செவ்வாய்கிழமையில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு வருமானம் அள்ளப்போகுது....

செவ்வாய்கிழமை மங்களகரமான நாள். செவ்வாய் பகவானின் ஆதிக்கமும் முருகப்பெருமானின் ஆசியும் நிறைந்த நாள். இன்றைக்கு முருகப்பெருமானின் ஆசியால் எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு வரும்.

செவ்வாய்கிழமை மங்களகரமான நாள். செவ்வாய் பகவானின் ஆதிக்கமும் முருகப்பெருமானின் ஆசியும் நிறைந்த நாள். இன்றைக்கு முருகப்பெருமானின் ஆசியால் எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு வரும். யாருக்கு திடீர் செலவுகள் வரும். யாருடைய செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். யாருடைய வீட்டில் சண்டை சச்சரவு வரும் என்று யோசிக்கிறீர்களா? லாக்டவுன் 4.0 கால கட்டத்தில் இன்றைக்கு என்னென்ன நடக்குமோ என்று யோசிக்கிறீங்களா? உங்க கேள்விகளுக்கு எல்லாம் இன்றைய ராசிபலன்கள் மூலம் விடை கிடைக்கும். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸை விரிவுபடுத்தலாம். புதுசா எடுக்குற முயற்சியினால லாபம் அதிகமா கிடைக்கும். கணவன் மனைவிக்குள்ள நெருக்கம் கூடிடும். குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமா இருக்கும். கொஞ்சம் சிக்கனமா செலவழிச்சா பணப்பிரச்சனை வராம தப்பிக்கலாம். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு வேலை பாக்குற இடத்துல சின்ன சின்ன தொந்தரவுங்க வரலாம். கூடுதல் விழிப்புணர்வோட இருங்க. கொரோனா லாக்டவுன் ரிலீஸ் பண்ணினதுனால சுதந்திர பறவையா ஃபீல் பண்ணுவீங்க. ஹெல்த் கண்டிஷனும் அற்புதமா இருக்கும்.

ராசியான நிறம்: மஞ்சள்

ராசியான எண்: 4

ராசியான நேரம்: பிற்பகல் 1.05 மணி - மாலை 5 மணி

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் கடனோ, கைமாத்தோ வாங்கி கொடுக்காதீங்க. பின்னாடி வருத்தப்பட வேண்டியிருக்கும். பிசினஸ்ல கூட்டாளிகளால லாபம் பெருகும். சுப காரிய முயற்சிகள் இன்னிக்கு கைகூடி வரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குறதுல ஆர்வம் உண்டாகும். வீட்டுலயும் மனசுக்கு மகிழ்ச்சி கொடுக்குற மாதிரியான சம்பவங்கள் நடந்துடும். பண வரத்தும் இன்னிக்கு அமோகமா இருக்கும். ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது அவசியம்.

ராசியான நிறம்: வெள்ளை

ராசியான எண்: 6

ராசியான நேரம்: பிற்பகல் 2.45 - 4 மணி

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு கல்யாண வாழ்க்கை கலகலப்பா இருக்கும். சொந்தக்காரங்க வர்றதுனால குடும்பத்துலயும் மகிழ்ச்சி தாண்டவமாடும். பண வரத்தும் இரட்டிப்பா இருக்கும். கூடவே கடன் கொடுத்தவங்க கிட்ட இருந்தும் பழைய பாக்கியும் வசூலாகிடும். வி.ஐ.பி.க்களோட சப்போர்ட்டால உங்களுக்கு நல்லது நடந்துடும். கவர்மெண்ட் உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு எதிர்பாத்த சலுகையும் கிடைக்கும். வீட்டுல சுபச் செலவுகளும் வந்துடும்.

