Latest Updates
-
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்..
புதனால் பொன் மழை பொழியப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
இன்றைய தினம் கிரகங்களின் சஞ்சாரத்தினால் யாருக்கெல்லாம் பணம் வரும், யாருக்கு செலவுகள் வரும், யாருடைய பிரச்சினைகள் தீரும், யாருக்கு வெளியூர் போக வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?
இன்றைய தினம் கிரகங்களின் சஞ்சாரத்தினால் யாருக்கெல்லாம் பணம் வரும், யாருக்கு செலவுகள் வரும், யாருடைய பிரச்சினைகள் தீரும், யாருக்கு வெளியூர் போக வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? உங்களின் பல கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன் மூலம் பதில் கிடைக்கிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய ராசி பலன் எப்படி இருக்கிறது என்று படிங்க.

மேஷம்
மேஷ ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல, வியாபாரத்துல புதுசா எடுக்குற முயற்சியினால் லாபம் கூடுதலாக கிடைக்கும். பிள்ளைங்க மூலமா மனசுக்கு உற்சாகம் கொடுக்குற மாதிரியான சம்பவங்கள் நடந்துடும். உத்தியோகத்துல இருக்குறவங்க வெளியூர் பிரயாணம் போக சந்தர்ப்பம் கிடைக்கும். இ-பாஸ் எடுத்து தயாரா இருங்க. குடும்பத்துல சுப காரியங்கள் நல்லவிதமா நடக்கும். சந்திரன் உங்க ராசியில சஞ்சரிக்குறதுனால, மனசுல சின்னதா சஞ்சலம் ஏற்படலாம். கவனமா இருங்க. ஹெல்த் கண்டிஷன் சிறப்பா இருக்குறதுனால உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : இரவு 7:55 முதல் இரவு 9:40 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு கடன் பிரச்சனை ஓரளவுக்கு குறையலாம். ஃப்ரண்ட்ஸுங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைக்கும். புதுசா எதுலயும் இன்வெஸ்ட் பண்றதை தள்ளி வையிங்க. பிசினஸ்ல எதிர்பாத்த லாபம் கிடைக்குறதுல தடங்கல் உண்டாகலாம். இன்னிக்கு பண வரத்து இருந்தாலும், வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால தண்டச் செலவுகளும் வந்துடும். இன்னிக்கு ரொம்பவே டல்லா ஃபீல் பண்ணுவீங்க. ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 14
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க உஷாரா இருந்தா பிரச்சனை வராம அவாய்ட் பண்ணிடலாம். சமூகத்துல உங்க மதிப்பும் மரியாதையும் கூடிடும். சொந்தக்காரங்க ஒத்தாசையா இருப்பாங்க. பிசினஸ்ல லாபம் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான புது பொருட்களை வாங்குவீங்க. கல்யாணம், சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்துலயும் ஒத்துமையும், அமைதியும் தவழும். செய்யுற வேலையை உற்சாகமா செய்வீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : நண்பகல் 12:55 முதல் மாலை 6:30 மணிவரை

கடகம்
கடக ராசி நேயர்களே, இன்னிக்கு குடும்பத்துல பிள்ளைங்க மூலமா சுபச் செய்திகள் உங்க காதுக்கு வந்துடும். வெளியில இருந்து வரவேண்டிய பாக்கி பணம் கைக்கு வந்து சேரும். அதனால பேங்க் பேலன்ஸும் கூடும். பிசினஸ் இம்ப்ரூவ்மெண்ட்டுக்காக பேங்க் லோன் ரொம்ப சுலபமா கிடைக்கும். செய்யுற வேலையை ரொம்ப ஆர்வமா செய்வீங்க. ஹெல்த் கண்டிஷனும் ரொம்ப சிறப்பா இருக்கும். அதனால உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 37
தகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி நடந்துக்குறது நல்லது. கல்யாண வாழ்க்கையில் இன்னிக்கு ரொம்ப இனிமையான நாளா அமையும். பண வரத்தும் இருக்கும். வண்டி வாகனத்தை பழுது பாத்து பராமரிப்பு செய்யவேண்டியிருக்கும். பிசினஸ்ல கூடுதல் லாபம் கிடைக்கணும்னா கஷ்டப்பட்டு உழைக்கணும். கடந்த ரெண்டு நாளா இருந்து வந்த மன உளைச்சல் இன்னிக்கு சரியாகிடும். அதனா ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு அற்புதமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 1
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 10:00 மணிவரை

கன்னி
கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, குடும்ப உறுப்பினர்கள் கிட்டயும் ஆஃபீஸ்லயும் தேவையில்லாத வாக்குவாதங்களை அவாய்ட் பண்றது நல்லது. கல்யாண வாழ்க்கையில அன்பும் அரவணைப்பும் கூடும். பிசினஸ் ரீதியா புதுசா எந்த முயற்சியும் எடுக்காம இருக்குறது நல்லது. இன்னிக்கு மன உளைச்சல் ரொம்பவே அதிகமா இருக்கும் அதனால பேச்சுவார்த்தையில எச்சரிக்கையா இருக்குறது நல்லது. செய்யுற வேலையிலயும் டென்ஷன் கூடும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 22
சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:30 மணிவரை

துலாம்
துலா ராசி நேயர்களே, இன்னிக்கு பூர்வீக சொத்து பத்துனால உங்களுக்கு லாபம் கிடைக்கும். வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால மனசுக்கு சந்தோஷமா இருக்கும். பிசினஸ்ல செய்யுற மாற்றத்துனால இன்னிக்கு லாபம் பெருகிடும். ரொம்ப நாளா இழுபறியா இருந்து வந்த பழைய கடன் இன்னிக்கு வந்துடும். செய்யுற வேலையை உற்சாகமா செய்வீங்க. இன்னிக்கு சின்னச் சின்ன மன உளைச்சல் இருந்தாலும், நல்ல செய்தி உங்க காதுக்கு வந்து சந்தோஷத்தை கொடுத்துடும். இன்னிக்கு ஹெல்த் கண்டிஷனும் நார்மலா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 10:00 மணிவரை

விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல நல்ல அனுபவசாலிங்களோட ஆலோசனையால வியாபாரம் பெருகி லாபம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள்ல இருந்து வந்த தடைகள், இடைஞ்சல் விலகி முன்னேற்றம் கிடைக்கும். பணத்தை சிக்கனமா செலவு பண்ணி எதிர்காலத்துக்குன்னு கொஞ்சம் சேத்து வச்சிக்கிறது நல்லது. ஹெல்த் கண்டிஷன் சுமாரா இருக்கும். அதனால மருந்து, மாத்திரைன்னு செலவழிக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : நண்பகல் 12:20 முதல் மாலை 5:00 மணிவரை

தனுசு
தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல புது மாற்றத்தை செய்யுறதுனால வியாபாரத்துல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் ஏற்படும். ஃப்ரண்ட்ஸுங்க உங்களை தேடி வந்து ஹெல்ப் பண்ணுவாங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு காதல் உணர்வுகள் ரொம்பவே அதிகமா இருக்கும். திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து லவ்வரை திக்குமுக்காட வைப்பீங்க. பண வரத்து இன்னிக்கு தாராளமா இருக்குறதுனால வீட்டோட தேவைகளும் பூர்த்தியாகிடும். தன்னம்பிக்கையும் உற்சாகமும் இன்னிக்கு கூடிடும். குடும்பத்துல சுப காரியங்கள் நடந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 12:20 முதல் மாலை 5:00 மணிவரை

மகரம்
மகர ராசி நேயர்களே, இன்னிக்கு எதிர்பாத்த உதவி, ஒத்தாசை உங்களை தேடி ஓடி வரும். வர்ற பிரச்சனையை தைரியமா சமாளிப்பீங்க. பிசினஸ் பண்றவங்க கூட்டாளிங்க கிட்ட பேசும்போது கொஞ்சம் கவனமா தன்மையா பேசுனா, பிரச்சனை வராம அவாய்ட் பண்ணிடலாம். மத்தவங்க விஷயத்துல தேவையில்லாம தலையிடாம ஒதுங்கி இருக்க பாருங்க. இன்னிக்கு அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல் அக்கறையோட இருக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

கும்பம்
கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல சிலருக்கு எதிர்பாக்காத திடீர் ப்ரமோஷன் கிடைக்கலாம். குடும்பத்துலயும் எல்லோரும் சந்தோஷமா, அமைதியா இருப்பீங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு அமோகமான நாளா அமையும். பிசினஸ் வளர்ச்சிக்காக நீங்க போடுற ப்ளான் வெற்றியை கொடுக்கும். பெரியவங்களோட இருந்து வந்த மனஸ்தாபம் மறையும். இன்னிக்கு நீங்க செய்யுற முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : அதிகாலை 5:30 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

மீனம்
மீன ராசி நேயர்களே, இன்னிக்கு குடும்ப செலவுங்களை சமாளிக்க வெளியில கடன் வாங்குற நிலைமை உண்டாகும். சொந்தக்காரங்க உங்களுக்கு பக்க பலமா இருப்பாங்க. எந்த பிரச்சனையையும் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் சமாளிப்பீங்க. பிசினஸ்ல நல்லா நிதானமா யோசிச்சி ப்ளான் பண்ணி வியாபாரம் செஞ்சா இம்ப்ரூவ்மெண்ட் கிடைக்கும். வெளியூர் பிரயாணத்துனால அலைச்சலும் டென்ஷனும் கூடிடும். பணவரத்தும் இன்னிக்கு கம்மியா தான் இருக்கும். ஹெல்த கண்டிஷனும் இன்னிக்கு நார்மலா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 3
சாதகமான நேரம் : மாலை 4:20 முதல் இரவு 8:45 மணிவரை



Click it and Unblock the Notifications











