For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கப் போறது இந்த 5 ராசிக்காரங்க தான்...

உங்க அதிர்ஷ்டம் இன்றைக்கு எப்படி இருக்கும்னு நினைக்கறீங்க. இன்றைய நாள் சவாலானதாக இருக்குமா? சந்தோஷத்தை கொடுக்குமா? இன்றைய ராசிபலன்களை படிக்க ஆர்வத்தோட இருக்கீங்களா? இன்றைக்கு மேஷம், ரிஷபம், மிதுனம் ரா

|

உங்க அதிர்ஷ்டம் இன்றைக்கு எப்படி இருக்கும்னு நினைக்கறீங்க. இன்றைய நாள் சவாலானதாக இருக்குமா? சந்தோஷத்தை கொடுக்குமா? இன்றைய ராசிபலன்களை படிக்க ஆர்வத்தோட இருக்கீங்களா? இன்றைக்கு மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்கள் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கங்க. எல்லா ராசிக்காரங்களுக்கும் இன்றைக்கு நன்மையும் தீமையும் கலந்த நாளாகவே இருக்கும்னு இன்றைய ராசிபலன் சொல்லுது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னிக்கு நீங்க ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணுவீங்க. இந்த சான்ஸை மிஸ் பண்ணாம என்ஜாய் பண்ணுங்க. உங்க ஃப்ரண்ட்ஸுங்க கூட எங்கேயாவது பார்ட்டி அல்லது சினிமாவுக்கு போய் நல்ல என்ஜாய் பண்ணுங்க. அப்போ தான் மனசும் லேசாகும். ஃபேமிலியில எல்லோரும் அமைதியா இருக்கணும்னா, தயவு செய்து அவங்களுக்கு எந்த தொந்தரவோ அழுத்தமோ கொடுக்காதீங்க. அவங்களோட ஃபீலிங்ஸையும், அவங்க சந்தோஷத்தையும் கொஞ்சம் மதிக்க கத்துக்கோங்க. இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷன் நார்மலா தான் இருக்கும். அதனால தடபுடலா செலவு பண்றதை அவாய்ட் பண்ணுங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு அவ்வளவு நல்லா இல்லைங்க. வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு நாள் ரொம்ப நல்லா தான் இருக்கும். ஆனா, என்னமோ ரொம்ப டல்லாவே ஃபீல் பண்ணுவீங்க. ஒவ்வொரு நிமிஷமும் முக்கியம்கிறதை புரிஞ்சிகிட்டு வேலையை பார்க்கலைன்னா, அந்த வேலை எல்லாமே பெண்டிங்ல நிக்கும்.இன்னிக்கு உங்களோட ஹெல்த் கண்டிஷன் ரொம்ப நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : லைட் பிங்க்

அதிர்ஷ்ட எண் : 45

சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 7:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்னிக்கு நீங்க பாக்குற வேலை எல்லாமே வெற்றிகரமா முடியும். இதனால உங்க சக ஊழியர்களும், சீனியரும் உங்களை பாராட்டி உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. பார்ட்னர்ஷிப் பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நல்ல லாபம் கிடைக்க சான்ஸ் இருக்கு. மேரேஜ் லைஃப் ஸ்மூத்தா போகும். சொந்தக்காரங்க இன்னிக்கு கொஞ்சம் முறைப்பா இருப்பாங்க. ஃபேமிலி விஷயத்துல கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது. ரொம்ப அசால்ட்டா இருந்தீங்கன்னா, ரொம்ப பெரிய பிரச்சனை வர்றதுக்கு வாய்ப்பு இருக்குது. அதோட, உங்களோட அவசர புத்தியினால தேவையில்லாம சில சிக்கல் ஏற்படுறதுக்கும் வாய்ப்பு இருக்குங்க. உங்க மெண்டல் டிப்ரஷனை கொஞ்சம் அவாய்ட் பண்ணுங்க. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் வழக்கம்போல நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நேரம் : பிற்பகல் 3:15 முதல் இரவு 7:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்னிக்கு மேரேஜ் லைஃப்ல ஸ்மூத்தா நகரும். லைஃப் பார்ட்னரோட ரிலேசன்ஷிப் ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்லலாம். இன்னிக்கு அதிர்ஷ்டம் உங்களை தேடிவரும். ஏன்னா, கொஞ்சமா ரிஸ்க் எடுத்து கூடுதலா நன்மைகள் கிடைக்க வாய்ப்பு இருக்குது. ஃபைனான்ஸ் பொசிஷன் ஏத்த இறக்கமாதான் இருக்கும். புதுசா ஏதாவது ஒரு சொத்தோ அல்லது பொருளோ வாங்க வாய்ப்பு இருக்குது. அதனால செலவுகளும் ஜாஸ்தியாயிடும். ஆஃபீஸ்ல வேலையில எந்த தொந்தரவும் இல்லாம ஸ்மூத்தா நடக்கும். ஹெல்த் ஏதாவது மக்கர் பண்ணிச்சின்னா உடனடியா போய் டாக்டரை பாருங்க.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : பிற்பகல் 1:30 முதல் மாலை 5:00 மணிவரை

