இன்றைய ராசி பலன்கள் - ஏப்ரல் 2, 2020

இன்றைய தினம் உங்க ராசிக்கு பணம் வருமா? ஆரோக்கியம் எப்படி இருக்குன்னு பார்க்கறீங்களா? செலவு அதிகமாக வருமா என்று கேட்கறீர்களா? இன்றைய ராசிபலன்களை படிங்க உங்களின் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

இன்றைய தினம் உங்க ராசிக்கு பணம் வருமா? ஆரோக்கியம் எப்படி இருக்குன்னு பார்க்கறீங்களா? செலவு அதிகமாக வருமா என்று கேட்கறீர்களா? இன்றைய ராசிபலன்களை படிங்க உங்களின் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னிக்கு உங்க சொந்தக்காரங்களால வீட்டுல நிம்மதி காணாம போயிடும். ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்க கூட வேலை பாக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. பிசினஸ் பண்றவங்களுக்கு போட்டி, பொறாமை கொஞ்சம் கூடிடும். பிள்ளைங்களால தண்டச் செலவுங்க வந்து வாய்க்கும். எதிர்பாக்காம வர்ற உதவியால கடன் பாரம் கொஞ்சம் குறையும். கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல உங்க ஹெல்த்தையும், உங்க அம்மாவோட ஹெல்த்தையும் கொஞ்சம் அக்கறையோட கவனிச்சுக்கோங்க.

ராசியான நிறம் வெள்ளை

ராசியான எண் 8

ராசியான நேரம் பிற்பகல் 12 மணி இரவு 7 மணி

ரிஷபம்

ரிஷபம்

இன்னிக்கு ஆஃபீஸ் உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்களால சாதகமான பலன்கள் கிடைக்கும். சொந்தக்காரங்க உங்களோட தேவையை தெரிஞ்சிகிட்டு தானாவே வந்து ஒத்தாசை பண்ணுவாங்க. சுய தொழில் பண்றதுக்கு முயற்சி பண்ணுனீங்கன்னா அதுக்கு இன்னிக்கு பலன் கிடைக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு பேங்க் லோன் கிடைக்கலாம். குடும்பத்துலயும் உங்களுக்கு சந்தோஷம் கொடுக்கக்கூடிய தரமான சம்பவம் நடக்க வாய்ப்பிருக்கு.

ராசியான நிறம்: பிங்க்

ராசியான எண் 32

ராசியான நேரம் பிற்பகல் 3.30 இரவு 8 மணி

மிதுனம்

மிதுனம்

இன்னிக்கு ட்ராவல் பண்றதை அவாய்ட் பண்றது நல்லதுங்க. சொந்தக்காரங்க உங்களுக்கு அனுசரனையா இருப்பாங்க. அதனால கடன் பிரச்சனையும் சால்வ் ஆகிடும். சமூகத்துல பெரிய மனுஷங்களோட ஃப்ரண்ட்ஷிப் மனசுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கலாம். குடும்பத்துல சண்டை சச்சரவு வர்றதுக்கு சந்தர்ப்பம் கொடுக்காதீங்க. இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன் டல்லா இருக்கும். எதுக்கும் ஃபேமிலி டாக்டரை போய் பாக்குறது நல்லது.

ராசியான நிறம் மெரூன்

ராசியான எண் 6

ராசியான நேரம் காலை 8 மணி பிற்பகல் 2.15 மணி

கடகம்

கடகம்

இன்னிக்கு நீங்க எந்த வேலையையும் ரொம்பவே பொறுப்புணர்ச்சியோட வேலையை பார்ப்பீங்க. அதைப் பாத்து உங்க பிள்ளைங்களும் பொறுப்போட நடந்துக்குவாங்க. குடும்பத்துல சுபச் செலவுங்க ஏற்படலாம். பிசினஸ்லயும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இதுவரைக்கும் உங்களுக்கு இருந்துவந்த பண நெருக்கடி குறையுறதுக்கு வாய்ப்பிருக்கு.

ராசியான நிறம் மஞ்சள்

ராசியான நிறம் 9

ராசியான நேரம் பிற்பகல் 2 மணி இரவு 7 மணி

சிம்மம்

சிம்மம்

இன்னிக்கு கூடப் பொறந்தவங்க வழியில சில மனக்கசப்பு வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கவனமா நடந்துக்கோங்க. புதுசா ஏதாச்சும் சொத்து பத்து வாங்குற ஐடியா இருந்தா கொஞ்சம் அதை ஒத்திப் போடுறது நல்லது. பிசினஸ்ல இடைஞ்சல் பண்ணிட்டு இருந்த எதிரிங்களோட இம்சை கொஞ்சம் குறையலாம். இன்னிக்கு உங்களோட வரவுக்கு மீறின செலவுங்க வந்து உங்க கையை கடிக்கலாம். கொஞ்சம் சாமியை கும்பிட்டு வாங்க, நல்லதே நடக்கும்.

ராசியான நிறம் வெள்ளை

ராசியான எண் 8

ராசியான நேரம் பிற்பகல் 12 மணி இரவு 7 மணி

கன்னி

கன்னி

இன்னிக்கு உங்க ராசிக்கு 11ஆவது வீட்டுல சந்திரன் உக்காந்திருக்கார். அதனால, பிசினஸ் பண்றவங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சொத்து பத்து சம்பந்தமா நடந்துவந்த கேஸ்ல உங்களுக்கு சாதகமா நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு வேலையில இம்ப்பூர்வ்மெண்ட் இருக்கும்.

ராசியான நிறம் அடர் பச்சை

ராசியான எண் 24

ராசியான நேரம் காலை 9 மணி இரவு 8.30 மணி

துலாம்

துலாம்

இன்னிக்கு ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு எதிர்பாத்துக்கிட்டு இருந்த ட்ரான்ஸ்பர் கிடைக்க வாய்ப்பிருக்கு. குடும்பத்துலயும் பசங்களால இருந்துவந்த சங்கடங்கள் காணாம போயிடும். கவர்ன்மெண்ட் உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு எதிர்பாத்துக்கிட்டு இருந்த சலுகைங்க கிடைச்சிடும். பிசினஸ் பண்றவங்களுக்கு, இப்ப இருக்குற ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி லாபம் கிடைச்சிடும். அதனால சேமிப்பும் கூடிடும்.

ராசியான நிறம் ப்ளூ

ராசியான எண் 16

ராசியான நேரம் மதியம் 1.30 பிற்பகல் 3.30 மணி

விருச்சிகம்

விருச்சிகம்

பிசினஸ் பண்றவங்களுக்கு நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். சில பேர் புதுசா வண்டி வாகனம் வாங்க யோகம் இருக்கு. உங்க பிரச்சனைங்க குறையுறதுக்கு சொந்தக்காரங்க ஒத்தாசையா இருப்பாங்க. இன்னிக்கு ரொம்பவே சுறுசுறுப்பா இருக்குறதுனால, ரொம்ப கஷ்டமான வேலையையும் அசால்ட்டா செஞ்சி முடிச்சிடுவீங்க.

உங்க ராசியான நிறம் பிங்க்

ராசியான நம்பர் 2

ராசியான நேரம் மதியம் 1.30 இரவு 8 மணி

தனுசு

தனுசு

இன்னிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, நீங்க இருக்குற இடத்தை தேடி வம்பு வழக்குங்க வந்து வாய்க்கும். வாயை கொடுத்து வம்புல மாட்டிக்காதீங்க. அப்புறம் சேதாரம் ஜாஸ்தியாயிடும். கவனமா இருங்க. முடிஞ்ச வரைக்கும் இன்னிக்கு நீங்க சாமிக்கு மவுன விரதம் இருக்குற மாதிரி அமைதியா இருங்க. பிசினஸ்ல தேவையில்லாம புதுசா இண்வெஸ்ட் பண்ணி சிக்கல்ல மாட்டிக்காதீங்க.

ராசியான நிறம் ஆரஞ்ச்

ராசியான எண் 3

ராசியான நேரம் பிற்பகல் 2.40 மணி மாலை 4 மணி

மகரம்

மகரம்

மகர ராசிக்காரங்களே, இன்னிக்கு கல்யாணம் பண்றது சம்பந்தமா பேச்சுவார்த்தை நல்லவிதமா முடிஞ்சிடும். ஆஃபீஸ்ல உத்தியோகம் பாக்குறவங்களுக்கு புது நண்பரோட அறிமுகம் கிடைச்சிடும். எதிர்பாத்துக்கிட்டு இருந்த ஒத்தாசை கிடைச்சிடும். பூர்வீக சொத்து பத்து சம்பந்தமா நல்லது நடக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. இன்னிக்கு நீங்க எடுத்த காரியத்தை நல்லவிதமா செஞ்சி முடிச்சிடுவீங்க.

ராசியான நிறம் ப்ரௌன்

ராசியான எண் 7

ராசியான நேரம் காலை 6.15 மணி காலை 11.30 மணி

கும்பம்

கும்பம்

இன்னிக்கு, காலங்காத்தாலயே நல்ல செய்தி உங்க காதுக்கு வந்து சேரும். பிசினஸ் பண்றவங்களுக்கு ஃப்ரண்ட்ஸோட ஒத்தாசையால பிசினஸ்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். கொரோனா பீதியால, வீட்டுல இருந்தே வேலை பாக்குறவங்களுக்கு எதிர்பாத்துட்டு இருக்குற ப்ரமோஷன் கிடைச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் புளு

அதிர்ஷ்ட எண் 15

அதிர்ஷ்ட நேரம் மாலை 4 மணி இரவு 9.20 மணி

மீனம்

மீனம்

இன்னிக்கு உங்க ராசிக்கு அஞ்சாவது வீட்டுல சந்திரன் உக்காந்திருக்காரு. அதனால, பசங்களோட ஹெல்த்துல கொஞசம் அக்கறை காட்டுறது நல்லது. சொந்தக்காரங்க கிட்ட அநாவசியமா பேச்சுவார்த்தையை வளக்காதீங்க. அதனால மனஸ்தாபம் தான் வரும். கவனமா இருங்க. ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்க கூட வேலை பாக்குறவங்க கிட்ட அனுசரிச்சி போறது நல்லது. பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல் நார்மலா இருக்கும். செலவுங்களை சமாளிக்க கைமாத்து கடன்னு வாங்க தோணும். கவனமா இருங்க.

ராசியான நிறம் : பர்ப்பிள்

ராசியான எண் : 12

ராசியான நேரம் : மதியம் 12.45 மாலை 6 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, April 2, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion