுத்து செல்வதால் பிரச்சினைகள் குறையும். இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள் வெற்றி கிடைக்கும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும் கவனம் தேவை. உங்க உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்க வாழ்க்கை துணையின் அன்பில் உங்களின் வேதனைகளை மறப்பீர்கள். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்தான் நீங்க வெற்றிகரமாக செய்து முடிப்பீங்க. உங்க செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 30

சாதகமான நேரம் : நண்பகல் 12:20 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

மகரம்

மகரம்

சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். ஆரோக்கிய ரீதியாக சிறு பாதிப்புகள் ஏற்படும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருங்க. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போங்க. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதம் வேண்டாம். உங்க காதல் துணையின் அன்பில் நீங்க ரொம்பவே உருகிப் போவீர்கள். உங்க நிதி நிலைமை நன்றாகவே இருக்கும் என்றாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நேரம் : பிற்பகல் 4:00 முதல் இரவு 8:20 மணிவரை

கும்பம்

கும்பம்

சந்திரன் இன்று உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சந்தோஷம் அதிகமாகும். தம்பதியர் இடையே நெருக்கம் கூடும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. இரவு நேர பயங்களை தவிர்க்கவும். உங்க உடல் நலம் இன்று அற்புதமாக இருக்கும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருங்க. கவனச்சிதறல் சில பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். காதல் விவகாரங்கள் கலகலப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 20

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:30 மணிவரை

மீனம்

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் உணவு விசயத்தில் கவனமாக இருங்க. மண வாழ்க்கை மகிழ்ச்சியை தரும். சொந்த பந்தங்களுடன் கூடி விருந்துண்டு மகிழ்வீர்கள். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : காலை 8:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 9th March 2020 Monday In Tamil

Check out the daily horoscope for 9th march 2020 monday in tamil. Read on...
Story first published: Sunday, March 8, 2020, 23:06 [IST]
Desktop Bottom Promotion