Latest Updates
-
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
இந்த ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு செம்ம ரொமான்டிக்கான நாள் தெரியுமா?
இன்றைய தினம் ஒவ்வொருவரது ராசி பலன்களைப் பார்க்கும் போது, கிரகங்களின் நிலைகளைப் பொருத்து மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கும், யார் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், ய
இன்றைய தினம் ஒவ்வொருவரது ராசி பலன்களைப் பார்க்கும் போது, கிரகங்களின் நிலைகளைப் பொருத்து மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கும், யார் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், யாருக்கு நல்ல நாள், இன்றைக்கு ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா என்பன போன்ற கேள்விகளுக்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்
உங்களின் திருமண வாழ்க்கையில் சர்ச்சைகள் எழக்கூடும். மனைவியுடனான கருத்து வேறுபாடு ஆழமாகும். அலுவலகத்தில் எச்சரிக்கையாக இருங்கள். உடன் பணிபுரிபவர்கள் உங்கள் வேலையைத் தடுக்கக்கூடும். இன்று தொழிலதிபர்கள் பெரும் நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். இருப்பினும், நிதி நிலைமை நன்றாக இருக்கும். இந்த நாள் மாணவர்களுக்கு சூப்பராக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பருவக்கால நோயால் அவஸ்தைப்படக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 முதல் இரவு 9:00 வரை

ரிஷபம்
இன்றைய தினம் நிம்மதியாக இருப்பீர்கள். உங்கள் மனம் அமைதியாகவும் பணிவாகவும் இருக்கும். இன்று புதிதாக ஏதாவது செய்ய உத்வேகம் பெறுவீர்கள். அலுவலக பணி சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையைப் பொறுத்த வரை, உங்களின் ஈகோவை கைவிடவும். காதல் வாழ்க்கை இணக்கமாக இருக்கும். காதலர்களுக்கு இடையிலான உறவு வலுவாக இருக்கும் மற்றும் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எவ்வளவு பொருத்தமானவர்கள் என்பதை உணர்வீர்கள். பொருளாதார முன்னணியில், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். வருமான வளர்ச்சி சாத்தியமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 முதல் மதியம் 3:15 வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு, இன்றைய தினம் கடினமாக இருக்கும். உடல் பிரச்சனைகள், நிதி இழப்பு போன்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அளவுக்கு அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்கவும். திருமண வாழ்க்கையில் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக இருப்பதாக தெரியும். சில காலமாக உங்கள் துணையுடன் இருந்து வந்த பிரச்சனை குறைந்து, உறவை மேம்படுத்த நீங்கள் மேற்கொண்டு வந்த முயற்சிகள் மெதுவாக பலனளிக்கும். இன்று அலுவலக சூழல் நன்றாக இருக்காது. உங்கள் முதலாளி மிகவும் மோசமான மனநிலை காரணமாக அனைவரிடமும் கண்டிப்பாக நடந்து கொள்ளலாம். உங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:05 முதல் இரவு 8:00 வரை

கடகம்
இன்று உங்களுக்கு அதிக வேலை இருக்கும். ஆனால் உங்கள் குடும்பத்திற்கும் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும். இதனால் உங்கள் குடும்பத்தினர் சந்தோஷப்படுவதோடு, உங்கள் மன அழுத்தம் பெருமளவு குறையும். காதல் வாழ்க்கையில் அன்பும் மகிழ்ச்சியும் இருக்கும். துணைக்கும் உங்களுக்கும் இடையிலான ஆழமான தொடர்பை நீங்கள் உணர்வீர்கள். அதே நேரத்தில், திருமணமான தம்பதிகள் சிறிது நேரம் நிம்மதியாக நேரத்தை செலவிடுவீர்கள். உங்களைச் சுற்றி நேர்மறை ஆற்றல் சூழப்பட்டிருப்பதை உணர்வீர்கள். வேலை இடத்தில் உங்கள் நோக்கம் மற்றும் தன்னம்பிக்கை உயர்ந்ததாக இருக்கும். இன்று நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவும் எதிர்காலத்தில் சரியான முடிவைக் கொடுக்கும். பண விஷயத்தில் கவனமாக இருங்கள். இன்று நல்ல ஆரோக்கியத்தின் காரணமாக ஆற்றலுடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 முதல் இரவு 9:00 வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் காதல் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருக்கும். நீங்களும் உங்கள் வாழ்க்கை துணையும் புதிய வாழ்க்கையைத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் மேம்பட்டு, உங்கள் நாள் இன்னும் மகிழ்ச்சியானதாக இருக்கும். இன்று பயணம் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மற்றவர்களது விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. முக்கியமாக உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பிங்க்
அதிர்ஷ்ட எண்: 26
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 முதல் மாலை 6:15 வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இன்று நீங்கள் வேடிக்கையான மனநிலையில் இருப்பீர்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் உங்கள் மீது கவனம் செலுத்துவீர்கள். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இன்று சாதகமாக இருக்கும். உங்கள் உறவு வலுவாக இருக்கும் மற்றும் காதல் அதிகரிக்கும். அதே சமயம், திருமணமான தம்பதியர்களிடையே அன்பு ஆழமடையும். நிதி விஷயங்களில் இந்நாள் சிறப்பாக இருக்கும். நிதி நன்மைகளுடன் உங்களின் நிதி நிலைமையும் மேம்படும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 37
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 6:25 முதல் காலை 10:00 வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இன்று நீங்கள் எதிர்மறை உணர்ச்சிகளால் சூழப்படுவீர்கள். நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக, உங்கள் மனம் கடன்களால் கலங்கி இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகுள் ஏற்படலாம். மன அழுத்தத்தின் காரணமாக, உங்களால் இன்று எந்த ஒரு வேலையிலும் கவனம் செலுத்தமாட்டீர்கள். நீங்கள் ஏதேனும் சர்ச்சையில் சிக்கினால், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்வீர்கள். வேலையில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு வேலைக் கிடைப்பதற்கான அறிகுறிகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 முதல் இரவு 8:15 வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு ரொமான்டிக்கான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து முழு அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். பணத்தைப் பொறுத்தவரை, இன்றைய நாள் சாதாரணமாக இருக்கும். உங்களின் நிதி நிலையை வலுவாக்க, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய பணியைத் தொடங்க பெரிய அளவிலான பணத்தை செலவிடுவீர்கள். அலுவலகத்தில் சில நேர்மறையான விஷயங்கள் நிகழும். நீங்கள் கடினமாக உழைத்தால், வேகமாக வெற்றியடைவீர்கள். மேலும் இன்று உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்றைய நாள் சாதகமாக இருக்கும். இன்று அனைத்து மன கவலைகளையும் மறந்து, சந்தோஷமாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 3:00 முதல் இரவு 7:00 வரை

தனசு
தனுசு ராசிக்கார்களே! இன்று சில ஆரோக்கிய பிரச்சனைகளால் நாள் மிகவும் கடினமாக இருக்கும். அதிகரித்த குடும்ப பொறுப்புக்களினால் அழுத்தத்தை உணர்வீர்கள். அதே சமயம், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால் சற்று ஏமாற்றமடைவீர்கள். திருமண வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். இன்று நண்பர்களுடன் தகராறில் சிக்கலாம். கோபத்தை எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் இது உங்களை கடினமான சூழ்நிலையில் தள்ளிவிடும். இன்று நீங்கள் வேலையில் கவனம் செலுத்தமாட்டீர்கள். இன்று வணிகம் தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 முதல் இரவு 9:30 வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே! இன்று நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை சிந்தித்துப் பயன்படுத்துங்கள். பணியிடத்தில், உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை முறையாக நடத்துங்கள். அனைத்து வேலைகளையும் கனமாக முடிக்க முயற்சி செய்யுங்கள். தொழிலதிபர்களுக்கு இன்று சிறப்பான நாள் இல்லை. குடும்ப பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். உங்கள் பெற்றோர்கள் உங்களால் மகிழ்ச்சி அடைவர். இன்று உங்கள் பெற்றோருடன் வெளியே செல்வதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 7:00 முதல் மாலை 6:20 வரை

கும்பம்
திருமணமான தம்பதியர்களுக்கு இன்றைய தினம் சற்று சலிப்பை ஏற்படுத்தும். நீங்கள் இருவரும் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள் மற்றும் ஒருவருக்கொருவர் போதுமான நேரம் செலவழிக்க முடியாமல் போகலாம். காதல் விஷயங்களில் இன்றைய நாள் சற்று சர்ச்சைக்குரிய நாளாக இருக்கும். உங்கள் துணையின் மீதான நம்பிக்கை குறைந்து, இருவருக்கும் இடையிலான உறவில் கசப்பை ஏற்படுத்தும். நீங்கள் குழப்பமான மனநிலையில் இருந்தால், கையை மீறி பிரச்சனை செல்லும் முன் அதற்கான தீர்வைப் பெற முயலுங்கள். கிரகங்களின் நல்ல நிலை காரணமாக நிதி ஆதாயங்கள் இன்று சாத்தியமாகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் சோர்வாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ப்ரௌன்
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நேரம்: காலை 11:30 முதல் மாலை 6:30 வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே! இன்று அவரசமும், அலட்சியமும் பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடும். இன்று எந்த ஒரு முடிவை எடுப்பதிலும் நன்கு சிந்தித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இன்றைய நாள் சாதாரணமாக இருக்கும். குடும்பத்தில் குறிப்பாக சகோதரர்களுடன் பிரச்சனைகள் எழும். இன்று உங்கள் துணையிடமிருந்து நீங்கள் விரும்பிய ஒத்துழைப்பைப் பெற முடியாததால் ஏமாற்றமடைவீர்கள். வேலைப்பளுவின் காரணமாக உங்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். உங்கள் மனம் அமைதியற்று இருக்கும். மேலும் நீங்கள் தனிமையில் இருப்பது போன்று உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பிங்க்
அதிர்ஷ்ட எண்: 32
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 முதல் மாலை 6:00 வரை



Click it and Unblock the Notifications











