Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...!
இந்த 4 ராசிக்காரங்களுக்கு நிறைய பணம் கிடைக்குமாம்...
இன்று பிப்ரவரி 27 ஆம் நாள் சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் இருக்கிறது. இந்த 2 ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம்.
இன்று பிப்ரவரி 27 ஆம் நாள் சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் இருக்கிறது. இந்த 2 ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம். இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்களே சந்திரன் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குருவாரமான இன்று உங்களுக்கு சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. இன்று நீங்க எடுக்கிற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நன்மைகள் நடைபெறும் நாள். புதிய எலட்க்ரானிக் பொருட்கள் வாங்குவீர்கள். இன்றைக்கு நீங்க எடுக்கிற காரியம் வெற்றி பெறும். நண்பர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்க. வீண் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். அப்பா வழி உறவுகளால் பிரச்சினைகள் ஏற்படும் கவனம். இழுபறியான காரியங்கள் முடிவுக்கு வரும். சக ஊழியர்களின் விசயங்களில் தலையிட வேண்டாம்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
அதிர்ஷ்டமான நேரம் : காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை

ரிஷபம்
ரிஷபம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். இன்றைக்கு செலவுகள் வரும். பதவியில் புரமோசன், டிரான்ஸ்பர் தேடி வரும். உங்களுக்கு செவ்வாய் பகவானால் சஞ்சலம் வரும். நீங்க முருகப்பெருமானை வணங்குங்கள் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வேகம் வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். உங்களுக்கு இன்றைக்கு பணவரவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் தகுந்த முன்னெச்சரிக்கை தேவை பழைய கடன்கள் தீரும். மாணவர்களுக்கு பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
அதிர்ஷ்டமான நேரம் : காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களே இன்றைய தினம் உங்களுக்கு கடவுளின் ஆசி உங்களுக்கு கிடைக்கிறது. தடை தாமதங்கள் வந்தாலும் நன்மைகள் நடைபெறும். வேலை செய்பவர்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட்டாலும் நன்மைகள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். எதிரிகள் மூலம் ஏற்படும் பிரச்சினை தீரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் தீரும். பணவரவு அதிகமாகும், செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்டமான எண் : 7
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை
அதிர்ஷ்டமான நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

கடகம்
கடகம் ராசிக்காரர்களே உங்க ராசி அதிபதி சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நன்மைகள் பெருகும். வெளிநாட்டு யோகம் தேடி வருகிறது. நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு கடல் கடந்து செல்லும் யோகம் வருகிறது. சிலருக்கு வெளிநாட்டு கல்வி படிக்க நேரம் கூடி வருகிறது. செல்வாக்கும் சொல் வாக்கும் உங்களுக்கு இன்றைக்கு அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை ஏற்படும் இதனால் சோர்வும் ஏற்படும். தம்பதியர் இடையே சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் நெருக்கம் கூடும். பணவரவு தாராளமாக இருக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்டமான நிறம் : இளம் பச்சை
அதிர்ஷ்டமான நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

சிம்மம்
சந்திரன் உங்க விரைய ஸ்தான அதிபதி. இந்த நாளில் சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்றைக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்கிறது. இன்றைக்கு பேச்சில் கோபம் வேண்டாம் நிதானமாக இருங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருங்க. அலுவலகத்தில் நெருக்கடி ஏற்படும் என்பதால் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். வீட்டில் நிதானத்தை இழக்க வேண்டாம். யாராக இருந்தாலும் நாவடக்கம் அவசியம். வேலைக்கு செல்பவர்களுக்கு சலுகைகள் கூடும். கூடுதல் செலவுகள் வந்தாலும் சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்டமான நிறம் : சிவப்பு
அதிர்ஷ்டமான நேரம் : இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை

கன்னி
இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாள். உங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு தொடர்பான வேலைகள் நன்மையில் முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும் சந்தோஷம் அதிகமாகும். மாணவர்களுக்கு பாடங்களில் ஆர்வம் குறையும் மனதை அலைபாய விடவேண்டாம். வேலை செய்பவர்களுக்கு இன்று ரொம்ப நல்ல நாள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும், இன்று காதலான நாள். புதிய ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 11
அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்டமான நேரம் : பிற்பகல் 02 மணி முதல் மாலை 5 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பண விவகாரங்களில் இன்று வரவும் செலவும் ஒரே மாதிரியாக இருக்கும். கடன் பிரச்சினை நீங்கும். மாணவர்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். கல்வியில் அக்கறை செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்டமான நிறம் : சிவப்பு
அதிர்ஷ்டமான நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பிள்ளைகள் வழியே பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போங்க. சந்தோஷம் அதிகமாக இன்றைய தினம் உங்கள் அன்பானவரிடம் விட்டுக்கொடுத்து போங்க. வியாபாராத்தில் லாபம் ஏற்படும். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வமாக இருங்கள். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் நீங்கள் இன்று உற்சாகமாக வேலை செய்வீர்கள். பொருளாதார நிலை இன்று சுமாராகவே இருக்கும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை
அதிர்ஷ்டமான நேரம் : இரவு 8.45 மணி முதல் இரவு 11 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு பணவரவு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் இன்றைக்கு சந்தோஷமாக இருப்பீர்கள். திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். அலுவலகத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் வரும். சக வியாபாரிகளால் போட்டி ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்களில் ஆர்வம் குறையும். பெண்களுக்கு இன்றைக்கு மகிழ்ச்சியான நாள். பெண்களுக்கு பணிச்சுமை கூடும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 12
அதிர்ஷ்டமான நிறம் : நீலம்
அதிர்ஷ்டமான நேரம் : மாலை 5.45 மணி முதல் இரவு 7 மணி வரை

மகரம்
மகரம் ராசிக்காரர்களே, இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு மறைந்து நெருக்கம் ஏற்படும். பிள்ளைகள் வழியே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். பொருளாதார நிலைமை உங்களுக்கு இன்றைக்கு சாதகமாக இருக்கும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலர் வெளியூர் பயணம் செல்வீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பெண்களுக்கு தேவையான பணம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 12
அதிர்ஷ்டமான நிறம் : நீலம்
அதிர்ஷ்டமான நேரம் : மாலை 5.45 மணி முதல் இரவு 7 மணி வரை

கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாள். சந்திரன் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்களுடைய வீட்டில் சுப நிகழ்ச்சிகள் பற்றி பேசுவார்கள். மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். உறவினர்களின் வருகையால் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மாலையில் சிக்கல்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். ஏற்கனவே வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு இன்று நல்ல செய்தி ஒன்று தேடி வரும். வேலைக்கு செல்லும் பெண்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலுவலகத்தில் உயரதிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுக்கு பணவரவு அற்புதமாக இருக்கும் தொழிலில் போட்டி இருந்தாலும் அதை எளிதில் எதிர் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட எண் : 13
அதிர்ஷ்டமான நிறம் : கரும்பச்சை
அதிர்ஷ்டமான நேரம் : இரவு 9 மணி முதல் இரவு 12 மணி வரை

மீனம்
மீனம் ராசிக்காரர்களே, சந்திரன் இன்றைய தினம் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு இன்றைக்கு பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளால் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமாக வேலைகளை முடிப்பீர்கள். சந்தோஷமான நாளாக இன்றைக்கு உங்களுக்கு அமைகிறது. அலுவலகத்தில் புரமோசனும், சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் பற்றிய தகவல் வரும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துங்கள். குருவின் அருளால் உங்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். சொந்த பந்தங்களினால் உங்களின் மனதில் உற்சாகம் கூடும். பெண்கள் நிதானமாக இன்று பேசுங்கள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்டமான நிறம் : இளம் மஞ்சள்
அதிர்ஷ்டமான நேரம் : காலை 5.45 மணி முதல் காலை 9 மணி வரை



Click it and Unblock the Notifications











