Latest Updates
-
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்
இன்றைய ராசிப்பலன் (27.05.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டிய நாள்…
இன்று மேஷம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 27 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...
இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மேஷம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 27 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...


மேஷம்
பணத்தைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். விரைவான பணம் சம்பாதிக்க, தவறான பாதையை பின்பற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். ஒரு முக்கியமான பணியை முடிக்க பல நாட்களாக கடுமையாக உழைத்ததற்கான நல்ல பலனைப் பெற வாய்ப்புள்ளது. முதலாளி உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். உணவகத்துடன் தொடர்புடையோருக்கு இன்று ஏமாற்றமான நாளாக இருக்கும். வணிகத்தின் மந்தநிலை உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். உடல்நலம் குறித்து அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை

ரிஷபம்
உணவுப் பொருட்களை வர்த்தகம் செய்வோருக்கு, இன்று மிகவும் கடினமாக இருக்கும். சிறு கவனக்குறைவால் தவறான விளைவை அனுபவிக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் இன்று சில துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சக பணியாளர்கள் சிலர் உங்கள் முக்கியமான சில வேலைகளுக்கு இடையூறு விளைவிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். நிதி நிலை நன்றாக இருக்கும். எந்த பழைய கடனிலிருந்தும் விடுபடலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உடல்நலம் பற்றி பேசும்போது, இன்று காது தொடர்பான பிரச்சனை இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 13
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை

மிதுனம்
இன்று வணிகர்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். இன்று நீங்கள் ஒரு பெரிய வாடிக்கையாளருடன் இணைவதற்கான வாய்ப்பைப் பெறலாம். உங்கள் வணிகத்தில் விரைவில் ஒரு புதிய திருப்பம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, உங்கள் வேலையைப் பற்றி பல எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். எனவே, உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். பண நிலைமை நன்றாக இருக்கும். சேமிப்பதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு நல்லது. இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். மனரீதியாக நீங்கள் போதுமான வலிமையுடன் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

கடகம்
சமீபத்தில் ஒரு புதிய வணிகத்தைத் தொடங்கியர்கள், நல்ல லாபத்திற்காக உங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய தினம் மிகவும் மன அழுத்தமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற விஷயங்களைத் தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. இல்லையெனில் அது மோசமான விளைவை ஏற்படுத்தும். இன்று பொருளாதார முன்னணியில் உங்களுக்கு ஒரு கலவையான முடிவாக இருக்கும். தடைப்பட்ட பணத்தைப் பெற்றிடலாம். ஆனால் செலவுகள் அதிகரிப்பது அனைத்தையும் கெடுக்கும். தந்தையின் உடல்நிலை குறித்து நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள். ஒரு மருத்துவரை அணுகுவதற்கு சாதகமான நாள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை

சிம்மம்
உயர் கல்வி பெற விரும்பும் மாணவர்கள் இன்று தங்கள் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக வெளிநாட்டில் படிக்க விரும்புவோருக்கு ஒரு நல்ல திட்டம் தேவை. இதற்காக கடினமாக உழைக்க வேண்டும். வேலையைப் பற்றி பேசுகையில், நீங்கள் அலுவலகத்தில் முதலாளியுடன் ஒரு முக்கியமான கலந்துரையாடலை மேற்கொள்ளலாம். நம்பிக்கையுடன் உங்கள் பக்கத்தை எடுத்துரைத்தால் நல்லது. வணிகர்களுக்கு லாபம் ஈட்ட நல்ல வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், பெரிய மாற்றங்கள் எதையும் தவிர்க்கவும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, குழந்தைகளிடமிருந்து சில சிக்கல்கள் சாத்தியமாகும். உங்கள் உடல்நலம் குறைவதால் நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

கன்னி
இன்று வணிகர்களுக்கு மிகவும் சவாலான நாளாக இருக்கும். நிதி நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும். மேலும், சில வேலைகள் பாதியில் நிற்கவும் வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள் மீது பொறுப்புகளின் சுமை சற்று அதிகமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. பொருளாதார முன்னணியில் இன்று உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். விலையுயர்ந்த ஒன்றை வாங்க நினைத்தால், இன்று அதற்கு சாதகமான நாள். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். பெற்றோரின் பாசத்தையும் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் சில நாட்பட்ட நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

