Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
சுக்கிர உச்சத்தால் நன்மை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
Recommended Video
12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். 12 ராசிக்காரர்களுக்கும் கிரகங்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் அது இருக்கும் இடத்தின் தாக்கத்தைப் பொறுத்தும் பலன்களைத் தரும்.

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நம்மை விட்டு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உணர்ந்து நடந்து கொள்ள முடியும்.

மேஷம்
வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கப் போகிறது. சமூக சேவை புரிகின்றவர்களுக்கு பெரும் புகழ் உண்டாகும். மனதில் கொஞ்சம் தன்னம்பிக்கையுடன் செயல்படத் தொடங்குவீர்கள். கலைஞர்களுக்கான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையப் போகிறது. கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
வீட்டில் உள்ள கணவன் மனைவிக்கு இடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான பழைய கடன்களை வசூலிக்கப் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெரிய பெரிய மகான்களின் தரிசனங்கள் கிடைக்கும். தொழில் சார்ந்த துறைகளில் உங்களுடைய மதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். உங்களுடைய உடன்பிறந்த சகோதரர்கள் மூலம் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்
மனதுக்குள் தொழில் சம்பந்தமாக புதிய எண்ணங்கள் தோன்றும். உங்களுடைய அறச் செயல்களால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கு இடையே கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். நீண்ட கால நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். அரசாங்கப் பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்காள சூழல் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர்ந்த சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்
குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவினால் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். உங்களுடைய புதிய முயற்சிகளால் தன லாபங்கள் உண்டாகும். எல்லாவற்றிலும் உங்களுககுச்சாதகமான சூழல்களே உருவாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் வழியாக உங்களுக்குச் சாதகமான சூழல்களே உருவாகும். பயணங்களின் போது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். நினைத்தபடி எண்ணங்கள் ஈடேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்
தொழிலில் புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களால் லாபம் அடைவீர்கள். நண்பர்களுடைய உதவியினால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பயணங்களின் மூலமாக உங்களுக்கு லாபங்கள் கிடைக்கும். கால்நடைகளை வளர்க்கின்றவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

கன்னி
புதிய எண்ணங்களுக்கு செயல் திட்டங்களைத் தீட்டி, அதனை நிறைவேற்றி வைக்க முயற்சி செய்வீர்கள். முக்கியப் பணியில் உள்ளவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கு உங்களுக்குச் சாதகமான சூழல்கள் அமையும். உங்களுடைய இளைய உடன் பிறப்புகளால் நன்மைகள் உண்டாகும். போட்டியில் நினைத்தபடி, வெற்றி கிடைக்கும். புனித யாத்திரைகள் செல்வதற்காக திட்டமிடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

துலாம்
செய்கின்ற தொழிலில் மேன்மை உண்டாவதற்கான புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். பூஜை சம்பந்தப்பட்ட ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சுய தொழில் செய்வதற்கான கடனுதவிகள் கைக்கு வந்து சேரும். பயணங்களின் வழியாக விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
உங்களுடைய புதிய முயற்சிகளில் காரியத் தடங்கல்கள் வந்து போகும். சுயதொழில் புரிகின்றவர்களுக்கு ஏற்பட்டு வந்த பணச்சிக்கல்கள் தீரும். தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமாக அலைச்சல்கள் இருந்தாலும் அதன்வழியாக சுப செய்திகளே வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக தேன் நிறமும் இருக்கும்.

தனுசு
வீண் அலைச்சல்களால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். பொருள்களைக் கையாளுகின்ற பொழுது, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். தொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்
புதிய நபர்களிடம் பேசுகின்ற பொழுது, கொஞசம் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய கூட்டாளிகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். சிறிய தூரப் பயணங்கள் மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எ்ண 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வசதி, வாய்ப்புகளால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுக்கான புதிய இலகககுகளை நிர்ணயம் செய்வீர்கள். பொருளாதாரத் மேம்படுத்துவதற்காகக் சிந்திக்க ஆரம்பிப்பீர்கள். பணிபுரியும் இடங்களில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கத் தொடங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்
புதிய பயிற்சிகளை தொழிலுக்கான முயற்சி செய்வீர்கள். நீங்கள் செய்யும் அறப் பணிகளால் உங்களுக்கு வெற்றி உண்டாகும். உயர் பதவிகளில் இருப்பவர்களிடம் இருந்து உங்களுக்குச் சாதகமான செய்திகள் கிடைக்கும். ஞான உபதேசங்களால் மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இள நீலநிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











