For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நாள் யாருக்கு மகிழ்ச்சியான நாள் தெரியுமா? - பலனை படிங்க...

இன்றைய தினமான நவம்பர் 2 ஆம் தேதி மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ராசியான நிறம், ராசியான எண்களையும் ராசியான நேரத்தையும் பார்க்கலாம்.

|

இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும். மகிழ்ச்சியாக இருக்குமா? சவால் நிறைந்ததாக இருக்குமா. இதோ இன்றைய ராசிபலனை படிங்க உங்க கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்றைக்கு, நீங்கள் வேலை செய்யுமிடத்தில் நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கக்கூடும். உங்களின் படைப்புக்கு உரிய மரியாதை கிட்டும். நீங்கள் தொழில் துறையினராக இருந்தால், தொழிலை விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணத்திற்கு தட்டுப்பாடு நீங்கும். விலைமதிப்பற்ற பொருள் ஒன்றை பெறக்கூடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மனைவியுடன் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களின் எதிர்காலத் திட்டங்கள் பற்றி மனைவியுடன் விவாதித்து முடிவெடுக்கலாம். உடல் ஆரோக்கியத்தை பொருத்த வரையில், இன்று ஒரு நல்ல நாள். மொத்தத்தில் இன்றைக்கு உங்கள் திறமையை நிரூபிக்க உங்களுக்கு ஒரு சந்தர்ப்பமாக இருக்கக்கூடும். மன மகிழ்ச்சி கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண்:9

அதிர்ஷ்ட நேரம் : காலை 8:15 முதல் மதியம் 2:30 மணி வரை

MOST READ: காதலை விட உடலுறவை விரும்பும் ராசிக்காரர்கள் யார் யார் என்பது தெரியுமா?

ரிஷபம்

ரிஷபம்

இன்றைக்கு உங்கள் மன அழுத்தத்தை குறைக்கவும் உடல் ஆரோக்கியத்தை கூட்டவும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். நண்பர்களுடன் சிறிது நேரம் பொழுது போக்குவது நல்லது. பணியிடத்தில் கவனமுடன் செயல்படுவது அவசியம். மறைமுக எதிரிகளால் தொல்லை ஏற்படக்கூடும். உங்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கலாம். அவர்களிடம் இருந்து விலகுவது நல்லது. இன்றைக்கு உங்கள் குடும்பத்தையும் தொழிலையும் சரிசமமாக கவனித்துக்கொள்வது அவசியம். பணியிடத்தில் வெகு நேரம் வேலை பார்ப்பதால் மனச்சோர்வு ஏற்படக்கூடும். பழைய நண்பர்களை சந்தித்து பேசுவதற்கு சந்தர்ப்பம் கிட்டும். பணவிஷயத்தைப் பொருத்த வரையில், இன்றைக்கு தாராள பணவரவு இருக்கும். கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை சிக்கனமாக செலவு செய்யவேண்டியது அவசியம். தியானம், யோகா செய்வதால், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியம் பெறலாம். இன்றைக்கு நீங்கள் சந்திக்கும் அனைவரிடத்திலும் கண்ணியமாக பேசிப்பழகவும்

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:10

அதிர்ஷ்ட நேரம் : காலை 7:30 முதல் இரவு 8:05 மணி வரை

மிதுனம்

மிதுனம்

இன்றைக்கு நீங்கள் எதிர்பார்த்த காரியம் நடைபெறுவதில் இழுபறி நிலை உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். இல்லையெனில், மன உளைச்சல் அதிகரிக்கும். இதனால் குடும்பத்திலும் நிம்மதியற்ற சூழல் நிலவும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் உட்கார்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காண்பது அவசியமாகும். பணவரவைப் பொருத்த வரை இன்றைக்கு உங்களுக்கு அமோகமான நாளாக அமையும். நீங்கள் எதிர்பார்த்த தொகை உங்கள் கைக்கு வந்து சேரும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். உங்கள் உடல் நலனைப் பொருத்தவரையில், நாள்பட்ட நோயிலிருந்து சிறிது நிவாரணம் பெறலாம். காதல் விவகாரத்தைப் பொருத்த வரையில் இன்றைக்கு சாதாரண நாளாகவே அமையும். உங்கள் திறமையை நிரூபிக்க இன்றைக்கு அருமையான நாளாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: ப்ரவுன்

அதிர்ஷ்ட எண்:16

அதிர்ஷ்ட நேரம் : காலை 5:05 முதல் நண்பகல் 12:30 மணி வரை

MOST READ: உலகில் சில உணவுகளால் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணங்கள்!

