Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
இந்த ராசிக்காரங்க வீட்ல நல்ல காரியம் நிறைய நடக்கும் சுப செலவுகள் வரும்...
கொரோனா லாக்டவுன்ல வீட்டுக்குள்ள இருந்தாலும் செய்ய வேண்டிய செலவு வந்துக்கிட்டுதான் இருக்கு. பண வருமானத்திற்கு வழி இல்லைன்னானும் வரப்போற செலவு சொல்லிக்கிட்டா வருது.
கொரோனா லாக்டவுன்ல வீட்டுக்குள்ள இருந்தாலும் செய்ய வேண்டிய செலவு வந்துக்கிட்டுதான் இருக்கு. பண வருமானத்திற்கு வழி இல்லைன்னானும் வரப்போற செலவு சொல்லிக்கிட்டா வருது. இன்னைக்கு யாருக்கெல்லாம் சுப செலவு வரும், யாருக்கெல்லாம் விரைய செலவு வரும்னு கேட்கறீங்களா? உங்க கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன்கள் பதில் சொல்லுது படிங்க.

மேஷம்
இன்னிக்கு கூடப்பொறந்தவங்க மூலமா நிறைய நல்லதுங்க நடக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு பார்ட்னர் வழியில புது ஆர்டர்கள் கிடைக்கலாம். புதுசா சொத்து பத்து வாங்குறதுல இருந்து வந்த இடைஞ்சல், தடங்கள் விலகி நல்ல இம்ப்ரூவ்மெண்ட் ஏற்படும். பணவரத்தும் தாராளமா இருக்கும்கிறதுனால, கடனும் ஓரளவு குறைய வாய்ப்பிருக்கு. கூடவே சுப செலவுகளும் வரும்.
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 6
சாதகமான நேரம் : பிற்பகல் 1:00 முதல் மாலை 5:00 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு உங்க குடும்பத்துல மனசுக்கு சந்தோஷம் கொடுக்குற மாதிரியான நல்ல சம்பவங்கள் நடக்கும். அதனால வேலையையும் ரொம்பவே உற்சாகமா செய்வீங்க. கல்யாணம் சம்பந்தமான பேச்சுவார்த்தையில இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு வெளியூர்ல இருந்து புது வேலைக்கான வாய்ப்பு வரலாம். யோசிச்சி முடிவெடுங்க. பிசினஸ்லயும் நல்ல லாபம் கிடைக்கும். நல்ல காரியத்திற்காக சந்தோஷமாக செலவு பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 13
சாதகமான நேரம் : மாலை 4:15 முதல் இரவு 10:20 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு வண்டி வாகனத்துனால எதிர்பாக்காம திடீர் செலவுங்க வந்து உங்க கையை கடிச்சிடும். குடும்பத்துல உள்ளவங்க கிட்ட கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரிச்சி போனீங்கன்னா, பிரச்சனை பெருசாகாம அவாய்ட் பண்ணலாம். இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொஷிசனும் சுமாரா தான் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 5:20 மணிவரை

கடகம்
இன்னிக்கு வண்டி வாகனத்துல வெளியில எங்கயும் போக வேணாம். பிரச்சனை வந்துடும். பேச்சுலயும் கொஞ்சம் நிதான போக்கோட நடந்துக்குறது நல்லது. இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால ஹெல்த் கண்டிஷன்ல சின்னதா பாதிப்புங்க வந்துடும். கவனமா இருந்துக்கோங்க. அதோட சாப்பாட்டு விஷயத்துலயும் கொஞ்சம் நாக்கை கண்ட்ரோல் பண்ணுங்க.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 2:05 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு பிசினஸ்ல பார்ட்னரோட ஏற்பட்ட மன சங்கடங்கள் காணாம போயிடும். வெளியில கொடுத்த கடன் தொகையும் உங்க கைக்கு வந்துடும். அதோட பிள்ளைங்களோட படிப்புக்கா வெளியில கடன் வாங்குறதுக்கும் வாய்ப்பு கிடைச்சிடும். கூடவே, எதிர்பாத்த உதவி, ஒத்தாசையும் தாமதமில்லாம கிடைக்க வாய்ப்பிருக்கு. வீட்டுலயும் எதிர்பாக்காம சுபச்செலவுங்க ஏற்படலாம். கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

கன்னி
இன்னிக்கு நீங்க எந்த ஒரு வேலையையும் ரொம்ப துணிச்சலா செஞ்சி முடிக்கிறதுக்கு எனர்ஜி கிடைக்கும். பிசினஸ்லயும் லாபம் அமோகமா இருக்கும். வீட்டுக்கு தேவையானதை வாங்குவீங்க. சொந்தக்காரங்க வர்றதுனால வீட்டுலயும் சந்தோஷம் கூடிடும். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு சம்பளம் கிடைக்குறதுல சிக்கல் உண்டாகும். இன்னிக்கு உங்களுக்கு தன்னம்பிக்கையும் துணிச்சலும் கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 14
சாதகமான நேரம் : நண்பகல் 1:05 முதல் மாலை 5:00 மணிவரை

துலாம்
இன்னிக்கு குடும்பத்துல நிம்மதி இல்லாத சூழ்நிலை ஏற்படும். பிசினஸ்ல வேலையாட்களை கொஞ்சம் அனுசரிச்சி போனீங்கன்னா நல்லது. எதிர்பாத்துட்டு இருந்த இடத்துல இருந்து ஹெல்ப் கிடைச்சிடும். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு ப்ரமோஷனோட வெளியூருக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கலாம். கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல யோசிச்சி முடிவெடுக்குறது நல்லது. பிள்ளைங்களால மன உளைச்சல் உண்டாகலாம். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா திடீர்னு தண்டச் செலவுங்க வந்துடலாம். கொஞ்சம் கவனமா நடந்துக்கிட்டா தண்டச் செலவுங்களை தவிர்த்துடலாம். வெளியூர் பிரயாணத்தை கொஞ்சம் அவாய்ட் பண்றது நல்லது. குடும்பத்துல இருக்குற பெரியவங்க கூட அநாவசிய மனஸ்தாபம் உண்டாகலாம். கவனமா நடந்துக்கோங்க. இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 8:20 மணிவரை

தனுசு
இன்னிக்கு சுபகாரிய பேச்சுவார்த்தையில இருந்து வந்த தடங்கல் காணாம போயிடும். உங்க தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். பேங்க் பேலன்ஸும் கூடும். அதோட இன்னிக்கு உங்களோட ஹெல்த் கண்டிஷனம் ரொம்ப சிறப்பா இருக்கும். நல்ல காரியங்களுக்காக நீங்க நிறைய செலவு பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

மகரம்
இன்னிக்கு பிள்ளைங்களால சின்ன சின்ன பிரச்சனைங்க ஏற்படலாம். எதுலயும் கொஞ்சம் பொறுமையா நடந்துக்குறது நல்லது. பிசினஸ் வளர்ச்சிக்காக நீங்க எடுக்குற முயற்சிங்க எல்லாத்துக்கும் உரிய பலன் கிடைச்சிடும். வீட்டுப் பெண்களும் தங்களோட பொறுப்பை புரிஞ்சி நடந்துக்குவாங்க. இன்னிக்கு வீட்டோட ஃபைனான்ஸ் பொஷிசனும் சுமாரா தான் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 1:25 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கும்பம்
இன்னிக்கு பிசினஸ்ல வியாபாரம் அமோகமா நடந்து லாபம் பெருகிடும். உத்தியோகத்துல இதுவரைக்கும் இருந்து வந்த எதிரிங்களோட பிரச்சனையும் காணாம போயிடும். ஹெல்த் கண்டிஷன்லயும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். இன்னிக்கு பண வரத்தும் அமோகமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 24
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 3:45 மணிவரை

மீனம்
இன்னிக்கு நீங்க எந்த வேலையை செஞ்சாலும் நல்லா ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சி முடிவெடுக்குறது நல்லது. உத்தியோகம் சம்பந்தமான பிரயாணத்துனால தேவையில்லாத அலைச்சலும், தண்டச் செலவுங்களும் தான் ஏற்படும். பிசினஸ்லயும் இதுவரைக்கும் வராத பாக்கி பணமும் இன்னிக்க வசூலாகிடும். சொந்தக்காரங்களால குடும்பத்துலயும் சந்தோஷம் கிடைக்கும். நீங்க எடுக்குற முயற்சிங்களுக்கு இன்னிக்கு வெற்றி கிடைச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம் : மெருன்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : அதிகாலை 4:20 முதல் நண்பகல் 12:00 மணிவரை



Click it and Unblock the Notifications