ராசியான நிறம்: க்ரீம்

ராசியான எண்: 7

ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 9 மணி

கடகம்

கடகம்

கடக ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல இருக்குறவங்க வேலைச் சுமை கூட வேலை பாக்குறவங்களால கம்மியாகிடும். செய்யுற வேலையை ரொம்பவே உற்சாகமா செய்வீங்க. வீட்டோட ஃபைனான்ஸ் பிரச்சனையை சமாளிக்க வெளிய கடன் வாங்குற சூழ்நிலை ஏற்படலாம். கூடப்பொறந்தவங்க கூட சின்னச் சின்னதா பிரச்சனைங்க வரலாம். இன்னிக்கு பண வரத்து கூடுதலா இருந்தாலும், செலவுகளும் அதுக்கேத்த மாதிரி இருக்கும். குடும்பத்துலயும் சந்தோஷம் இருக்கும். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நார்மலா இருக்கும்.

ராசியான நிறம்: ப்ரௌன்

ராசியான எண்: 37

ராசியான நேரம்: பிற்பகல் 4.30 மணி - இரவு 11 மணி

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, உழைப்புக்கு ஏத்த பலன் கிடைக்குறதுல கால தாமதம் ஏற்படலாம். வீட்டுலயும் அநாவசியம் வீண் வாக்குவாதம் உண்டாகலாம். அதனால நாக்கை அடக்கி வச்சிக்கிறது நல்லது. பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல்ல கொஞ்சம் கூடுதல் கவனத்தோட இருக்குறது நல்லது. ஹெல்த் கண்டிஷன்ல சின்னதா பாதிப்பு உண்டாகலாம். சாப்பாட்டு விஷயத்துல நாக்கை கட்டுப்படுத்துறது நல்லது.

ராசியான நிறம்: மஞ்சள்

ராசியான எண்: 20

ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 10 மணி

கன்னி

கன்னி

கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகம் பாக்குறவங்களுக்கு உழைப்புக்கு ஏத்த இன்க்ரிமெண்ட் கிடைக்கும். பண வரத்தும் அமோகமா இருக்கும். ரொம்ப நாள் கழிச்சி வெளியூர் பிரயாணம் பண்றதுனால பிசினஸ்லயும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் உண்டாகும். வீட்டுல சுப காரியங்களும் கைகூடி வரும். இன்னிக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கூடிடும். அதனால, எந்த காரியத்தையும் ரொம்பவே துணிச்சலா செஞ்சி முடிப்பீங்க. கணவன் மனைவிக்கு நடுவுல காதல் கூடும். லவ் பண்றவங்க ரொம்ப நாள் கழிச்சி சந்திக்குறதுனால ரொம்பவே உற்சாகமா இருப்பீங்க.

ராசியான நிறம்: பச்சை

ராசியான எண்: 14

ராசியான நேரம்: காலை 7.45 - 12 மணி

துலாம்

துலாம்

துலா ராசி நேயர்களே, இன்னிக்கு விட்டுக்கு தேவையான புது பொருட்களை வாங்குறதுல ஆர்வம் காட்டுவீங்க. திடீர் பண வரத்தும் இருக்கும்கிறதுனால பேங்க் பேலன்ஸ் கூடும். குடும்ப வாழ்க்கையும் குதூகலமா இருக்கும். குடும்ப உறுப்பினர்களும் சந்தோஷமா இருப்பாங்க. வீட்டுல பெரியவங்களோட அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். பிள்ளைங்க வழியில சந்தோஷமான செய்திங்க உங்களை தேடி வரும். வேலையில ரொம்பவே பிசியா இருப்பீங்க.

ராசியான நிறம்: ஆரஞ்ச்

ராசியான எண்: 14

ராசியான நேரம்: பிற்பகல் 12 மணி - இரவு 9 மணி

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல புது நபரோட அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்களும் இன்னிக்கு வசூலாகிடும். லவ் பண்றவங்களுக்கு ரொமான்ஸ் கூடும். பிசினஸ் இம்ப்ரூவ்மெண்ட்டுக்காக நீங்க எடுக்குற முயற்சிகள்ல கூடுதல் எச்சரிக்கையும் கவனமும் அவசியம். குடும்ப உறுப்பினர்கள் கூட சின்னதா மனஸ்தாபம் உண்டாகலாம். பிள்ளைங்க வழியில சின்னச் சின்ன மனசங்கடங்கள் ஏற்படலாம். மனசுக்கு பிடிச்சவங்க கண்டுக்காம போறது உங்களுக்கு மன சங்கடத்தை கொடுத்துடும். ஹெல்த் கண்டிஷன்ல் அக்கறை காட்டுறது நல்லது.

