Latest Updates
-
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க.. -
சௌ சௌ வாங்குனா இந்த செட்டிநாடு பொரிச்ச குழம்பு செய்யுங்க - சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
சனி பகவான் ஆசியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு சங்கடங்கள் தீரும்...
சனிபகவானின் ஆசி நிறைந்த சனிக்கிழமை. இந்த தினத்தில் யாருக்கெல்லாம் சங்கடங்கள் தீரும் சந்தோஷம் அதிகரிக்கும் என்று நினைக்கிறீர்களா? உங்களின் கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன்கள் மூலம் பதில் கிடைக்கும்.
சனிபகவானின் ஆசி நிறைந்த சனிக்கிழமை. இந்த தினத்தில் யாருக்கெல்லாம் சங்கடங்கள் தீரும் சந்தோஷம் அதிகரிக்கும் என்று நினைக்கிறீர்களா? உங்களின் கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன்கள் மூலம் பதில் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரி இருக்கக் காரணம் கிரகங்களின் சஞ்சாரமும் ராசி மாற்றமும்தான். மே 23ஆம் தேதி எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க பேச்சுல கனிவும் இனிமையும் கலந்திருக்கும். லவ் பண்றவங்க பழைய நினைவுகளை அசை போடுவீங்க. பிசினஸ்ல உங்க செல்வாக்கு கூடும். அதோடு இன்னிக்கு கொழுத்த லாபம் கிடைக்கும். சரியான டயத்துக்கு சாப்புடுங்க. படிப்ப முடிச்சி வேலை தேடுறவங்களுக்கு வீட்டுல இருந்தே வேலை பாக்குற மாதிரியான வேலை அமையும். பண வரத்தும் இன்னிக்கு தாராளமா இருக்கும். ஹெல்த் கண்டிஷன்ல் அக்கறை காட்டுங்க.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 30
சாதகமான நேரம் : பிற்பகல் 2:45 முதல் இரவு 7:05 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு உஷ்ணம் சம்பந்தமான நோய் தாக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால அநாவசியமா வெயில்ல வெளிய சுத்த வேணாம். பிசினஸ்ல இருந்து வந்த போட்டி பொறாமை இன்னிக்கு மறையும். அதோட சரக்குகளும் வித்து தீந்துடும், லாபமும் பெருகும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவீங்க. இந்த சந்தர்ப்பத்துல பணத்தை சிக்கனமா செலவழிக்குறது அவசியம். கல்யாண வாழ்க்கை குதூகலமா நகரும். நீங்க எதிர்பாத்த கவுரவ பதவி உங்களை தேடி வரும். மனசுக்கு பிடிச்சவங்களை சந்திச்சி பேசுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 33
சாதகமான நேரம் : முற்பகல் 10:00 முதல் மாலை 4:00 மணிவரை

மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல லாபம் பெருகிடும். உத்தியோகத்துல சுயமா துணிச்சலா முடிவெடுத்து செய்யாம, சீனியர் அதிகாரிங்க சொல்றதை தட்டாம கேட்டு யோசிச்சி செய்யுறது நல்லது. இன்னிக்கு பண வரத்து திருப்திகரமா இருக்கும். வெளியில வீண் பிரச்சனைகளை சந்திக்க கூடும். கவனமா பேசுறது நல்லது. இன்னிக்கு மன சஞ்சலத்தை போக்கி ரிலாக்ஸா இருக்க பாருங்க.
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 8:00 மணிவரை

கடகம்
கடக ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல பெரிய அளவுக்கு லாபத்தை எதிர்பாக்க முடியாது. அதனால கூடுதலா பணத்தை முதலீடு பண்றதை அவாய்ட் பண்ணிடுங்க. சொந்தக்காரங்க மத்தியில இருந்து வந்த ரொம்ப நாள் பகை இன்னிக்கு மறையும். எந்த காரியத்தையும் செய்யுறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு பல தடவை நிதானமா யோசிச்சி செய்ய பாருங்க. வண்டி வாகனத்துல போகும்போது எச்சரிக்கையா இருங்க. குடும்பத்துல எல்லோரும் சந்தோஷமா இருப்பீங்க. செய்யுற வேலையை உற்சாகமா சுறுசுறுப்பா செய்வீங்க. ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு அற்புதமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : முற்பகல் 11:45 முதல் இரவு 9:00 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, இன்னிக்கு சொத்து பத்து சம்பந்தமா முக்கியமான முடிவெடுப்பீங்க. லவ் பண்றவங்க லவ்வரோட அன்பில் திக்குமுக்காடி போவீங்க. பிசினஸ்ல எதிர்பாத்த லாபம் கிடைக்கலைன்னாலும் கூட நட்டம் வராது. உத்தியோகம் சம்பந்தமா இன்னிக்கு எந்த விதமான அவசர முடிவும் எடுக்காம இருக்குறது நல்லது. எதிர்காலம் தொடர்பா முக்கிய முடிவெடுக்க ப்ளான் பண்ணுவீங்க. மொத்தத்துல இன்னிக்கு உங்களுக்கு ரொம்பவே நல்ல நாளா அமையும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 7:45 மணிவரை

கன்னி
கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு முக்கிய பிரமுகரோட அறிமுகம் கிடைச்சிடும். அதோட அவங்க உதவியும் கிடைக்கும். கனவுகளும் இன்னிக்கு நனவாகும். உங்க பேச்சு திறமை பளிச்சிடும். சொந்தக்காரங்களோட அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். எதிர்பாத்த இடத்துல இருந்து உதவியும் இன்னிக்க கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளும் தீர்ந்து சந்தோஷம் உண்டாகும். லவ் பண்றவங்களுக்கு சந்தோஷமான நாளா அமையும். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு அற்புதமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 42
சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 7:00 மணிவரை

துலாம்
துலா ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல வியாபாரம் நடந்து லாபம் கிடைச்சாலும், நல்ல விதமா பயன்படுத்துறது நல்லது. பிசினஸை விரிவாக்கம் பண்ற முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். பணத்தை சிக்கனமா செலவழிக்குறது நல்லது. எதிரிங்களோட தொல்லைகள் வந்த சுவடு தெரியாம போகும். இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால எதுலயும் எச்சரிக்கையா நடந்துக்குறது நல்லது. பேச்சுல கவனம் அவசியம். எந்த வம்பு தும்புலயும் சிக்காம கவனமா இருக்க பாருங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2.30 மணி மாலை 6 மணி

விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்கு நடுவுல அன்பும் அந்நியோன்யமும் கூடிடும். குடும்பத்துல இருந்து வந்த பிரச்சனைகள்ம் எதிர்ப்புகளும் மறையும். வேலை செய்யுற இடத்துல உங்க உழைப்புக்கு ஏத்த பலன் கிடைச்சிடும். உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் அமோகமா இருக்கும். கூடப்பொறந்தவங்க மூலமா நல்ல செய்திகள் உங்க காதுக்கு வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 9.20 மணி வரை

தனுசு
தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல பெரிய மனுஷங்களோட சப்போர்ட் கிடைக்கும். பிசினஸ் விஷயமா தேவையில்லாத வீண் அலைச்சல் ஏற்படலாம். கவனமா இருக்குறது நல்லது. திடீர் வெளியூர் பிரயாணம் பண்ண வேண்டியிருக்கும். கடன் பிரச்சனையும் கண்ட்ரோல்ல இருக்கும். கல்யாணம், சுபகாரிய பேச்சுவார்த்தையில நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்னிக்கு வாயை கண்ட்ரோல் பண்ணி, சாமர்த்தியமா பேசி பழகினா உங்க காரியத்தை சாதிச்சிக்கலாம். உத்தியோகத்துல ப்ரமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்கு.
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம் : மாலை 6 மணி இரவு 11 மணி

மகரம்
மகர ராசி நேயர்களே, இன்னிக்கு வேலை செய்யுற இடத்துல மத்தவங்களுக்கு தேடி போயி உதவி பண்ணுவீங்க. ரொம்ப நாளைக்கு முன்னாடி பிரிஞ்சி போனவங்க இன்னிக்கு திடீர்ன்னு சந்திச்சி மனசு விட்டு பேசி சந்தோஷப்பட்டுக்குவீங்க. பிள்ளைங்களால தண்டச் செலவுங்க வந்துடும். வீட்டுல கோபத்தை குறைச்சிக்கிட்டு தன்மையா பேசுனா உங்களுக்கு வெற்றி தான். இன்னிக்கு பண வரத்து சுமார் ரகம் தான். இன்னிக்கு உங்களுக்கு எல்லா வகையிலும் சந்தோஷமான நாளா அமையும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை

கும்பம்
கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு பூர்வீக சொத்து பிரச்சனையால இருந்து வந்த குழப்பம் தீரும். சொந்தக்காரங்க சப்போர்ட்டால எடுத்த காரியத்தை தைரியமா துணிச்சலா மன உறுதியோட செஞ்சி முடிப்பீங்க. படிக்குற பசங்களுக்கு எடுக்குற முயற்சிக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்துலயும் உற்சாகத்துக்கு குறையிருக்காது. அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல் அக்கறை காட்டுறது நல்லது. உங்க ஹெலத் கண்டிஷன் இன்னிக்கு சிறப்பா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 9.20 மணி வரை

மீனம்
மீன ராசி நேயர்களே, இன்னிக்கு சொந்தக்காரங்க மூலமா உதவிகள் தேடி வரும். வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிடுவீங்க. இன்னிக்கு நீங்க எடுக்குற முயற்சிகளுக்கு நிச்சய வெற்றி கிடைக்கும். வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகள் உங்களை தேடி ஓடி வரும். கூடப்பொறந்த தம்பிகள்னால உதவி, ஒத்தாசை கிடைக்கும். இன்னிக்கு உங்க சோம்பேறித் தனத்தை விட்டொழிச்சி ஹெல்த் கண்டிஷன்ல தீவிரமா கவனம் செலுத்துறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 6:00 மணிவரை



Click it and Unblock the Notifications