Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இன்றைக்கு இந்த ராசிக்காரங்க ரொம்ப லக்கி... காரணம் என்ன தெரியுமா?
திங்கட்கிழமை இன்று பிப்ரவரி 24 ஆம் நாள் சந்திரன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் கவனமாக இருப்பது அவசியம்.
திங்கட்கிழமை இன்று பிப்ரவரி 24 ஆம் நாள் சந்திரன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் கவனமாக இருப்பது அவசியம். இன்றைக்கு யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு அதிகமாகும் யாருக்கு கோபம் வரும் யாருடைய கனவு நனவாகும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்று உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலை விசயமாக வெளியூர் செல்வீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கிக்கடன் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு இது ரொம்ப நல்ல நாள். சொந்தக்காரர்கள் மூலம் உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : காலை 08:55 முதல் பகல் 10:30 மணிவரை

ரிஷபம்
சந்திரன் இன்று உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். காதல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். இன்று நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். வங்கியில் பணம் சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 3 முதல் மாலை 6:30 மணிவரை

மிதுனம்
சந்திரன் இன்று உங்க ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வெளியூர் பயணம் வெளிநாட்டு பயணத்திற்கு முயற்சி செய்யலாம். இன்று தொழில் வியாபார ரீதியாக சிறு சிறு பொருளாதார பிரச்சினைகள் ஏற்படலாம். பண விசயத்தில் கவனமாக இருங்க. எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தில் பெண்கள் வழியில் ஒத்துழைப்பு கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 5:00 மணிவரை

கடகம்
சந்திரன் இன்று உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. நிதானமாகவும் பொறுமையாகவும் பேசுங்கள். இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : அதிகாலை 5:30 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

சிம்மம்
சந்திரன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். இன்று உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். அலுவலகத்தில் வேலைபளு குறையும். நிம்மதி ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நேரம் : இரவு 11 : 00மணி முதல் அதிகாலை 3 :00 மணிவரை

கன்னி
சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வேலைக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.உங்களுக்கு கடன்கள் குறையும். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த விண் பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நேரம் : காலை 09 : 00மணி முதல் காலை 11 :00 மணிவரை

துலாம்
சந்திரன் இன்று உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் சற்று குறையும். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நேரம் : பகல் 9:30 முதல் பகல் 11:30 மணிவரை

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரவும் செலவும் சமமாக இருக்கும். நிதானமாக யோசித்து பேசுங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நேரம் : மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணிவரை

தனுசு
சந்திரன் இன்றைக்கு உங்க ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார பிரச்சினைகள் தீரும். உங்க வருமானம் இரட்டிப்பாகும்.
திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாடு செல்ல விசாவிற்கு முயற்சி பண்ணலாம்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 11
அதிர்ஷ்ட நேரம் : மாலை 4:00 முதல் இரவு 10:00 மணிவரை

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு இரண்டாம் வீடான தன குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். பயணங்கள் மூலம் சாதகமான பலனை அடைவீர்கள்.
உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 17
அதிர்ஷ்ட நேரம் : காலை 6:00 முதல் காலை 9:00 மணிவரை

கும்பம்
சந்திரன் இன்றைக்கு உங்க ராசிக்குள் சஞ்சரிக்கிறார். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 10
அதிர்ஷ்ட நேரம் : இரவு 7:55 முதல் இரவு 9:40 மணிவரை

மீனம்
சந்திரன் இன்று உங்க ராசிக்கு விரைய ஸ்தானமான 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நேரம் : இரவு 6:00 முதல் இரவு 9:00 மணிவரை



Click it and Unblock the Notifications