ராசியான நிறம்: சிவப்பு

ராசியான எண்: 17

ராசியான நேரம்: பிற்பகல் 12.45 மணி - 5.20 மணி

தனுசு

தனுசு

தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்களோட சப்போர்ட் மற்றும் ஒத்தாசை கிடைக்கும். பண வரத்தும் இன்னிக்கு அமோகமா இருக்கும். எதிர்ப்புகளை அருமையா சமாளிப்பீங்க. குடும்ப உறுப்பினர்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. பிசினஸ்ல கூட்டாளிங்களோட சின்னதா மனஸ்தாபம் உண்டாகலாம். கொஞ்சம் கவனமா தன்மையா நடந்துக்குறது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் கிட்ட பேசும்போது கொஞ்சம் எச்சரிக்கையோட பேசுங்க. ஹெல்த் கண்டிஷன் இன்னிக்கு அற்புதமா இருக்கும்.

ராசியான நிறம்: இளம் பச்சை

ராசியான எண்: 6

ராசியான நேரம்: பிற்பகல் 1 மணி - மாலை 5 மணி

மகரம்

மகரம்

மகர ராசி நேயர்களே, இன்னிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீங்க. கணவன் மனைவிக்கு நடுவுல சின்னச் சின்ன மனஸ்தாபம் வந்து போகும். இருந்தாலும் நெருக்கும் கூடிடும். பிசினஸ்ல வியாபாரம் பெருகி லாபம் அதிகமா வரும். குடும்பத்துல பிள்ளைங்களும் ரொம்பவே பாசமா இருப்பாங்க. உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு ரொம்ப அமோகமா இருக்கும். மனசளவுலயும் உடலளவுலயும் ரொம்பவே உற்சாகமா இருப்பீங்க.

ராசியான நிறம்: மெரூன்

ராசியான எண்: 26

ராசியான நேரம்: காலை 4.20 பிற்பகல் 12 மணி

கும்பம்

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல மன உளைச்சலும், மாற்றங்கள் உருவாகலாம். பண வரத்தும் சிறப்பா இருக்கும். லவ் பண்றவங்களுக்கு லவ் ஃபீலிங்க ரொம்பவே வாட்டி வதைக்கும். கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வீட்டை விட்டு வெளிய போகாதீங்க. சுப காரிய முயற்சிகள்ல தடை தாமதம்னு ஏற்படலாம். ஃப்ரண்ட்ஸுங்களை சந்திச்சி பேசுறதுனால மன பாரம் குறையும். பிசினஸ்ல கூட்டாளியை அனுசரிச்சி போறது நல்லது. ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது. இல்லேன்னா மருந்து மாத்திரைன்னு செலவழிக்க வேண்டியதிருக்கும்.

ராசியான நிறம்: ப்ளூ

ராசியான எண்: 17

ராசியான நேரம்: காலை 7.15 மணி - மாலை 2.05 மணி

மீனம்

மீனம்

மீன ராசி நேயர்களே, இன்னிக்கு குடும்ப உறுப்பினர்கள் ரொம்பவே குதூகலமா இருப்பாங்க. லவ் பண்றவங்க ரொம்பவே உற்சாகமா இருப்பீங்க. பணம் கொடுக்கல் வாங்கல்ல கொஞ்சம் கூடுதல் கவனத்தோட நடந்துக்குறது நல்லது. சொந்தக்காரங்களால நல்லது நடந்துடும். செலவுகளும் கண்ட்ரோல்ல இருக்கும். சிலருக்கு உத்தியோக ரீதியா வெளியூர் பிரயாணம் பண்ற வாய்ப்பு இருந்தாலும், இந்த சமயத்துல கூடுதல் எச்சரிக்கையோட இருக்குறது நல்லது. இன்னிக்கு நீங்க தொட்டது துலங்கும். செல்வாக்கும் சொல்வாக்கும் கூடிடும்.

ராசியான நிறம்: மஞ்சள்

ராசியான எண்: 12

ராசியான நேரம்: பிற்பகல் 1.05 மணி - மாலை 5 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, May 19, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion