For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குரு பார்வையால இந்த 4 ராசிக்காரங்களுக்கும் உற்சாகம் அதிகமாகும்...

வியாழக்கிழமை குரு வாரம். இன்றைக்கு குருவின் பார்வையால் சில ராசிக்காரங்களுக்கு பண வருமானம் வரும். சந்தோஷம் அதிகரிக்கும். இதோ உங்க தினசரி ராசி பலனை படிங்க உங்க நிதி நிலைமை, காதல் விவகாரங்கள் உடல் ஆரோக்க

|

வியாழக்கிழமை குரு வாரம். இன்றைக்கு குருவின் பார்வையால் சில ராசிக்காரங்களுக்கு பண வருமானம் வரும். சந்தோஷம் அதிகரிக்கும். இதோ உங்க தினசரி ராசி பலனை படிங்க உங்க நிதி நிலைமை, காதல் விவகாரங்கள் உடல் ஆரோக்கியம் எல்லாம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னிக்கு மதியத்துக்கு மேல உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் வர்றதுனால, வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். யார் கிட்டயும் அநாவசியமா பேசி வம்பு வளர்க்காதீங்க. வண்டி வாகனத்துல வெளியில போகும்போது கண்டிப்பா ஹெல்மெட் போட்டுட்டு போறது நல்லது. பிசினஸ்ல பெரிய அளவுல பணத்தை இண்வெஸ்ட் பண்ண வேணாம். இன்னிக்கு தேவையில்லாத மனக்குழப்பம் வரும். வேலை நெருக்கடி இருக்குறதுனால ரொம்ப டயர்டா ஃபீல் பண்ணுவீங்க. சில விஷயத்தை செய்ய நெனைச்சாலும் ஃபைனான்ஸ் பொசிஷன் அதுக்கு இடம் கொடுக்காது.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நேரம் : பிற்பகல் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா வெளியூர் போறதுனால, உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்து பத்து சம்பந்தமான வழக்குல உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்துலயும் அமைதி நிலவும். ஒரு சில பேருக்கு வண்டி வாகனம் வாங்குற யோகம் இருக்கு. எந்த வேலையையும் ரொம்பவே உற்சாகமா சந்தோஷமா செஞ்சி முடிப்பீங்க. மனசளவுல ரொம்பவே உற்சாகமா இருப்பீங்க. லவ் பண்றவங்க லவ் மேட்டரை வீட்டுல சொல்றதுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. காதல் கல்யாணத்தில் முடியும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 13

சாதகமான நேரம் : மாலை 4:15 மணி முதல் இரவு 10:20 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்னிக்கு சில பேருக்கு வெளியூர் பிரயாணம் போறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். கிடைக்குற வாய்ப்பை பயன்படுத்திக்குறது நல்லது. உத்தியோகத்துலு சில பேருக்கு நெருக்கடிகள் குறைய வாய்ப்பிருக்கு. இன்னிக்கு எதிர்பாக்காத வகையில சில பேருக்கு சுபச் செலவுங்க வந்துடும். ஹெல்த் கண்டிஷன்ல சின்னச் சின்னதா பாதிப்பு இருந்தாலும். பெரிய அளவுல பாதிக்காதுங்குறது ஆறுதலான விஷயம். எக்ஸ்ட்ரா வருமானத்துக்கு வாய்ப்பு வந்தா நல்லா யோசனை பண்ணி காரியத்துல இறங்குங்க.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : நண்பகல் 12:45 மணி முதல் மாலை 5:20 மணி வரை

கடகம்

கடகம்

இன்னிக்கு உத்தியோகத்துல சில பேருக்கு எதிர்பாத்துட்டு இருந்த ட்ரான்ஸ்ஃபர் கிடைக்குறதுல கால தாமதம் ஏற்படலாம். குடும்பத்துல பெரியவங்க கூட சின்னச் சின்னதா மனஸ்தாபங்கள் வந்து போகும். இன்னிக்கு நீங்க செய்ய நினைச்ச வேலையை செய்ய முடியாம சின்னதா இடைஞ்சல் முளைக்கலாம். எச்சரிக்கையா இருங்க. பிள்ளைங்க மூலமா சின்னச் சின்ன இம்சைகள் வரலாம். பிசினஸ்ல இதுவரைக்கும் போக்கு காட்டுன பழைய பாக்கிகள் வரும். இன்னிக்கு நல்ல விஷயத்துக்காக பணத்தை செலவு பண்றதுக்கு தயங்க மாட்டீங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க தன்னோட டேலண்ட்டை ப்ரூஃப் பண்றதுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : காலை 7:15 மணி முதல் பிற்பகல் 2:05 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்னிக்கு பிசினஸ் வளர்ச்சிக்காக நீங்க எடுக்குற முயற்சிகளுக்கு குடும்பத்தோட சப்போர்ட் இருக்கும். இருந்தாலும் நீங்க அகலக்கால் வைக்காம நிதானமா நடந்துக்குறது நல்லது. வேலை தேடுறவங்களுக்கு புது வேலை வாய்ப்புகள் அமையும். சொந்தக்காரங்க மூலமா வீண் பிரச்சனைகள் வந்து முளைக்கும். இதனாலயே நீங்க ரொம்பவே மனக்குழப்பத்தோடவே இருப்பீங்க. மேரேஜ் லைஃப்லயும் எந்த பிரச்சனையும் இருக்காது. ஒய்ஃப் ஹெல்த் கண்டிஷனைப் பத்தி ரொம்ப கவலைப்படாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணி வரை

கன்னி

கன்னி

இன்னிக்கு உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு அவங்க திறமைக்கும் உழைப்புக்கும் ஏத்த மாதிரி ப்ரமோஷன் கிடைக்கும். பிசினஸ்ல புது கூட்டாளிகள் வந்து சேர வாய்ப்பிருக்கு. சொந்தக்காரங்களும் உங்களோட வளர்ச்சிக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. பிள்ளைங்க வழியில மன அமைதி கிடைக்கும். இதனால குடும்பத்துலயும் மனசுக்கு இதமான தரமான சம்பவங்கள் நடந்துடும்.

உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இன்னிக்கு ஃபைனான்ஸ் பொசிஷனும் நார்மலா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 14

சாதகமான நேரம் : நண்பகல் 1:05 மணி முதல் மாலை 5:00 மணி வரை

துலாம்

துலாம்

இன்னிக்கு பிசினஸ்ல வெளி மாநிலத்துல இருந்து வர்ற புது நபர்கள் மூலமா நிறைய நன்மைகள் நடந்துடும். இருந்தாலும் எதுலயும் நிதானமா இருக்குறது நல்லது. சில பேருக்கு பூர்வீக சொத்து பத்து சம்பந்தமா தண்டச் செலவுங்க வந்துடும். பண வரத்தும் சுமாரா இருக்கும்கிறதுனால, ஃபைனான்ஸ் பிரச்சனையும் தலை தூக்கும். பிள்ளைங்க ரொம்பவே பொறுப்போட நடந்துக்குவாங்க. வீட்ல பேசும் போது யோசிச்சு பேசுங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : காலை 8:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்னிக்கு பிசினஸ்ல சம்பந்தமா புது முயற்சி எடுக்குறதா இருந்தா ஒரு தடவைக்கு பல தடவை யோசிச்சி முடிவெடுக்கறது நல்லது. உங்களுக்கு ஃப்ரண்ட்ஸுங்களும் சப்போர்ட்டா இருப்பாங்க. குடும்பத்துலயும் இதுவரைக்கும் தொந்தரவா இருந்த பிரச்சனை சரியாகிடும். பிள்ளைங்களோட படிப்பு கொஞ்சம் மந்தமா தான் இருக்கும். சொந்தக்காரங்க மூலமா தண்டச் செலவுங்களும் வந்து இம்சை கொடுக்கும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : காலை 8:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை

தனுசு

தனுசு

இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. இதனால, இது வரைக்கும் இருந்து வந்த போட்டி பொறாமை குறையுறதுக்கு வாய்ப்பிருக்கு. பிசினஸ்ல பண்றவங்களுக்கு இன்னிக்கு வியாபாரம் படு மந்தமா தான் இருக்கும். சொந்தக்காரங்களால உங்களுக்கு திடீர் நெருக்கடிகள் உண்டாகலாம். லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். இருந்தாலும் அவசரப்படாதீங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு சின்னதா இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு. கவனமா நடந்துக்கிறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 17

சாதகமான நேரம் : காலை 9:20 மணி முதல் நண்பகல் 1:30 மணி வரை

மகரம்

மகரம்

இன்னிக்கு பிசினஸ்ல சின்னதா மாற்றங்களை செஞ்சிட்டா வியாபாரம் பெருகி நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்துலயும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். ப்ரண்ட்ஸுங்களோட சப்போர்ட்டும் இன்னிக்க கிடைக்கும். இன்னிக்கு நீங்க எடுக்குற முயற்சிகளுக்கு நல்ல அனுகூலம் கிடைக்கும். பிள்ளைங்களும் ரொம்பவே பொறுப்போட நடந்துக்குவாங்க. வீட்டுல சுப காரிய விஷேசங்களும் இன்னிக்கு நடந்துடும். உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு கொஞ்சம் நல்லா இருக்கும். அதனால வீட்டுக்கு தேவையானதை வாங்குவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : நண்பகல் 1:25 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்னிக்கு உத்தியோகம் சம்பந்தமான வழக்குல உங்க பக்கம் தீர்ப்பு வர்றதுக்கு பிரகாசமான வாய்ப்பிருக்கு. திடீர் பணவரத்தும் வந்து உங்களை திக்கு முக்காட வச்சிடும். அதனால உங்க பேங்ப் பேலன்ஸும் கூடும். ஃப்ரண்ட்ஸுங்களோட ஐடியாவுனால நல்ல பலன்கள் கிடைக்கும். இன்னிக்கு நீங்க நினைச்ச காரியத்தை நெனைச்ச படியே நல்லபடியா செஞ்சி முடிப்பீங்க. ரொம்ப நாளா இருந்துவந்த கடன் பிரச்சனை இன்னிக்கு சால்வ் ஆகிடும். இன்னிக்கு உங்க குடும்ப வாழ்க்கையும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 24

சாதகமான நேரம் : நண்பகல் 12:00 மணி முதல் பிற்பகல் 3:45 மணி வரை

மீனம்

மீனம்

இன்னிக்கு குடும்பத்துல இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியா காணாம போயிடும். இருந்தாலும் உங்க மனசு சாந்தமாக பேசாம தியானம பண்றது அவசியம். இன்னிக்கு மதியம் வரைக்கும் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால எந்த விஷயத்துலயும் கொஞ்சம் நிதானத்தோட நடந்துக்குறது நல்லது. அவசரப்பட்டு எதுலயும் இண்வெஸ்ட் பண்ணாதீங்க. செலவு பண்றதை கண்ட்ரோல் பண்ணுங்க. நாள் நல்லா இருக்கும். மதியத்துக்கு மேல உங்களுக்கு சாதகமான பலன்கள் நடக்க ஆரம்பிக்கும். சந்தோஷமா இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : மெருன்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : அதிகாலை 4:20 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 4th June 2020 Thursday In Tamil

Check out the daily horoscope for 4th june 2020 thursday in tamil. Read on...
Story first published: Wednesday, June 3, 2020, 18:36 [IST]
Desktop Bottom Promotion