Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
இந்த ராசிக்காரங்களுக்கு வேலையில பிரச்சினை வரலாம் எச்சரிக்கை...
இன்றைய தினம் யாருக்கு பணம் வரும், யாருக்கு செலவு வரும் யாருடைய வீட்டில் பிரச்சினை வரும் என்று யோசிக்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன் பதில் தருகிறது.
இன்றைய தினம் யாருக்கு பணம் வரும், யாருக்கு செலவு வரும் யாருடைய வீட்டில் பிரச்சினை வரும் என்று யோசிக்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன் பதில் தருகிறது. இன்றைய தினம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த பிரச்சினையிலும் தலையிட வேண்டாம் கவனமாக இருக்கவும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரங்களே, இன்னிக்கு கல்யாணப் பேச்சுவார்த்தைங்க நல்ல விதமா முடியும். பண வரத்தும் இருக்கும். லவ் பண்றவங்களுக்கு நாள் கலகலப்பா நகரும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்கிறதுனால, செய்யுற முயற்சிங்கள்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்துலயும் எல்லோரும் சந்தோஷமா இருப்பாங்க. ஹெல்த் கண்டிஷன் அற்புதமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : நண்பகல் 12:55 முதல் இரவு 7:00 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரங்களே, இன்னிக்கு சொந்தக்காரங்களால மனத்தாங்கல் வந்துடும். கொஞ்சம் விட்டுக்கொடுத்து போனீங்கன்னா எல்லாமே சுமூகமா நடக்கும். இன்னிக்கு நீங்க எடுக்குற முயற்சிங்களுக்கு குடும்பத்துல இருக்குறவங்க சப்போர்ட் பண்ணுவாங்க. இன்னிக்கு பணவரத்தும் அமோகமா இருக்கும். ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 6
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 10:00 மணிவரை

மிதுனம்
மிதுன ராசிக்காரங்களே, இன்னிக்கு உத்தியோகத்துல சீனியர் அதிகாரிங்களோட அன்பும் சப்போர்ட்டும கிடைக்கும். கூடப்பொறந்தவங்களால உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும். பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நார்மலா இருக்கும். பிசினஸ் பண்றவங்க புதுசு புதுசா யுக்திகளை பயன்படுத்தி லாபத்தை பெருக்குவீங்க. சுபச் செலவுங்களும் இன்னிக்கு உண்டு.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 30
சாதகமான நேரம் : விடிகாலை 4:10 முதல் பிற்பகல் 3:50 மணிவரை

கடகம்
கடக ராசிக்காரங்களே, இன்னிக்கு சொந்தக்காரங்க வர்றதுனால குடும்பத்துல சுபச் செலவுங்க கூடிடும். உத்தியோகத்துலயும் அநாவசிய அலைக்கழிப்புகள் இருக்கும். அதனால மன உளைச்சல் உண்டாகலாம். கூட வேலை பாக்குறவங்களை அனுசரிச்சி போறது நல்லது. இன்னிக்கு பணவரத்துக்கு மேல செலவுங்க வந்துடும். பிசினஸ்ல லாபம் கிடைக்கும். லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு ரொமான்ஸ் கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : மாலை 6:15 முதல் இரவு 11:00 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரங்களே, இன்னிக்கு உத்தியோகத்துல இருந்து வந்த போட்டி பொறாமைங்க காணாம போகும். சீனியர் அதிகாரிங்களோட சப்போர்ட்டும் உங்களுக்கு உண்டு. குடும்ப வாழ்க்கையும் குதூகலமா போகும். பிசினஸ் பண்றவங்களுக்கு லாபம் பெருகிடும். எதிர்பாத்துட்டு இருந்த உதவி, ஒத்தாசை ரொம்ப ஈசியா கிடைச்சிடும். ஃபைனான்ஸ் பொசிஷனும் அற்புதமா இருக்கும்கிறதுனால, குடும்பத்தோட வெளியூர் பிரயாணம் பண்றதுக்கு வாய்ப்பிருக்கு. இருந்தாலும் யோசிச்சி முடிவெடுக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : மாலை 6:05 முதல் இரவு 9:30 மணிவரை