கடகம்

கடகம்

இன்றைக்கு நீங்கள் வழக்கத்தை விட அதிக உற்சாகமுடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படுவீர்கள். வேலை செய்யுமிடத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். உங்கள் மேலதிகாரிகளின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணியிடமாற்றமோ அல்லது பதவி உயர்வு, சம்பள உயர்வு தொடர்பான நல்ல தகவல் உங்கள் முதலாளியிடமிருந்து உங்களுக்கு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் மனைவியின் பேச்சுக்கு மதிப்பளியுங்கள். பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள். உடல் ஆரோக்கியம் பெற நீங்கள் வழக்கமான உட்கொள்ளும் உணவுப் பொருட்களின் மீது கவனமாக இருக்கவேண்டியது கட்டாயம். இல்லாவிட்டால் உடல் நலம் கெடும். பணப்புழக்கத்தை பொருத்தவரை, இன்றைக்கு சற்று கூடுதல் கவனம் அவசியம். இல்லாவிட்டால் பணத்தை இழக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:12

அதிர்ஷ்ட நேரம் : நண்பகல் 12:15 முதல் இரவு 9:05 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்றைக்கு பணவிஷயத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றமுண்டு. நீங்கள் எடுக்கும் முயற்சியில் தடைகள் ஏற்பட்டாலும், அதை சவாலாக ஏற்று தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள் வேலை செய்யுமிடத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடும். உங்கள் மேலதிகாரிகள் உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டலாம். எனவே வேலையில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். வியாபாரிகள், பழைய வர்த்தக விஷயங்களுக்காக சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம், இல்லாவிட்டால் பின்னர் அவஸ்தைப் பட நேரிடும். இல்லற வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். மாலையில் உங்கள் உறவினர் ஒருவரை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம் : காலை 7:00 மணி முதல் நண்பகல் 12:55 மணி வரை

MOST READ: அளவுக்கு அதிகமாக முந்திரி சாப்பிடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள்!

கன்னி

கன்னி

இன்றைக்கு உங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் நோக்கம் அறிந்து செயல்படுவார். உங்கள் மீது காதல் அதிகரிக்கும். உங்களுடன் அதிக நேரம், செலவிட நினைப்பார்கள். எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கும். காதல் விவகாரங்கள் கைகூடும். உங்கள் காதலருடன் நீண்ட நேரம் செலவிட நேரிடும். வேலை செய்யுமிடத்தில், நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலையை இன்று விரைந்து முடிக்க வாய்ப்புள்ளது. உங்களின் நிதித் திட்டங்களை அனைவரும் பாராட்டுவர். உங்கள் பயணத்திட்டம் கடைசி நேரத்தில் மாறுதலுக்கு உள்ளாகும். திட்டமிட்ட பணியை நிதானமாக செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம் : மாலை 6:15 மணி முதல் இரவு 10:30 மணி வரை

துலாம்

துலாம்

இன்றைக்கு குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உங்கள் பெற்றோரின் ஆசீர்வாதத்தால், நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். அலுவலுகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். அசாதாரணமான காரியங்களைக் கூடு மிக எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். உங்களை குறை சொன்னவர்கள் ஓடிப்போவார்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்களின் கடின உழைப்பை பாராட்டுவார்கள். உங்கள் திறமையை ஊக்குவிப்பார்கள் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இல்லற வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். இன்றைக்கு இனிமையான மறக்க முடியாத நாளாக அமையும். பணம் சரளமாக புழங்கக்கூடும். புது வழிகளில் பணம் வரக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கும். உங்களின் வேலைச்சுமையை மற்றவர்களிடம் காட்டவேண்டாம். அவர்களின் விருப்பு வெறுப்பு அறிந்து பழகுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம் : மாலை 6:45 மணி முதல் இரவு 10:20 மணி வரை

MOST READ: பீர் குடித்த 24 மணிநேரத்தில் உடலினுள் என்னலாம் நடக்கும் தெரியுமா?

