Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் பிசினஸ் பண்ண ரொம்ப நல்ல நாள்!
எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷ மேகங்கள் சூழ்ந்திருக்கும், யாருக்கு பிரச்சினை ஏற்படும். உங்க தினசரி ராசி பலனை படிங்க உங்க நிதி நிலைமை, காதல் விவகாரங்கள் உடல் ஆரோக்கியம் எல்லாம் எப்படி இருக்கும்னு தெரிஞ
எந்த ராசிக்காரங்களுக்கு சந்தோஷ மேகங்கள் சூழ்ந்திருக்கும், யாருக்கு பிரச்சினை ஏற்படும். உங்க தினசரி ராசி பலனை படிங்க உங்க நிதி நிலைமை, காதல் விவகாரங்கள் உடல் ஆரோக்கியம் எல்லாம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கங்க.

மேஷம்
மேரேஜ் லைஃப்ல இன்னிக்கு நல்ல விஷயங்கள் நடக்கலாம். உங்க ஒய்ஃப் பழைசை எல்லாம் மறந்துட்டு உங்ககிட்ட ரொம்ப அந்நியோன்யமா இருப்பாங்க. அதனால ஃபேமிலி லைஃப் ரொம்ப ஸ்மூத்தா நகரும். லவ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். கல்யாணத்தை பத்தி பேசுறதுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். வேலை நெருக்கடி இருக்குறதுனால ரொம்ப டயர்டா ஃபீல் பண்ணுவீங்க. சில விஷயத்தை செய்ய நெனைச்சாலும் ஃபைனான்ஸ் பொசிஷன் அதுக்கு இடம் கொடுக்காது.
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 6
சாதகமான நேரம் : பிற்பகல் 1:00 முதல் மாலை 5:00 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு ஆஃபீஸ்ல உங்க இன்க்ரிமெண்ட் பத்தி உங்க முதலாளி பேசுறதுக்கு வாய்ப்பிருக்கு. பிசினஸ் பண்றவங்க எக்ஸ்போர்ட் பிசினஸ்ல முதலீடு பண்றதுக்கும் வாய்ப்பிருக்கும். ஹெல்த் கண்டிஷன்ல நீங்க கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது. உங்க பெர்சனல் லைஃபையும் பிசினஸ் லைஃபையும் போட்டு குழப்பிக்காதீங்க. அது உங்க ஃபேமிலி லைஃபை பாதிக்கலாம். லவ் பண்றவங்க லவ் மேட்டரை வீட்டுல சொல்றதுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கு.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 13
சாதகமான நேரம் : மாலை 4:15 முதல் இரவு 10:20 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். நல்ல சாப்பாட்டை சாப்பிடுங்க. பணவரவும் நார்மலாவே இருக்கும். எக்ஸ்ட்ரா வருமானத்துக்கு வாய்ப்பு வந்தா நல்லா யோசனை பண்ணி காரியத்துல இறங்குங்க. இல்லேன்னா நீங்க ஏமாந்து போவீங்க. ஆஃபீஸ்ல இன்னிக்கு நிலைமை உங்களுக்கு ஃபேவராவே இருக்கும். குடும்பத்துலயும் சந்தோஷமும் அமைதியும் நிலைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 5:20 மணிவரை

கடகம்
இன்னிக்கு நீங்க ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க. குடும்பத்தோட பொழுது போக்குறதுக்கும் டைம் கிடைக்கும். அது உங்களுக்கும் மறக்க முடியாத அனுபவமா இருக்கும். ஒய்ஃபும் உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. படிக்கிற பசங்களுக்கும் இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். படிப்புல ஆர்வம் கூடிடும். இன்னிக்கு நல்ல விஷயத்துக்காக பணத்தை செலவு பண்றதுக்கு தயங்க மாட்டீங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க தன்னோட டேலண்ட்டை ப்ரூஃப் பண்றதுக்கு வாய்ப்பிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 2:05 மணிவரை

சிம்மம்
ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லபடியா விடிஞ்சிருக்கு. ப்ரமோஷனுக்கு வாய்ப்பிருக்கு. வேலையில்லாதவங்களுக்கு புது வேலை கிடைக்கலாம். பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு அமோகமான நாளா இருக்கும். லாபம் கொட்டும். ஃபைனான்ஸ் பொசிஷனும் நல்லா இருக்கும். மேரேஜ் லைஃப்லயும் பிரச்சனை இருக்காது. ஒய்ஃப் ஹெல்த் கண்டிஷனைப் பத்தி ரொம்ப கவலைப்படாதீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

கன்னி
வீட்டுப் பிரச்சனை உங்களை ரொம்பவே வாட்டி வதைக்கலாம். குடும்பத்துக்குள்ள நடக்குற வாக்குவாதம் இன்னிக்கு முடிஞ்சிடும். அதனால ரொம்பவே சந்தோஷமா இருப்பீங்க. உங்க சந்தோஷத்துக்காக யாருக்காவது கடன் கொடுக்கலாம். மேரேஜ் லைஃபும் ரொம்பவே ஸ்மூத்தா நகரும். லவ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு நாள் அமோகமா இருக்கும். இன்னிக்கு ஆஃபீஸ்ல கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க. கூட வேலை செய்யுறவங்க உங்களைப் பத்தி தப்பான செய்தியை பரப்பலாம், கவனமா இருந்து வேலையை மட்டும் பாருங்க. இன்னிக்கு ஃபைனான்ஸ் பொசிஷனும் நார்மலா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 14
சாதகமான நேரம் : நண்பகல் 1:05 முதல் மாலை 5:00 மணிவரை

துலாம்
இன்னிக்கு வீட்டு பிரச்சனையை தீர்க்குறதுல உங்க ஒய்ஃப் ரொம்ப சப்போர்ட் பண்ணுவாங்க. அதனால அவங்களை சந்தேகப்படுறதை அவாய்ட் பண்ணுங்க. இல்லேன்னா உங்களுக்கு தான் சிக்கல். பிசினஸ் பண்றவங்களுக்கு சிக்கல் வர வாய்ப்பிருக்கு. கவனமா இருக்குறது நல்லது. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு சாதாரண நாள் தான். கிரக நிலைகளும் உங்களுக்கு சாதகமா இருக்குறதுனால ரொம்ப நாளா வராம இருந்த பணம் இன்னிக்கு கைக்கு வந்து சேரும். அதனால ரொம்பவே உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு குடும்பத்துல அமைதியும் சந்தோஷமும் நீடிக்கும். உங்க ஒய்ஃபை சந்தேகப்படுறதை அவாய்ட் பண்றது நல்லது. அதனால உங்க ஒய்ஃபும் உங்க கிட்ட ரொம்ப அந்நியோன்யமா இருப்பாங்க. லவ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு முக்கியமான நாள் தான். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க ஜெயிக்கிறதுக்கும் வாய்ப்பிருக்கும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் நல்லா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 8:20 மணிவரை

தனுசு
சில சமயத்துல நீங்க எடுக்குற முடிவுகள் உங்க கைமீறி போயிடும். அந்த சமயத்துல அது உங்க குடும்பத்தையும் பாதிக்க வாய்ப்பிருக்கு. அந்த நேரத்துல நீங்க யார் மனசையும் கஷ்டப்படுத்தாம புத்திசாலித்தனமா நிதானமா நடந்துக்கோங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். இருந்தாலும் அவசரப்படாதீங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு சின்னதா இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு. கவனமா நடந்துக்கிறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

மகரம்
லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கும். ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சி நடந்துக்குவீங்க. கல்யாணம் ஆனவங்களுக்கும் இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். உங்க பிரச்சனை எல்லாத்தையும் உங்க ஒய்ஃப் தீர்த்து வச்சிடுவாங்க. ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு கொஞ்சம் நல்லா இருக்கும். அதனால வீட்டுக்கு தேவையானதை வாங்குவீங்க. ஆஃபீஸ்லயும் இன்னிக்கு நாள் அமோகமா இருக்கும். உங்க வேலையைப் பாத்து உங்க சீனியர் உங்களை பாராட்டுறதோட மெர்சலாகிடுவார்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 1:25 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கும்பம்
இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் நல்லா இருக்கும். ப்ளட் ப்ரஷர் இருக்குறவங்க கவனமா இருக்குறது நல்லது. டென்ஷனை குறைச்சிக்கோங்க. ரொம்ப நாளா இருந்துவந்த கடன் பிரச்சனை இன்னிக்கு சால்வ் ஆகிடும். இது உங்களுக்கு ஒரு படிப்பினையா இருக்கும். இதனால, இனிமே எதிர்காலத்துல கடன் கொடுக்கவோ வாங்கவோ யோசிப்பீங்க. இன்னிக்கு ஆஃபீஸ்லயும் உங்களுக்கு நாள் நல்லா இல்லை. உங்க சீனியரும் உங்க மேல கடுப்பா இருப்பாரு. இன்னிக்கு உங்க குடும்ப வாழ்க்கையும் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 24
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 3:45 மணிவரை

மீனம்
இன்னிக்கு நீங்க எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காது. அந்த சமயத்துல டென்ஷனோ கடுப்போ விரக்தியோ ஆகாமா நிதானமா நடந்துக்கோங்க. சீக்கிரமாவே நல்லது நடக்கும்னு நம்புங்க. இன்னிக்கு புதுசா ஏதாவது பண்றதா இருந்தா கொஞ்சம் வெய்ட் பண்றது நல்லது. வேற வேலைக்கு ட்ரை பண்றீங்கன்னா, அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்குறது நல்லதில்லை. ஃபைனான்ஸ் விஷயத்துலயும் கொஞ்சம் கவனமா இருங்க. அவசரப்பட்டு எதுலயும் இண்வெஸ்ட் பண்ணாதீங்க. செலவு பண்றதை கண்ட்ரோல் பண்ணுங்க. நாள் நல்லா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மெருன்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : அதிகாலை 4:20 முதல் நண்பகல் 12:00 மணிவரை



Click it and Unblock the Notifications