Latest Updates
-
August 2026 Horoscope: ஆகஸ்ட்-ல் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்சக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உங்களுக்கு மாரடைப்பு வருமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த 5 இரத்த பரிசோதனைகளை செய்யுங்க.. -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் மாதத்தில் அற்புத பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சனி பகவான் வக்ரமடைவதால் இன்று முதல் எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
காஞ்சிபுர கோவில் இட்லியும், அதுக்கேற்ற இட்லி பொடியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
சங்கடங்களை தீர்க்கும் சந்திரபகவான் - ரிஷப ராசிக்காரங்க கொஞ்சம் கவனம்..
திங்கட்கிழமையான இன்று சந்திர பகவான் தனுசு ராசியில் கேது உடன் இணைந்து பயணிக்கிறார். இன்றைக்கு சில ராசிக்காரர்களுக்கு சங்கடங்கள் வரலாம்.
திங்கட்கிழமையான இன்று சந்திர பகவான் தனுசு ராசியில் கேது உடன் இணைந்து பயணிக்கிறார். இன்றைக்கு சில ராசிக்காரர்களுக்கு சங்கடங்கள் வரலாம். முக்கியமாக ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மவுன விரதம் இருப்பது ரொம்ப நல்லது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று இன்றைய ராசிபலன்களை படிங்க.

மேஷம்
இன்னிக்கு உத்தியோகத்துல இருந்து வந்த பிரச்சனைகள் கொஞ்சம் குறையும். சில பேத்துக்கு புது வேலையும் கிடைக்க வாய்ப்பிருக்கு. அதனால உங்க முகத்துல ஒரு ஒளி வட்டம் பளிச்சிடும். பிசினஸ் விசயமா வெளியூர் பிரயாணம் பண்றதுனால நல்ல மாற்றங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் கூட இருந்து வந்த மனஸ்தாபங்கள் மறையும். சொந்தக்காரங்க வழியில சுபச் செலவுகளும் வந்துடும். ஃப்ரண்ட்ஸுங்களும் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க.
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, உத்தியோகத்தல இருக்குறவங்க வேலையில கொஞ்சம் எச்சரிக்கையோட நடந்துக்குறது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனையிலும் கூடுதல் கவனத்தோட இருக்க பாருங்க. குடும்ப உறுப்பினர்கள் கூட தேவையில்லாத விஷயங்களை பேசி வீண் வாக்குவாதம் பண்ணாம அமைதியா இருக்க பாருங்க. இன்னிக்கு மவுன விரதம் இருக்கறது நல்லது. வண்டி வாகனத்துல போகும்போது எச்சரிக்கையா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 24
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனை அமோகமா இருக்கும். பணியாட்களோட ஒத்துழைப்புனால நல்ல லாபமும் வரும். பேங்க் பேலன்ஸும் கணிசமா கூடும். உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களோட ஒத்தாசை கிடைக்கும். குடும்பத்துல பெரியவங்களோட மனசல இடம் பிடிப்பீங்க. இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்களால நல்ல சேதி உங்களை தேடி ஒடி வரும்.
அதிர்ஷ்ட நிறம் : வயலட்
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 5:20 மணிவரை

கடகம்
இன்னிக்கு பிசினஸ்ல கூட்டாளிங்களோட இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். குடும்பத்துலயும் அமைதியான, மகிழ்ச்சியான சூழ்நிலையே இருக்கும். பிள்ளைங்களோட நல்லது நடந்துடும். பூர்வீக சொத்து பத்துனால உங்களுக்கு லாபம் கிடைக்கும். நினைச்ச காரியம் நிறைவேறிடும். எந்த காரியத்தையும் இன்னிக்கு மன உறுதியோட இருந்து செஞ்சி முடிப்பீங்க. பணவரத்தும் சூப்பரா இருக்கும், அதனால வாங்குன கடனை பைசல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 29
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க ஒத்துமையா இருப்பாங்க. கல்யாணம், சுபகாரியம் பத்தி பேசி முடிக்க இன்னிக்கு நாள் அருமையா கூட வந்துருக்கு. வீட்டுக்கு தேவையான புது பொருட்களையும் வாங்குவீங்க. பண வரத்து அமோகமா இருக்கும்கிறதுனால, பேங்க் பேலன்ஸும் கனிசமா கூடும். பிசினஸ்ல ஃப்ரண்ட்ஸுங்களோட சப்போர்ட்னால நெருக்கடி குறையும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : நண்பகல் 1:05 முதல் மாலை 5:00 மணிவரை

