Latest Updates
-
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்!
ஞாயிறு கிழமை இந்த 4 ராசிக்காரர்களுக்கும் ரொம்ப அமோகமான நாள்!
ஞாயிறு கிழமை சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாள். சூரிய பகவானின் ஆசியால் இந்த நாளில் யாருடைய ஆரோக்கியம் நன்றாக இருக்கும் யாருக்கு மருத்துவ செலவுகள் வரும்.
ஞாயிறு கிழமை சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாள். சூரிய பகவானின் ஆசியால் இந்த நாளில் யாருடைய ஆரோக்கியம் நன்றாக இருக்கும் யாருக்கு மருத்துவ செலவுகள் வரும். யாருடைய வருமானம் அதிகரிக்கும் யாருக்கெல்லாம் வீண் செலவுகள் வரும் என்று யோசிக்கிறீர்களா? இன்றைக்கு மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை படியுங்கள் உங்களுடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

மேஷம்
மேஷ ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ் ரீதியா எடுக்குற முயற்சிக்கு அதிரடி வெற்றி கிடைக்கும். நெருக்கமானவங்களோட உதவியோட வர்ற பிரச்சனையை சமாளிப்பீங்க. உங்க பேச்சுல நிதான போக்கு இருக்கவேண்டியது கட்டாயம். வீட்டுல இருக்குறவங்க கூட பேசும்போது கனிவா பேசி, கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. பிசினஸ்ல எதிர்பாத்த லாபம் கிடைக்குறதுல இழுபறி இருக்கும். இன்னிக்கு வரவுக்கு மீறிய செலவு ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் 14
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1.40 மணி - இரவு 09.25 மணி

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ் ரீரியா வரவு செலவு அமர்க்களமா இருக்கும். கொஞ்சம் பொறுமையா இருந்தா எடுக்குற முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்துல சில பேத்துக்கு எதிர்பாத்த ப்ரமோஷன் கிடைக்கும். கூடப்பொறந்தவங்களால நல்லது நடந்துடும். சொந்தக்காரங்க வர்றதுனால குடும்பத்துல சந்தோஷம் கூடிடும். நகை நட்டு வாங்குறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நேரம் : காலை 10.05 மணி - இரவு 10.40 மணி

மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு பணம் கொடுக்கல் வாங்கல்ல கூடுதல் எச்சரிக்கையோட இருந்துக்கோங்க. தொழில், வியாபாரத்துல லாபம் பெருகிடும். பண வரத்து அதிகமா இருந்தாலும், அதுக்கேத்தமாதிரி செலவுகளும் கூடவே தேடி வந்துடும். ரொம்ப நாளா உங்களை எதிரியா நினைச்சவங்களும் இன்னிக்கு ஃப்ரண்டா மாறக்கூடும். உத்தியோகத்துல சில பேருக்கு கவுரவ பதவி தேடி வரும். இன்னிக்கு எந்த வேலையையும் மன சந்தோஷத்தோட செய்வீங்க.
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 12.00 மணி - இரவு 08.00 மணி

கடகம்
கடக ராசி நேயர்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்கு நடுவுல அந்நியோன்யம் கூடும். பிசினஸ்ல இருந்த வந்த போட்டி பொறாமை குறையும். அதோட லாபமும் அதிகமா இருக்கும். பிள்ளைங்க மூலமா சுபச் செய்திகளும் உங்க காதுக்கு வந்துடும். குடும்பத்துலயும் சுப காரிய முயற்சிகள் கைகூடி வரும். உத்தியோகத்துல சீனியர் அதிகாரியால உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் ரொம்ப சிறப்பா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 11
அதிர்ஷ்ட நேரம் : காலை 9.55 மணி - பிற்பகல் 02.00 மணி

சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, இன்னிக்கு கணவன் மனைவுக்கு நடுவுல சின்னச் சின்ன மனஸ்தாபம் வந்து போகும். கொடுத்த கடனும் இன்னிக்கு வசூலாகும். சொந்தக்காரங்க வழியில உங்களுக்கு இனிப்பான செய்திகளும் வந்துடும். குடும்பத்துலயும் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க கூட ஒத்துமை கூடும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் 1
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2.15 மணி - இரவு 7.20 மணி

கன்னி
கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல பணவரவு மந்தகதியா இருக்கும் அதனால, தண்டச் செலவுங்களை அவாய்ட், அத்தியாவசிய செலவுளை மட்டும் பண்ணுனா, பேங்க் பேலன்ஸும் கூடும். சமூகத்துல பெரிய மனுஷங்களோட சப்போர்ட் கிடைக்கும். கணவன் மனைவுக்கு நடுவுல நெருக்கம் அதிகமா இருக்கும். லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு இனிமையான நாளா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நேரம் : மாலை 06 மணி - இரவு 10.45 மணி

துலாம்
துலா ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா புதுசா எந்த முயற்சியும் எடுக்காம அமைதியா இருக்குறது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல்ல மத்தவங்களை நம்பி எந்தவித வாக்குறுதியும் கொடுக்காதீங்க. இந்த சமயத்துல யாருக்கும் முந்திக்கிட்டு ஜாமீன் கையெழுத்து போட்டுடாதீங்க. இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால வெளியூர் பிரயாணத்தை அவாய்ட் பண்ணிடுங்க. ஹெல்த் கண்டிஷன்ல எச்சரிக்கை அவசியம்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 15
அதிர்ஷ்ட நேரம் : காலை 05.55 மணி - மாலை 12.20 மணி

விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல புதுசா எந்த இன்வெஸ்ட்மெண்ட்டும் பண்ணாம அமைதியா இருக்குறது நல்லது. வெளியூர் பிரயாணத்தையும் அவாய்ட் பண்றது நல்லது. உத்தியோகத்துல எதிர்பாத்த ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும். பேங்க் பேலன்ஸும் கூடும். வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்குவீங்க. சொந்த பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு லாபம் அமோகமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண் : 25
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1.40 மணி - இரவு 09.25 மணி

தனுசு
தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல லாபம் அமோகமா இருக்கும். எதிரிங்களோட தொல்லை மறைந்து நெருக்கடிகளும் காணாம போகும். சுப காரிய முயற்சிகளும் இன்னிக்கு வெற்றிகரமா முடியும். பிள்ளைங்களும் படிப்புல அக்கறை காட்டுவாங்க. பெண்களுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்குறதுல ஆர்வம் கூடும். குடும்பத்துலயும் மகிழ்ச்சி தாண்டவமாடும்.
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 32
அதிர்ஷ்ட நேரம் : மாலை 04.30 மணி - இரவு 10.05 மணி

மகரம்
மகர ராசி நேயர்களே, இன்னிக்கு பூர்வீக சொத்து பத்து சம்பந்தமா வீண் அலைச்சலும் தண்டச் செலவும் ஏற்படலாம். பணத்தை எண்ணி எண்ணி செலவழிச்சா கடன் வாங்காம தப்பிக்கலாம். இன்னிக்கு சொந்தக்காரங்க உங்களுக்கு சாதகமா இருப்பாங்க. குடும்பத்துல எல்லோரையும் அனுசரிச்சி போறது நல்லது. பிசினஸ்ல இன்னிக்கு எதிர்பாத்த லாபம் வராது. பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 20
அதிர்ஷ்ட நேரம் : மாலை 02.50 மணி - மாலை 09.18 மணி

கும்பம்
கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோக ரீதியா எடுக்குற முயற்சிக்கு உரிய பலன் கிடைச்சிடும். உங்களோட எல்லா தேவைகளும் பூர்த்தியாகிடும். குடும்பத்துல இருந்து வந்த பிரச்சனைகள் குறைஞ்சி ஒத்துமை கூடிடும் பிசினஸ்ல கூட்டாளிங்களோட அனுசரிச்சி போனா லாபம் கிடைக்கும். மொத்தத்துல இன்னிக்கு உங்க முகத்துல ஒரு மன அமைதியும் சந்தோஷமும் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் 11
அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5.25 மணி - பிற்பகல் 2.15 மணி

மீனம்
மீன ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ் ரீதியா வெளியூர் போறதுக்கு சந்தர்ப்பம் உண்டாகும். வராதுன்னு கைவிட்ட கடன் தொகையும் இன்னிக்கு வந்து சேரும். அதனால உங்க ஃபைனான்ஸ் பிரச்சனையும் மறையும். உத்தியோகத்துல சிலருக்கு எதிர்பாத்த மாதிரி வெளியூருக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும். இன்னிக்கு நீங்க எடுக்குற முயற்சிகளுக்கும் பூரண வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் 21
அதிர்ஷ்ட நேரம் : மாலை 6.00 மணி - இரவு 10 மணி



Click it and Unblock the Notifications











