Latest Updates
-
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மே 17 முதல் அடுத்த 5 மாதம் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி, எடை மடமடன்னு குறையும்.. -
இன்றைய ராசிபலன் 05 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க..
நீங்க இந்த ராசியா? அப்போ இன்னைக்கு உங்களுக்கு இந்த சம்பவம்லாம் இருக்குது...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
Recommended Video
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
எந்த காரியத்தையும் மன தைரியத்துடன் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்து வந்த சின்ன சின்ன இன்னல்கள் நீங்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த உறவுகள் மேம்படும். உங்களுடைய தொழில் மற்றும் உத்தியோகத்தில் சில சில புதுமையான விஷயங்களை செய்ய முயற்சி செய்வீர்கள். பிறருடைய பிரச்னைகளுக்கு ஆலோசனைகள் சொல்வதைக் கொஞ்சம் தவிர்த்து விடுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

ரிஷபம்
உங்களுடைய முக்கியமான பணிகளைப் பிறரை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். ஆன்மீகத்தில் உங்களுடைய ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் அதிகரிக்கும். நண்பர்களுடைய அன்பும் ஆதரவும் கிடைக்க ஆரம்பிக்கும். உங்களுடைய சேமிப்புகள் அதிகரிக்க ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்
வீட்டில் பிள்ளைகளுடைய மகிழ்ச்சியும் உறவினர்களால் அதிக ஆதாயமும் கிடைக்கும். வீட்டுக்கு விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பெரிய மகான்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் இருந்து வந்த சின்ன பிரச்னைகளைத் தீர்க்க வீட்டில் உள்ளவர்களுடைய ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்
உங்களுக்கு இருக்கின்ற மறைமுக எதிர்ப்புகளினால் இருந்து வந்த இன்னல்கள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய செயல்களினால் மற்றவர்கள் பயன் பெறுவார்கள். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கு நெருக்கமானவர்கள் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். நண்பர்களுடைய முழு ஆதரவும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்
குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களுடைய முழுமையான ஆதரவு கிடைக்கும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். பயணங்களின் மூலமாக உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேற ஆரம்பிக்கும். பேசுகின்ற போர் கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்கள். வீட்டில் குழந்தைகளின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

கன்னி
உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களிடம் சக ஊழியர்களுடைய வீண் விவாதங்களைத் தவிர்ப்பது மிக நல்லது. நீங்கள் திட்டமிட்ட செயல்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எந்த சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய செலவுகளால்நெருக்கடியான சூழல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடைய பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்
புதிய தொழில்கள் தொடங்குவதற்கான உங்களுடைய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். உறவினர்களுடைய முழு ஆதரவினால் தொழிலில் சில மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளுடன் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
திருமணப் பேச்சு வார்த்தைகள் உங்களுக்கு சாதகமாகவே முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செயல்வேகம் அதிகரிக்கும். உடல் நலம் மேம்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். உங்கள் மீதான நம்பிக்கைகள் சீர்குலைவதற்கான சூழல்கள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு
உங்களுடைய உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனங்கள் வாங்கி, மகிழ்வீர்கள். புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். தாய்வழியிலான உறவினர்களுடன் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

மகரம்
வெளியூா் பயணங்களினால் கொஞ்சம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் உங்களுக்கு அனுகூலமான பலன்களே கிடைக்கும். தொழிலில் உங்களுடைய லாபங்கள் இருமடங்காக உயர ஆரம்பிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இன்று இருக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த நபரை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் முனைவோருக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கும்பம்
குடும்பத்திற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களுடைய நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேற ஆரம்பிக்கும். உங்களுடைய நட்பு வட்டாரங்கள் விரிவடையத் தொடங்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசனை செய்து, பழைய பிரச்னைகளுக்கு சுமூகமான தீர்வு காண்பீர்கள். தொழில் செய்கின்றவர்களுக்கு பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்
இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளால் இன்னல்கள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய செயல்களினால் மற்றவர்கள் பயன் அடைவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். நெருக்கமானவர்களின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். நண்பர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications