Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
இந்த ராசிக்காரங்க வாயை திறந்தால் வம்பு வரும் கவனம்...
இன்றைய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து உங்க ராசிக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம். உங்களுக்கு பணம் வருமா? ஏதாவது சேமிக்க முடியுமா என்றெல்லாம் யோசிக்கிறீங்களா?
இன்றைய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து உங்க ராசிக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம். உங்களுக்கு பணம் வருமா? ஏதாவது சேமிக்க முடியுமா என்றெல்லாம் யோசிக்கிறீங்களா? உங்க எல்லா கேள்விகளுக்கும் ராசி பலன்கள் மூலம் ஈஸியான விடை கிடைக்கும்.

மேஷம்
உங்க குடும்பம் இன்றைக்கு குதூகலமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நடக்கும் ரொமான்ஸ் என்றைக்கும் மறக்கமுடியாத நினைவுகளாக அமைந்து விடும். திருமணம் சம்பந்தமான சுபமுயற்சிகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவுகளினால் அலைச்சல்கள் ஏற்படும். வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்
அதிர்ஷ்ட எண் : 23
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 8:30 மணிவரை

ரிஷபம்
இன்றைய தினம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமாக இருக்கவும். தேவையற்ற விசயங்களில் தலையிட வேண்டாம். மன அமைதிக்காக ஆலய தரிசனம் செய்யலாம். குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிந்தனைகள் மேம்படும். பணியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட முயற்சிகளில் பல இன்னல்கள் தோன்றும். எதிர்பார்த்த பயணங்களை மேற்கொள்ள காலதாமதமாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் பேச்சில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் மாலை 6:45 மணிவரை

மிதுனம்
உங்கள் வாழ்க்கை துணையை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். காதல் நினைவுகள் உற்சாகமூட்டும். செய்யும் பணியில் மாற்றங்கள் ஏற்படுத்தும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. உடல்நிலையும், பொருளாதார சூழ்நிலையும் சுமாராகவே இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்த முயல்வீர்கள். உங்கள் நலனிலும் பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டவும். வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகும்.
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : விடியற்காலை 4:25 முதல் நண்பகல் 12:30 மணிவரை

கடகம்
இன்றைக்கு உங்களுடைய கடன் பிரச்சினைகள் இன்று தீரும். நோய்கள் வெளிப்பட்டு அது குணமடைய மருத்துவ செலவுகள் செய்வீர்கள். வேலையில் பளு கூடினாலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். பொருளாதார சூழ்நிலை நன்றாக இருக்கும். மண வாழ்க்கையில் இன்றைக்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். வாழ்க்கைத்துணையுடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். தொழில் சார்ந்த முதலீடுகளில் நிதானமாக செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் இரவு 7:30 மணிவரை

சிம்மம்
உங்களின் மனதையும், உடலையும் உற்சாகப்படுத்த குடும்பத்தினருடன் உங்களின் இனிமையான நேரத்தை செலவிடுங்கள். இன்றைக்கு உங்கள் துணைவர் சின்ன சர்ப்ரைஸ் கொடுத்து உங்களை அசத்துவார். பொன் பொருட்சேர்க்கை அதிகரிக்கும். பயணங்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சாமர்த்தியமான பேச்சால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : மாலை 5:40 முதல் இரவு 9:40 மணிவரை

கன்னி
இன்றைக்கு உங்க அம்மாவின் உடல் நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள், உங்களின் காதல் வாழ்க்கை உங்களுக்கு வெற்றியைத் தரும். மண வாழ்க்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சகோதரர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். இன்றைக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும் வர வேண்டிய பணம் கிடைக்க காலதாமதமாகும். சிக்கலான சில விஷயங்களை சாதுர்யமாக பேசி முடித்து விடுவீர்கள். மற்றவர்களிடம் கோபமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 29
சாதகமான நேரம் : மாலை 4:55 முதல் இரவு 10:00 மணிவரை

துலாம்
இன்றைக்கு உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உங்களின் சொல்வாக்கும், செல்வாக்கும் அதிகரிக்கும். உங்களின் மன வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான நாளாக இன்றைக்கு அமையும். இன்றைய மாலைப்பொழுதை உங்களின் வாழ்க்கைத்துணையுடன் இனிமையானதாக மாற்றுங்கள். தைரியத்துடன் புதிய காரியங்களை செய்வீர்கள். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். தனவரவு எதிர்பார்த்தப்படி இருக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : முற்பகல் 10:05 முதல் மாலை 4:00 மணிவரை

விருச்சிகம்
இன்றைய தினம் உடல் நலம் சுமாராக இருக்கும். உங்க பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். எந்தவொரு செயலையும் செய்யும் முன்பு சிந்தித்துச் செயல்படவும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:55 மணிவரை

தனுசு
இன்றைக்கு உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். மனதில் சஞ்சலம் இருந்தாலும் அலுவலகத்தில் உற்சாகமாக வேலை செய்வீர்கள். எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான போட்டிகள் அதிகரிக்கும். செய்யும் வேலைகளில் கவனத்துடன் ஈடுபடவும். பேச்சில் கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல்களால் லேசான உடல்சோர்வு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 6
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் மாலை 6:15 மணிவரை

மகரம்
உங்களுக்கு இன்றைக்கு பணவரவு அதிகமாக இருந்தாலும் சுப விரைய செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் செல்லுங்கள். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக இருங்கள். உடல் நலம் சீராக இருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். தொழில் தொடர்பான செயல்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சாதுர்யமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பொருட்களை கவனமாக கையாளவும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : நண்பகல் 1:20 முதல் இரவு 7:30 மணிவரை

கும்பம்
இன்றைக்கு உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். மனதில் புதுவிதமான நம்பிக்கையும், மகிழ்ச்சியும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 16
சாதகமான நேரம் : மாலை 6:25 முதல் இரவு 8:40 மணிவரை

மீனம்
உங்க உடல் நிலையும், பொருளாதார நிலையும் அற்புதமாக இருக்கும். காதல் துணையுடன் சிறு ஊடல் ஏற்படும், பேச்சில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளால் மனக்கசப்புகள் ஏற்படக்கூடும். முக்கியமான செயல்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களால் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்
அதிர்ஷ்ட எண் : 22
சாதகமான நேரம் : மாலை 1:25 முதல் இரவு 8:40 மணிவரை



Click it and Unblock the Notifications