விருச்சிகம்

விருச்சிகம்

இன்றைக்கு உங்களுக்கு நிதி நிலை ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். உங்க வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கும். பண பிரச்சினையை நீங்க சரி செய்யுங்கள். வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சினைகள் வரும் அதை சமாளிப்பீர்கள். உங்க காதல் நிலைமை சந்தோஷமாக இருக்கும். காதல் விவகாரம் உற்சாகத்தை தரும். வாழ்க்கை துணைவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்றைக்கு நீங்க மது அருந்துவதை தவிர்க்கவும். மேஜர் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உங்க மன அமைதி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட நேரம் : 27

அதிர்ஷ்ட எண் காலை 8.30 மணி மாலை 6 மணி

தனுசு

தனுசு

இன்றைக்கு உங்களுக்கு மற்ற நாட்களை விட ரொம்ப நல்ல நாள், வேலையில ரொம்ப பிஸியாக இருப்பீங்க. பயணம் நீங்க உற்சாகமாக இருப்பீர்கள். திருமண வாழ்க்கையில் நீங்க சந்தோஷமாக இருப்பீர்கள். வாழ்க்கை துணையோடு நீங்க சந்தோஷமாக இருப்பீர்கள். இன்றைக்கு கடினமாக வேலை செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சூழ்நிலை சாதகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்களை பெறுவீர்கள். உங்க உடம்பை கவனிங்க, உங்க எடையை பராமரியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 24

அதிர்ஷ்ட நேரம் : காலை 9.20 முதல் மாலை 3.00

MOST READ: ஒருவர் இறக்கப் போவதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

மகரம்

மகரம்

இன்றைக்கு உங்களுக்கு சாதாரண நாள். வேலைப்பளு அதிகரிக்கும். உங்க அருமையான நேரத்தை நீங்க வேஸ்ட் செய்யாதீங்க, உங்க பாய்பிரண்ட், கேர்ள் பிரண்ட் இன்று நல்ல மூடுல இருக்க மாட்டாங்க. உங்க திருமண வாழ்க்கையில நீங்க சந்தோஷமாக இருப்பீர்கள் மாலை நேரத்தில் உங்க வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். நீங்க வேலை இல்லாதவராக இருந்தால் உங்களுக்கு வேலை கிடைக்கும். பணம் வருவதற்கு புதிய வழிகள் பிறக்கும். பயணத்திற்கு இன்றைக்கு உங்களுக்கு நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

அதிர்ஷ்ட எண் : 18

அதிர்ஷ்ட நேரம் : மாலை 3.30 மணி இரவு 7 மணி

கும்பம்

கும்பம்

இன்றைக்கு உங்க திருமண வாழ்க்கை ஒளிமயமானதாக இருக்கிறது. உங்க வாழ்க்கை துணைவர் உங்களுக்கு அழகான சர்ப்ரைஸ் கொடுப்பார். உங்க குடும்ப வாழ்க்கை உறவின் பிணைப்பு அதிகமாகும். உங்க மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்க குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். உங்க பொருளாதார நிலைமை அதிகரிக்கும். வருமானம் கூடும். முடிக்கப்படாமல் இருந்த வேலையை எல்லாம் நீங்க முடிப்பீங்க. உங்க வேலைப்பளு குறையும் உங்க உடல் ஆரோக்கியம் இன்றைக்கு சாதாரணமாக இருக்கும். மன அமைதியும் உற்சாகமும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

அதிர்ஷ்ட எண் : 35

அதிர்ஷ்ட நேரம் : காலை 6.10 மணி பிற்பகல் 1 மணி

MOST READ: பாலுணர்ச்சியைத் தூண்டி நீண்ட நேரம் குதூகலமாக இருக்க உதவும் உணவுகள்!

மீனம்

மீனம்

வேலை செய்யும் இடத்தில் கடினமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். புரமோசன் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். உங்க திருமண வாழ்க்கையில நீங்க மிகப்பெரிய விசயத்தை எதிர்பார்க்கலாம். உங்க வாழ்க்கை துணை உங்களை ஸ்பெஷலாக கவனிப்பார். உங்க பொருளாதார நிலையும் நிதி நிலையும் அற்புதமாக இருக்கும். இன்றைக்கு நீங்க ஷாப்பிங் செய்ய ரொம்ப நல்ல நாள். உங்க குடும்ப உறுப்பினர்களுடன் இன்றைக்கு உறவுகள் அதிகரிக்கும். நீங்க நீரிழிவு நோயாளியாக இருக்கும் பட்சத்தில் உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 42

அதிர்ஷ்ட நேரம் : இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 2nd November 2019 Saturday

Check out the daily horoscope for 2nd november 2019 saturday. Read on...
Story first published: Friday, November 1, 2019, 23:13 [IST]
Desktop Bottom Promotion