For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குரு பகவானின் பார்வையால் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியும்...

குரு பகவான் ஆதிக்கம் நிறைந்த வியாழக்கிழமை நாளில் யாருக்கு அதிர்ஷ்டம் வரும், யாருடைய பிரச்சினைகள் தீரும். யாருக்கெல்லாம் பண வருமானம் வரும், வேலையில் நிம்மதி ஏற்படும் என்று யோசிக்கிறீர்களா?

|

குரு பகவான் ஆதிக்கம் நிறைந்த வியாழக்கிழமை நாளில் யாருக்கு அதிர்ஷ்டம் வரும், யாருடைய பிரச்சினைகள் தீரும். யாருக்கெல்லாம் பண வருமானம் வரும், வேலையில் நிம்மதி ஏற்படும் என்று யோசிக்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கு எல்லாம் இன்றைய ராசி பலன்கள் மூலம் விடை கிடைக்கும். மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் என்று படிங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, இன்னிக்கு சொந்தக்காரங்களால உங்களுக்கு டென்சன் அதிகரிக்கும். உங்க குடும்ப விஷயத்துல வெளியாட்கள் தலையிடாம பாத்துக்கோங்க. உத்தியோகத்துல சிலருக்கு விரும்பின இடத்துக்கு ட்ரான்ஸ்பர் கிடைக்கும். பிள்ளைங்களுக்கு படிப்புல ஈடுபாடு கூடும். இன்னிக்கு தாராள பண வரத்தும் இருக்கும்கிறதுனால, வீட்டோட ஃபைனான்ஸ் பிரச்சனையும் சால்வ் ஆகிடும். வீட்டுல சுப காரிய முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 33

சாதகமான நேரம் : முற்பகல் 10:00 முதல் மாலை 4:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு பூர்வீக சொத்து பத்து மூலமா உங்களுக்கு லாபம் கிடைக்கும். நோய் நொடிகள் நீங்கும். செல்வாக்கும் சொல்வாக்கும் கூடும். லவ் பண்றவங்க ரொம்ப நாள் கழிச்சி லவ்வரை மீட் பண்றதுனால உணர்ச்சிவசப்படுவீங்க. பிசினஸ்ல புதுசா வியாபார ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பண வரத்து சுமாரா இருந்தாலும், திடீர்னு வர்ற செலவுகளை சமாளிக்க வெளியில கடன் வாங்குற நிலை உண்டாகும். சிக்கனமா செலவழிச்சா நெருக்கடியை சமாளிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 30

சாதகமான நேரம் : பிற்பகல் 2:45 முதல் இரவு 7:05 மணிவரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு புது வேலைக்கு நீங்க விண்ணப்பிச்சா, தாராளமா அந்த வேலை உங்களுக்கு கிடைக்கலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்குற பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குறதுல ஆர்வம் காட்டுவீங்க. பிசினஸ்ல வியாபாரம் பெருகி லாபம் அமோகமா இருக்கும். குடும்பத்துலயும் மகிழ்ச்சி கொடுக்குற தரமான சம்பவங்கள் நடக்கும். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நார்மலா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 42

சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 7:00 மணிவரை

கடகம்

கடகம்

கடக ராசி நேயர்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்கு நடுவுல காதல் உணர்வுகள் ரொம்பவே அதிகமா இருக்கும். வீட்டு பெரியவங்களால பெண்களுக்கு மனசு சங்கடப்பட நேரிடலாம். உத்தியோகம் சம்பந்தமா வெளிவட்டார தொடர்பும் நட்பு வட்டமும் அதிகரிக்கும். பிள்ளைங்களோட படிப்புல நல்ல முன்னேற்றம் இருக்கும். பிசினஸ்ல வியாபாரம் பெருகி இன்னிக்கு கொழுத்த லாபம் கிடைக்கும். இன்னிக்கு பண வரத்தும் ரொம்பவே சிறப்பா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

அதிர்ஷ்ட எண் : 18

சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 8:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க ஆலோசனைகளால பிசினஸ்ல நல்ல முன்னேற்றமும் லாபமும் ஏற்படும். பழைய கடன்களும் இன்னிக்கு வசூலாகும். குடும்ப வாழ்க்கையில மகிழ்ச்சி கூடிடும். சொந்தக்காரங்க மூலமா கல்யாணம் சுபகாரியம் சம்பந்தமா இனிப்பான செய்திகள் உங்களை தேடி வரும். உத்தியோகத்துல சில பேருக்கு வெளியூருக்கு போக சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 7:45 மணிவரை

கன்னி

கன்னி

கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல பெரிய தொகை எதையும் முதலீடு பண்ணாம பேசாக இருக்குறது நல்லது. சந்திராஷ்டமம் இருக்குறதுனால, எந்த விஷயத்துலயும் ரொம்பவே எச்சரிக்கையோட நடந்துக்குறது உத்தமம். தேவையில்லாத வீண் வாக்குவாதங்களை அவாய்ட் பண்ணிடுங்க. கணவன் மனைவிக்குள்ளாற சின்னதா வாக்குவாதம் உண்டாகி டென்சனை கொடுக்கும். பணம் கொடுக்கல் வாங்கல்ல கவனமா இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : முற்பகல் 11:45 முதல் இரவு 9:00 மணிவரை

துலாம்

துலாம்

துலா ராசி நேயர்களே, இன்னிக்கு நீங்க நெனச்ச காரியம் நல்லபடியா நடந்துடும். பிள்ளைங்க வழியில சுபச் செலவுகளும் வந்துடும். உத்தியோகம் சம்பந்தமா வெளியூர் போறதுனால உங்களுக்கு நல்லது நடக்கும். வீட்டுக்கு தேவையான புது பொருட்களை வாங்குவீங்க. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் ரொம்பவே அற்புதமா இருக்கும். மொத்தத்துல இன்றைய நாள் உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளா அமைஞ்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : காலை 9:00 முதல் நண்பகல் 1:30 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, கவர்மெண்ட் உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு இன்னிக்கு கவுரவ பதவிகள் தேடி வரும்.பிசினஸ் சம்பந்தமா புது கருவிகள் வாங்குற முயற்சிகள் வெற்றிகரமா முடியும். ஃபைனான்ஸ் பொசிஷனும் ரொம்ப அற்புதமா இருக்கும். வெளிய வாங்குன கடன்களும் இன்னிக்கு அடைபடும். கணவன் மனைவிக்குள்ள நெருக்கம் கூடிடும். வீட்டுல வேலை செய்யுறவங்க டேஸ்ட்டான உணவு பதார்த்தங்களை சமைச்சி சாப்பிடுவீங்க. இன்னிக்கு எந்த வேலையையும் ரொம்பவே உற்சாகமா செய்வீங்க.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நேரம் : காலை 10:00 முதல் மாலை 4:00 மணிவரை

தனுசு

தனுசு

தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல இருந்து வந்த போட்டி பொறாமைகள் காணாம போகும். ஃப்ரண்ட்ஸுங்க சப்போர்ட் கிடைச்சிடும். இல்வாழ்க்கை இனிமையா, மகத்துவம் மிக்கதா நகரும். பூர்வீக சொத்து பத்து சம்பந்தமா அலைச்சல் அதிகமா இருந்தாலும், அதுக்கேத்த பலன்களும் கிடைக்கும். பொருளாதார ரீதியா திடீர் பண நெருக்கடி ஏற்படலாம். கவனமா நடந்துக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : மாலை 5:05 முதல் இரவு 7:55 மணிவரை

மகரம்

மகரம்

மகர ராசி நேயர்களே, உத்தியோகத்துல இருக்குறவங்க எதிர்பாத்த சலுகை கிடைக்கணும்னா கூட வேலை பாக்குறவங்களை அனுசரிச்சி போறது நல்லது. உங்க பெர்சனல் லைஃப் சம்பந்தப்பட்ட விசயத்தை வெளியாட்கள் கிட்ட ஷேர் பண்றதை அவாய்ட் பண்ணுனா, பிரச்சனை வராம தப்பிக்கலாம். பிசினஸ்ல இன்னிக்கு முன்னேற்றமான நாளா அமையும். சுப காரிய முயற்சிகள் சின்ன தடங்கல், இடைஞ்சலுக்கு பின்னாடி வெற்றிகரமா முடியும். குடும்பத்துல ஒத்துமை குறைய வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையோட இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க மூலமா எதிர்பாத்த உதவி, ஒத்தாசை கிடைக்கும். உங்க திறமை பளிச்சிடும். செய்யுற வேலையோட தரம் ரொம்பவே கூடும். சமூகத்துல உங்க மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டுத் தேவைகளும் இன்னிக்கு பூர்த்தியாகும். காரமான உணவுப் பதார்த்தங்களை சாப்பிடுறதை அவாய்ட் பண்ணிடுங்க. இன்னிக்கு திடீர் பண வரத்து இருக்கும். சொந்தக்காரங்க உதவியால சுப காரிய முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை

மீனம்

மீனம்

மீன ராசி நேயர்களே, இனின்கு பிசினஸ்ல சின்னச் சின்ன இடையூறுகள் உண்டாகலாம். இருந்தாலும் எதிர்பாத்த லாபம் கிடைக்கும். கூடப்பொறந்தவங்க கூட மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கவனமா நடந்துக்கோங்க. உத்தியோகத்துல வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு ரொம்ப சிறப்பா இருக்கும். இன்னிக்கு மகிழ்ச்சிகரமான நாளா இருந்தாலும். தேவையில்லா விசயத்தை மனசுல போட்டு குழப்பிக்கிட்டு, எதையோ பறிகொடுத்த மாதிரி கவலையா ஃபீல் பண்ணுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : மாலை 5:05 முதல் இரவு 7:55 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 21st May 2020 Thursday In Tamil

Check out the daily horoscope for 21st may 2020 thursday in tamil. Read on...
Story first published: Wednesday, May 20, 2020, 22:56 [IST]
Desktop Bottom Promotion