கன்னி
கன்னி ராசிக்காரங்களே, இன்னிக்கு வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால சுப காரியங்கள் நடந்துடும். பிள்ளைங்களும் ரொம்ப பொறுப்போட நடந்துக்குவாங்க. உத்தியோகத்துல இருக்குறவங்க கூட வேலை பாக்குறவங்களை அனுசரிச்சி போறது நல்லது. தன்மையா பேசி பழகுங்க. பூர்வீக சொத்து பத்து மூலமா உங்களுக்கு லாபம் கிடைக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு ஃபைனான்ஸ் பொசிஷன் அற்புதமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 6
சாதகமான நேரம் : காலை 9:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

துலாம்
துலா ராசிக்காரங்களே, இன்னிக்கு உத்தியோகத்துல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். குடும்பத்துல சின்னச்சின்னதா பிரச்சனைங்க வரலாம். கவனமா பேசி பழகுங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு வியாபாரத்துல எதிர்பாத்த லாபம் கிடைக்குறதுல சிக்கல் உண்டாகலாம். நல்லா யோசிச்சி முடிவு பண்ணினா தண்டச்செலவுங்க குறையும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 3
சாதகமான நேரம் : காலை 8:25 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரங்களே, இன்னிக்கு லேவா தேவி விஷயத்துலு எச்சரிக்கையோட நடந்துக்குறது நல்லது. இன்னிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால யார் கிட்டயும் வம்பு தும்பு வச்சிக்காதீங்க. வீட்டுலயும் மத்தவங்க விஷயத்துல தலையிடாம ஒதுங்கி இருக்குறது நல்லது. கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வீட்டை விட்டு வெளிய போகாதீங்க.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : விடிகாலை 5:20 முதல் மாலை 5:00 மணிவரை

தனுசு
தனுசு ராசிக்காரங்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்குள்ளாற சந்தோஷம் கூடிடும். இன்னிக்கு சந்திரனோட பார்வை உங்க ராசி மீது விழுறதுனால, நீங்க நெனச்ச காரியம் நல்லபடியா நடந்து முடியும். சுபகாரிய முயற்சிங்கள்லயும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பிள்ளைங்களோட இருந்து வந்த மனஸ்தாபம் மறையும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் இரவு 8:05 மணிவரை

மகரம்
மகர ராசிக்காரங்களே, இன்னிக்கு ரொம்பவே மன உறுதியோட இருப்பீங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு லாபம் அமோகமா இருக்கும். நோய் நொடியும் ஓடிப்போகும். கடன்களும் கறைஞ்சிடும். கூடவே உங்களோட சேமிப்பும் கூடிடும். கொரோனா பீதி இருக்குற இந்த சந்தர்ப்பத்துல, எதுக்காகவும் வீட்டை விட்டு வெளிய போகாதீங்க.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : மாலை 6:15 முதல் இரவு 11:00 மணிவரை

கும்பம்
கும்ப ராசிக்காரங்களே, இன்னிக்கு பண வரத்து சுமாரா தான் இருக்கும். சின்னமா செலவழிச்சா, கடனை அடைக்கலாம். பண விஷயத்துல கணவன் மனைவிக்குள்ளாற சின்னச் சின்ன சண்டைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா நடந்துக்கப்பாருங்க. லேவா தேவி மேட்டர்ல இழுபறி நிலை உண்டாகலாம். பிசினஸ் பண்றவங்க வீண் பிரச்சனைங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 35
சாதகமான நேரம் : மாலை 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

மீனம்
மீன ராசிக்காரங்களே, இன்னிக்க எந்த ஒரு விஷயத்துலயும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து நிதானாமா பேசி பழகுனீங்கன்னா பிரச்சனை வராம அவாய்ட் பண்ணலாம். குடும்பத்துலயும் சின்னச்சின்னதா சண்டை சச்சரவுங்க வரலாம். கவனமா இருங்க. பிசினஸ்லயும் எதிர்பாக்காம வீண் பிரச்சனைங்க வரலாம். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல் அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் இரவு 8:05 மணிவரை



Click it and Unblock the Notifications