துலாம்
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய சச்சரவுகள் இருக்கும். அன்புக்குரியவர்களுடன் தவறான புரிதலை அதிகரிப்பது உறவில் முறிவுக்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். வேலையைப் பற்றி பேசுகையில், உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் உங்கள் பணியில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் வேலையைச் செய்வதற்கான புதிய வழிகளையும் அவர்கள் பெரிதும் பாராட்டுவார்கள். விரைவில் நீங்கள் ஒரு பெரிய வெற்றியை பெறுவீர்கள். வர்த்தகர்களின் பொருளாதார நிலை மேம்படக்கூடும். குறிப்பாக போக்குவரத்தில் பணிபுரிபவர்களுக்கு, இன்று சிறிது நிவாரணம் கிடைக்கும். பணத்தின் அடிப்படையில் இன்று இயல்பை விட சிறப்பாக இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, கர்ப்பிணிப் பெண்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் 10:00 மணி வரை

விருச்சிகம்
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் எந்த முக்கியமான வேலையும் தடைபடக்கூடும். இருப்பினும், உயர் அதிகாரிகளின் உதவியுடன், எந்த பிரச்சனையானாலும் விரைவில் தீர்க்கப்படும். வணிகர்கள் இன்று திடீரென பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுடைய இந்த பயணம் மிகவும் லாபகரமானதாக இருக்கும். இன்று, மின்னணு ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் தங்கள் கடின உழைப்பின் நல்ல முடிவுகளைப் பெறலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு வலுவான வாய்ப்பு உள்ளது. பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். புதிய வருமான ஆதாரத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையுடன் எந்தவொரு சர்ச்சைக்குரிய சிக்கல்கள் பற்றியும் விவாதிக்காதது நல்லது. இல்லையெனில், இது உங்கள் உறவில் கசப்பை அதிகரிக்கும். உங்களுக்கு ஏதேனும் உடல் வலி பிரச்சனை செய்தால், இன்று உங்கள் பிரச்சனை அதிகரிக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் 11:00 மணி வரை

தனுசு
இந்த பரவலான தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு நீங்கள் இன்னும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்ப்பது நல்லது. வேலையைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு கூடுதல் வேலை ஒதுக்கப்படலாம். இருப்பினும், உங்கள் பணிகள் அனைத்தும் சரியான நேரத்தில் முடிக்கப்படும். வணிகர்கள் நிறைய ஓடிய பிறகு இன்று பயனடையலாம். உங்கள் வணிகத்தில் சில சாதகமான மாற்றங்களும் சாத்தியமாகும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். திடீரென்று சில நல்ல செய்திகளைக் காணலாம். உடல்நிலை பற்றி பேசுகையில், இன்று பெரிய பிரச்சனை எதுவும் இல்லை.
அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை

மகரம்
இன்று பொருளாதார முன்னணியில் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும். உங்கள் நிதி நிலைமையை உயர்த்தக்கூடிய ஒரு பெரிய பொருளாதார நன்மையைப் பெறலாம். நீங்கள் ஒரு தொழிலதிபர் மற்றும் இன்று ஒரு பெரிய பேரம் பே போகிறீர்கள் என்றால், மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனையை உத்தியோகஸ்தர்கள் பின்பற்ற வேண்டும். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். இன்று குடும்பத்துடன் நேரத்தை செலவிட ஒரு வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் வெளிப்படையாக இருங்கள். அவர்களிடம் பொய் சொல்வதைத் தவிர்க்கவும். உங்களுக்கு ஒற்றைத் தலைவலி புகார் இருந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 14
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9 மணி வரை

கும்பம்
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அதிகம் பேசுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் நீங்கள் இன்று சிக்கலில் சிக்கக்கூடும். முதலாளி இன்று உங்கள் மீது ஒரு கண் வைத்திருக்கலாம். இன்று, உணவுத் துறை சார்ந்த வணிகர்கள் நிதி ரீதியாக பயனடையலாம். தடைப்பட்ட லாபத்தையும் பெறலாம். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், உங்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முட்டாள்தனமான விஷயங்களில் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் பெற்றோர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் வழிபாடு தளங்களுக்கு செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை

மீனம்
இன்று உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மீது அதிக வேலை அழுத்தம் கொடுப்பது சரியல்ல. இதனால் உங்கள் உடல்நலம் மேலும் பலவீனமடையக்கூடும். உடல்நலம் தொடர்பான மிகச்சிறிய விஷயங்களைக் கூட புறக்கணிக்காதீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆனால் இன்று செலவுகள் சற்று அதிகரிக்கக்கூடும். திடீரென்று, உங்கள் குழந்தைகள் ஒரு பெரிய கோரிக்கையை உங்களிடம் வைக்கலாம். இன்று குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற அதிக செலவு செய்யக்கூடும். வியாபாரிகள் பெரிய முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். முக்கியமான வணிக முடிவுகளை எடுக்க இன்றைய தினம் பொருத்தமானதல்ல. நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதில் உத்தியோகஸ்தர்கள் பரபரப்பாக இருப்பார்கள். உங்கள் உடல்நலம் பற்றி பேசினால், உடற்சோர்வு இன்று அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை



Click it and Unblock the Notifications