For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு இந்த ராசிக்காரங்க மனைவி கிட்ட வாக்குவாதம் பண்ணாதீங்க...

இன்றைக்கு உங்களுக்கு எப்படி இருக்கும் வெற்றியா தோல்வியா? நமக்கு பணம் வருமா? யாராவது சண்டைக்கு வருவாங்களா? வீட்ல சூழ்நிலை எப்படி இருக்கும், யாரெல்லாம் ஒய்ஃப் கிட்ட வாக்குவாதம் பண்ணக்கூடாது இப்படி பல கே

|

இன்றைக்கு உங்களுக்கு எப்படி இருக்கும் வெற்றியா தோல்வியா? நமக்கு பணம் வருமா? யாராவது சண்டைக்கு வருவாங்களா? வீட்ல சூழ்நிலை எப்படி இருக்கும், யாரெல்லாம் ஒய்ஃப் கிட்ட வாக்குவாதம் பண்ணக்கூடாது இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இன்றைய ராசிபலன்கள் படிங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னிக்கு உங்க பெர்சனல் லைஃப்ல நடக்குற பிரச்சனையினால ரொம்பவே டென்ஷன்ல இருப்பீங்க. இந்த டென்ஷன் உங்க மனசையும் உடம்பையும் ரொம்பவே பாதிக்க கூடும். அந்த சமயத்துல கொஞ்சம் அமைதியா நடந்துக்க பாருங்க. உங்களோட நடவடிக்கையையும் ரொம்ப சாஃப்டா மாத்திக்கோங்க. உங்க ஒய்ஃப் கிட்ட ஏதாவது ஊடல் இருந்தா, கடுப்பா பேசுறதுக்கு பதிலா ரொம்ப அன்போட பேசுங்க. உங்க மனசுல இருக்குறதை அவங்க கிட்ட மனசு விட்டு சொல்லிடுங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு கொஞ்சம் சிக்கலான நாளா அமையலாம். உங்க மனசுல இருக்குறதை லவ்வர்கிட்ட ஓப்பனா பேசிடுங்க. எதையும் மூடி மறைக்காதீங்க. உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷன் ரொம்ப ஸ்ட்ராங்கா மாறனும்னா, அதுக்கான ப்ளான் என்னன்னு யோசனை பண்ணி அதை செயல்படுத்த பாருங்க. அப்பிடி பண்ணுனா எதிர்காலத்துல உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னும் ஸ்ட்ராங்கா மாறிடும்.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

அதிர்ஷ்ட எண் : 1

சாதகமான நேரம் : நண்பகல் 12:40 முதல் மாலை 6:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்னிக்கு உங்களுக்கு ஏத்த இறக்கமா தான் இருக்கும். எதுக்கெடுத்தாலும் கோபப்படுவீங்க. அது உங்க வீட்டோட சூழ்நிலையையும் ரணகளமா மாத்திடும். போதாக்குறைக்கு வீட்டுல இருக்குறவங்களும் உங்களுக்கு குடைச்சல் கொடுக்கலாம். இன்னிக்கு ஃபைனான்ஸ் பொசிஷன் சுமாராதான் இருக்கும். கையிருப்பை மனசுல வச்சிக்கிட்டு செலவு பண்ணுனீங்கன்னா தப்பிச்சீங்க. இதை புரிஞ்சிகிட்ட உங்க ஒய்ஃபும் உங்களுக்கு சப்போர்ட்டிவா இருப்பாங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க, கூட வேலை பாக்குறவங்க கூட சேர்ந்துகிட்டு அரட்டை அடிக்காம, சின்சியரா வேலை பாத்தா நல்லது. அதோட, இன்னிக்கு உங்க சீனியர் கூட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா பேசுங்க. எதையும் யோசிச்சி பேசுனா நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 17

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் இரவு 8:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்னிக்கு நீங்க எடுக்குற எந்த முடிவையும் உங்களை பெத்தவங்களும், வீட்டுல இருக்குறவங்களும் ஏத்துக்க மாட்டாங்க. அதனால கொஞ்சம் புத்திசாலித்தனமா யோசிச்சி நல்ல முடிவா எடுக்க பாருங்க. யாரையாவது லவ் பண்றீங்கன்ன அதை உடனடியா அவங்ககிட்ட சொல்லாதீங்க. கொஞ்சம் பொறுமையா இருங்க. கல்யாணம் ஆனவங்க ஒய்ஃப் கூட தேவையில்லாம வாக்குவாதம் பண்றதை அவாய்ட் பண்றது நல்லது. இல்லேன்னா வாக்குவாதம் முத்திபோய் சண்டையில முடிய சான்ஸ் இருக்கு. அதனால கவனமா இருக்க பாருங்க. எந்த வேலையையும் உருப்படியா பாக்க முடியாது. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. கையிருப்பும் கரையாது. வேலை செய்யுறவங்களுக்கு ஒரு இனிப்பான தகவல் வர வாய்ப்பிருக்கு. நீங்க எதிர்பாத்துட்டு இருக்குற ப்ரமோஷன் கூடிய சீக்கரம் கிடைக்க வாய்ப்பிருக்கு.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 5