கன்னி
இன்னிக்கு உத்தியோகத்துல சீனியர் அதிகாரிங்களால நெருக்கடிகள் வந்து இம்சையை கொடுக்கும். அதனால கூட வேலை பாக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி நடந்துக்குறது நல்லது. குடும்பத்துல தேவையில்லாத தண்டச் செலவுங்களை கூடுமான வரை தவிர்த்துட்டா, கையில இருக்கிற காசு கரையாம பாத்துக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 5:20 மணிவரை

துலாம்
இன்னிக்கு பூர்வீக சொத்து பத்து சம்பந்தமான வழக்குல உங்களுக்கு வெற்றி கிடைக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. வீட்டுக்கு தேவையான புது பொருட்களை வாங்குவீங்க. உத்தியோகத்துல எதிர்பாத்த ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சி உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். பிசினஸ்ல வியாபாரமும் ரொம்ப அமோகமா நடந்து லாபம் பெருகும். புது முயற்சிகளுக்கு குடும்ப உறுப்பினர்களும் சப்போர்ட் பண்ணுவாங்க.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : மாலை 4:15 முதல் இரவு 10:20 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு உத்தியோகத்துல சில பேத்துக்கு எதிர்பாக்காத இடத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் வந்து ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் கொடுக்கும். சொந்தக்காரங்க உங்களுக்கு முடிஞ்ச அளவுக்கு ஒத்தாசை பண்ணுவாங்க. பிசினஸ்ல நல்ல இம்ப்ருவமெண்ட் இருக்கும். எடுக்குற சுப காரிய முயற்சியில வெற்றி கிடைச்சிடும். குடும்பத்துலயும் எல்லோரும் சந்தோஷமா இருப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : பிற்பகல் 1:00 முதல் மாலை 5:00 மணிவரை

தனுசு
இன்னிக்கு பிசினஸ்ல இருந்து வந்த போட்டி, பொறாமைகள் மறையும். வருமானமும் கூடும். அதனால உங்க கடன் பிரச்சனையும் காணாம போகும். உத்தியோகத்துல வேலை விஷயமா வெளியூர் பிரயாணம் போறதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும். கூடப்பொறந்தவங்க மூலமா உதவிங்க தேடி வந்துடும். குடும்பத்துலயும் சுபச் செலவுங்க வந்து சேரும். ஹெல்த் கண்டிஷனும் நார்மலா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 3:45 மணிவரை

மகரம்
இன்னிக்கு பிசினஸுக்கு எதிர்பாத்த பேங்க் லோனும் ஈசியா கிடைக்கும். ஃப்ரண்ட்ஸுங்க கூட இருந்து வந்த மனஸ்தாபம் மறையும். குடும்பத்துலயும் நீங்க விட்டுக்கொடுத்து நிதானமா பேசி, தன்மையா நடந்துக்கிட்டா பிரச்சனை முளைக்காம அவாய்ட் பண்ணிடலாம். பண விசயத்துல சொந்தக்காரங்களும் உங்களுக்கு பக்க பலமா இருப்பாங்க. பிள்ளைங்கால அலைச்சல் இருக்கும். கவனமா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 2:05 மணிவரை

கும்பம்
இன்னிக்கு கவர்மெண்ட் வழியில எதிர்பாத்துட்டு இருந்த உதவி கிடைக்கும். பிசினஸ்ல நெருக்கடி கொடுத்து வந்த கடன் பிரச்சனையும் நீங்கும். அதனால உங்க பிரச்சனையும் மறையும். வருமானமும் கூடிடும். சுப காரிய முயற்சியிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்னிக்கு காலையிலயே உங்களுக்கு மனசுக்கு நிறைவான இனிப்பான சேதி வீடு தேடி ஒடி வரும்.
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 8:20 மணிவரை

மீனம்
இன்னிக்கு பிசினஸ்ல சம்பந்தமான வெளியூர் பிரயாணத்துனால உங்களுக்கு நல்லது நடந்துடும். குடும்பத்துலயும் சுபகாரிய முயற்சிகள் கைகூடிடும். சுபகாரியம் நடக்குறதுக்கு சொந்தக்காரங்களும் ஒத்தாசையா இருப்பாங்க. பூர்வீக சொத்து பத்துனால உங்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்துல புது வாய்ப்புகளும் பொறுப்புகளும் தேடி வரும்.
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை



Click it and Unblock the Notifications