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:40 மணிவரை

கடகம்

கடகம்

இன்னிக்கு உங்க பெர்சனல் லைஃப்ல இருந்துட்டு வந்த ஒரு சிக்கலான விஷயத்தை முடிவுக்கு கொண்டுட்டு வர்றதுனால ரொம்ப ரிலாக்ஸா ஃபீல் பண்ணுவீங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு சாதகமான நாளா அமைஞ்சிருக்கு. நீங்க யாரையாவது லவ் பண்ணுனீங்கன்னா, அவங்க கிட்ட இன்னிக்கு நீங்க உங்க லவ் மேட்டரை தாராளமா சொல்லலாம். அவங்க கிட்ட இருந்தும் உங்களுக்கு ஃபேவரான பதில் தான் கிடைக்கும், தைரியமா லவ்வை சொல்லுங்க. உங்க லவ் ப்ரபோஷலை வீட்டுல இருக்குறவங்களும் சம்மதிப்பாங்க. கல்யாணம் ஆனவங்களுக்கு இன்னிக்கு நாள் அருமையா இருக்கு. ஒய்ஃப் கூட நிம்மதியா டைம் ஸ்பெண்ட் பண்ணலாம். பண விஷயத்தை பொருத்த மட்டில் இன்னிக்கு கொஞ்சம் நிதானமா இருங்க. அவசரப்பட்டு எதுலயும் இண்வெஸ்ட் பண்ணாதீங்க. இல்லேன்னா, ஒரு பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்குது. இன்னிக்கு ஆஃபீஸ்லயும் கொஞ்சம் சிக்கலா தான் இருக்கும். வேலையை முடிக்க முடியாம சங்கடப்படுவீங்க. உங்க அம்மாவோட ஹெல்த் கண்டிஷனையும் அப்பப்போ கொஞ்சம் கவனிச்சிக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 18

சாதகமான நேரம் : காலை 7:00 முதல் மாலை 6:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்னிக்கு உங்க மனசுல நெகடிவ்வான எண்ணங்கள் தான் ஓடிட்டு இருக்கும். நெகடிவ் எண்ணங்களை தொரத்தனும்னா, மனசை கொஞ்சம் சஞ்சலப்படாம கட்டுப்படுத்தி வச்சிக்கோங்க. ஏன்னா இன்னிக்கு உங்க லைஃப் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான விஷயத்துல முடிவு எடுக்கவேண்டிய கட்டாயத்துல இருக்கீங்க. அதனால, முடிவெடுக்குறதுக்கு முன்னாடி, வீட்டுல இருக்குற பெரியவங்க கிட்ட போய் பேசி அவங்களோட ஐடியாவ கேட்டு அதுப்படி முடிவெடுங்க. பழைய வேலை ஏதாச்சும் இருந்தா அது இன்னிக்கு முடிஞ்சிடும். ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு நல்லா இருக்கும். இருந்தாலும் உங்க ஃப்ரண்ட்ஸுங்க செலவுகளை இழுத்துவிட்டுடுவாங்க. பிசினஸ் பண்றவரா இருந்தா புது தொழில்லயோ அல்லது இண்வெஸ்ட் பண்றது நல்ல லாபத்தை கொடுக்கும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு சின்ன சின்ன இடைஞ்சல் ஏற்படலாம். எதுக்கும் உங்க சீனியரை ஹெல்ப்புக்கு கூப்பிட்டுக்கிறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : கரும் பச்சை

அதிர்ஷ்ட எண் : 31

சாதகமான நேரம் : காலை 9:45 முதல் இரவு 10:10 மணிவரை

கன்னி

கன்னி

இன்னிக்கு ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு ரொம்ப முக்கியமான நாளா இருக்கும். பெருசா அச்சீவ் பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு. அதைப் பாத்து உங்க சீனியர் உங்களை ரொம்பவே அப்ரிஷியேட் பண்ணுவார். அத்தோட அது உங்க ப்ரமோஷனுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும். ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு நல்லாவே இருக்கு. ஏற்கனவே ஃபைனான்ஸ் பிரச்சனையினால தடங்கல்ல இருந்த வேலையை இன்னிக்கு முடிச்சிடுவீங்க. கல்யாணம் ஆனவங்களுக்கு இன்னிக்கு நாள் அற்புதமா இருக்குது. ஒய்ஃப் கூட எங்கயாவது பிக்னிக் போய்ட்டும் வருவீங்க. உங்களை பெத்தவங்களுக்கு எல்லோரும் சப்போர்ட் பண்ணுவீங்க. ட்ராவல் பண்றதுக்கு இன்னிக்கு பொருத்தமான நாள். எந்த விஷயத்து ட்ராவல் பண்றீங்களோ அது சுபமா முடியும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் நார்மலா இருக்கு.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை

துலாம்

துலாம்

இன்னிக்கு நெகடிவ் எண்ணம் உள்ளவங்க உங்க நல்ல மனசை புண்படுத்தக்கூடும். ஆனா, நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாம உங்க வேலையில கவனம் செலுத்துங்க. எல்லாமே நல்லபடியா முடியும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் அவ்வளவு நல்லா இல்லை. திடீர்னு மக்கர் பண்ண சான்ஸ் இருக்கு. கவனமா இருங்க. உங்களை நிம்மதியா வச்சிக்க புதுசு புதுசா யோசிச்சி பொழுது போக்குவீங்க. அதனால மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிடும். ஃபைனான்ஸ் விஷயத்துல இன்னிக்கு கொஞ்சம் அலர்ட்டா இருக்க பாருங்க. இல்லேன்னா உங்க கைகாசை இழக்க வேண்டியதிருக்கும். பணத்தை தொலைச்சா திரும்ப அதை சம்பாதிக்கிறதுல எவ்வளவு சிரமம் இருக்குன்னு புரிஞ்சி நடந்துக்கோங்க. உங்க பிசினஸுக்கு உங்க அப்பா சப்போர்ட்டா இருந்தா அவர் மூலமா இன்னிக்கு ஒத்தாசை கிடைக்கும். கல்யாண வாழக்கையில இருக்குற பிரச்சனைங்களை ஒய்ஃப் கூட உக்காந்து பேசி சரி பண்ணுங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 22

சாதகமான நேரம் : காலை 8:20 முதல் இரவு 8:40 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்னிக்கு முழுசா உங்களுக்கு ஃபேவராவே நடக்கும். நீங்க ப்ளான் பண்ணின எல்லா வேலைங்களையும் இன்னிக்கு பக்காவா முடியும்கிறதுனால, ரொம்ப நிம்மதியா ஃபீல் பண்ணுவீங்க. உங்களோட சின்சியரான உழைப்பு உங்களுக்கு நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். பிசினஸ் பண்றவரா இருந்தா, நீங்க எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும். அந்த ரிசல்ட் பிசினஸை டெவலப் பண்றதுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு நல்ல செய்தி கிடைக்கும். ஃபாரின் போறதுதுக்கான எண்ணமும் பூர்த்தியாக வாய்ப்பு இருக்கு. உங்க ட்ராவல் ஆஃபீஸ் சம்பந்தப்பட்டதா இருந்தா, அது சக்ஸஸ்ஃபுல்லா முடியும். இன்னிக்கு உங்க சொந்த லைஃப்ல இருந்த பிரச்சனை சரியாகிடும். அதனால இன்னிக்கு ஃபுல்லா நல்ல மனநிலையிலேயே இருப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 11:10 மணிவரை

தனுசு

தனுசு

இன்னிக்கு உங்க குடும்ப வாழ்க்கையில் சிக்கல் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதை சரியான முறையில ஹேண்டில் பண்ணலேன்னா, அதுவே உங்க லைஃப்ல பெரிய சிக்கல்ல கொண்டு போய் விட்டுடும். அதோட உங்க மன நிம்மதி பறிபோயிடும். அதனால எதையும் நல்லா யோசிச்சி கவனமா செய்யுங்க. எது வந்தாலும் சமாளிக்கணும்கிற முடிவோட தைரியமா இருங்க. இன்னிக்கு எதையும் யோசிக்கமா செலவழிக்காதீங்க. தேவையானதுக்கு மட்டும் செலவழிங்க. இன்னிக்கு மத்தியானதுக்கு மேல வேலை விஷயமா வெளியூர் பிரயாணம் பண்ண வாய்ப்பிருக்கு. லவ் பண்றவங்களுக்குள்ள ஏதாவது சிக்கல் இருந்தா, கொஞ்ச நாள்ல சரியாகிடும். உங்க ஹெல்த் கண்டிஷன் சரியில்லை. உங்க ராசி கட்டங்களும் உங்களுக்கு எதிராவே இருக்கு. அதனால கவனமா இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 30

சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் இரவு 7:30 மணிவரை

மகரம்

மகரம்

இன்னிக்கு மனசு ரிலாக்ஸ் ஆகணும்கிறதுக்காக கோவில், குளம்னு எங்கயாச்சும் போய்ட்டு வர நினைக்கலாம். கடந்த ஒரு வாரமா எதுக்காச்சும் நீங்க கவலைப்பட்டுகிட்டு இருந்தா, அது இன்னிக்கு சரியாகிடும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு, சீனியரோட முழு சப்போர்ட்டும் இருக்குறதுனால வேலையில டென்ஷன் இருக்காது. இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் ரொம்ப நல்லா இருக்கும். இருக்குறதை வச்சி திருப்தி பட்டுக்குவீங்க. உங்களோட தனிப்பட்ட லைஃப்ல இன்னிக்கு ரொம்பவே பிஸியா இருப்பீங்க. ஃபேமிலியோட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது. அதனால உங்க ஒய்ஃப் கூட சின்னதா தகராறு ஏற்பட வாய்ப்பிருக்குது. ஏட்டிக்கு போட்டியா நடந்துக்குவாங்க. வெய்ட்டான பொருள்களை ஹேண்டில் பண்ணும்போது கவனமா இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நேரம் : அதிகாலை 5:15 முதல் நண்பகல் 12:00 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்னிக்கு உங்களுக்கு நாள் அவ்வளவு நல்லாதா இல்லை. அதனால எதுலயும் கொஞ்சம் கவனமா இருங்க.சின்னதா ஏற்படுற இடைஞ்சல் உங்களுக்கு டென்ஷனை கொடுக்கலாம். வீட்டுலயும் தேவையில்லா விஷயத்துக்கெல்லாம் வாக்குவாதம் பண்றதை அவாய்ட் பண்ணுங்க. அதனால உங்க ஃபேமிலி மெம்பர்ஸும் உங்க கூட வாக்குவாதம் பண்றதுக்கு வாய்ப்பிருக்குது. இது உங்க வீட்டோட அமைதியையும் கெடுக்கலாம். அதனால கவனமா இருங்க. இன்னிக்கு ஆஃபீஸ்லயும் நிறைய வேலைங்க குவிஞ்சி கிடக்கும். அதனால ரொம்பவே டென்ஷனாவே இருப்பீங்க. அதோட வீட்டு பிரச்சனையும் சேந்துகிட்டு வாட்டி வதைக்கும். அதனால வேலையே ஓடாது. அதோட உங்க சீனியரும் உங்களை கடுப்படிக்கலாம். பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு சின்னதா இழப்பு ஏற்படலாம். கவனமா இருங்க. இதுக்கு முன்னாடி எடுத்த முடிவுனால, இன்னிக்கு அது நீங்க எதிர்பார்த்த லாபத்தை கொடுக்காம போகலாம். இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் நார்மலா இருக்கு. ஏதாவது திட்டத்துல இண்வெஸ்ட் பண்ற ஐடியா இருந்தா கொஞ்சம் பொறுமைய இருங்க. நிதானமா யோசிச்சி அப்புறமா இண்வெஸ்ட் பண்றது நல்ல பலனை கொடுக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நேரம் : இரவு 7:15 முதல் இரவு 9:00 மணிவரை

மீனம்

மீனம்

இன்னிக்கு உங்களுக்கு அருமையான நாளா இருக்கு. உங்க மனசக்கு பிடிச்சவங்களை சந்திக்கிறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கலாம். அவங்களோட மனசு விட்டு பேசுறதுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்னிக்கு உங்களுக்கு கிரக அமைப்பும் சாதகமா இருக்குறதுனால, அவங்களும் உங்ககிட்ட மனசுவிட்டு பேசுவாங்க. உங்களுக்கு சாதகமாவே பேசுவாங்க. கல்யாணம் ஆனவங்க, இன்னிக்கு ஒய்ஃப் கூட மனசு விட்டு பேச வாய்ப்பு கிடைக்கும். ஆஃபீஸ்லயும் இன்னிக்கு உங்களுக்கு வேலைப்பளு இருக்கும். உங்க சீனியரும் உங்க கிட்ட கொஞ்சம் கடுமையா நடந்துக்க வாய்ப்பிருக்குது. நீங்க எதிர்பார்க்காத சமயத்துல பெரிய பொறுப்பை உங்க கிட்ட ஒப்படைக்கலாம். பண விஷயத்தை பொருத்த வரைக்கும் இன்னிக்கு பிரச்சனை இல்லை. உங்களோட ஃபைனான்ஸ பொசிஷனை இன்னும் ஸ்ட்ராங்க பண்றதுக்கு இருக்குற பணத்தை நல்ல விதமா இண்வெஸ்ட் பண்றது நல்லது. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் நல்லா இருக்கு. இருந்தாலும் ரெஸ்ட் எடுக்க டைம் இல்லாம வேலை பாக்குறதுனால டயர்ட் ஆகிடுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ் சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 3

சாதகமான நேரம் : மாலை 4:30 முதல் இரவு 10:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 25th November 2019 Monday

Check out the daily horoscope for 25th november 2019 monday. Read on...
Story first published: Sunday, November 24, 2019, 20:02 [IST]
Desktop Bottom Promotion