கடகம்

கடகம்

இன்னிக்கு நீங்க அவசரப்பட்டு எந்த வேலையையும் செய்யாதீங்க. அப்படி செஞ்சா தேவையில்லாம சிக்கல்ல கொண்டு போய் விட்டுடும். உங்க ஒய்ஃப் கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. அதே மாதிரி சில சவால்களையும் சந்திக்க வேண்டியதிருக்கும். உங்களோட தகுதிக்கு குறைச்சலா வேலையை உங்களுக்கு அலாட் பண்ண வாய்ப்பிருக்குது. இருந்தாலும் டென்ஷன் ஆகாம, வலைப்படாம உங்களோட டேலண்ட்டை காட்டி எந்த வேலையா இருந்தாலும் என்னால செய்ய முடியும்கிறதை ப்ரூஃப் பண்ணுவீங்க. எந்த முடிவை எடுத்தாலும் நிதானமா யோசிச்சி அப்புறமா எடுக்குறது ரொம்ப நல்லது. அதோட உங்க மனசையும் ரிலாக்ஸா வச்சிக்கிடறது பெட்டர்.

அதிர்ஷ்ட நிறம் : சாஃப்ரூன்

அதிர்ஷ்ட எண் : 44

சாதகமான நேரம் : காலை 6:20 முதல் காலை 9:30 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்னிக்கு உங்களுக்கு ரொம்ப முக்கியமான நாள். உங்களோட பெர்சனல் லைஃப்ல ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில இருக்கீங்க. ஃபேமிலி மெம்பர்ஸும் இன்னிக்கு ரொம்ப முறைச்சிகிட்டு தான் இருப்பாங்க. ஃபேமிலி மெம்பர்ஸ் யாருமே இன்னிக்கு உங்களுக்கு சப்போர்ட்டா இருக்காம ஒதுங்கி இருப்பாங்க. ஆஃபீஸ்லயும் இன்னிக்கு உங்களுக்கு பிரச்சனை ரெடியா காத்துக்கிட்டு இருக்குதுங்க. உங்களை கவுக்குறதுக்குன்னே சில பேர் ரெடியா குழிய வெட்டிட்டு காத்துகிட்டு இருக்காங்க. அதனால இன்னிக்க ஆஃபீஸ்ல எடுத்து வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்ஸையும் கவனமா எடுத்து வைய்ங்க. ஃபைனான்ஸ் மேட்டர்ல அவசரப்படாதீங்க. கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை உருப்படியா ஏதாவது ஒண்ணுல இண்வெஸ்ட் பண்ணுங்க. இன்னிக்கு உங்க ஒய்ஃப் குதர்க்கமா நடந்துக்குவாங்க. அதனால அவங்க கிட்ட கொஞ்சம் நிதானமா பக்குவமா நடந்துக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் மாலை 6:30 மணிவரை

கன்னி

கன்னி

நீங்க வாழ்க்கையில முன்னுக்கு வரணும்னா, மொதல்ல நெகடிவ் எண்ணத்தை விட்டுத்தள்ளுங்க. உங்களோட தப்பான அணுகுமுறை உங்களை முன்னேற விடாம தடுக்கும். ஃபைனான்ஸ் பொசிஷனை பொறுத்த வரைக்கும், இன்னிக்கு நாள் நல்லாவே இருக்கும்னு சொல்லலாம். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லாவே இருக்குதுங்க. ஆஃபீஸ்ல ப்ரமோஷன் கூட கிடைக்க வாய்ப்பு இருக்குது. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு கொழுத்த லாபம் கிடைக்கலாம். மேரேஜ் லைஃப் ரொம்ப அமைதியா ஸ்மூத்தா கொண்டு போகணும்னா, நீங்க உங்க கேரக்டரை கொஞ்சம் மாத்திக்கோங்க. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படுறதை நிப்பாட்டுங்க. அதனால உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல கேப் விழறதுக்கு சான்ஸ் இருக்குது. இன்னிக்கு புதுசா ஒரு வேலையை ஆரம்பிக்க நினைச்சீங்கன்னா, இன்னிக்கு நாள் நல்லா இருக்குது. உடனே ஆரம்பிங்க. இன்னிக்கு உங்க வீட்டுக்கு எதிர்பாக்காம சொந்தக்காரங்க வரலாம். அதனால வீடு கலகலப்பா மாறிடும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 25

சாதகமான நேரம் : காலை 6:00 முதல் காலை 9:30 மணிவரை

துலாம்

துலாம்

நீங்க இன்னைக்கு வேலை செய்யிற இடத்தில ரொம்ப டென்ஷனா ஃபீல் பண்ணுவீங்க. உங்க சீனியரோட ஒர்க் ப்ரஷரும் கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கும். மனசை ரிலாக்ஸா வச்சிக்கங்க இல்லாட்டி உங்க வேலையை நீங்க சரியா செய்ய முடியாது. பண வருமானம் இன்னைக்கு அதிகமாகவே இருக்கும். உங்க வீட்டை அழகுபடுத்துவீங்க. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. குடும்பத்தில எல்லோர் கூடவும் சந்தோஷமாக பேசி பழகுவீங்க. இந்த ராசிக்கார மாணவர்கள் படிப்பில கொஞ்சம் அக்கறை எடுத்துக்கணும். கவனமாக படிக்காட்டி டீச்சர் கிட்ட திட்டு வாங்கணும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் மனசு விட்டு பேசுங்க நல்லது நடக்கும். உங்க உடல் நலத்தில நீங்க அக்கறை எடுத்துக்கங்க.

அதிர்ஷ்ட நிறம் : காவி

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்றைக்கு உங்களுக்கு ரொம்ப நல்ல நாள். உங்க லைஃப் பார்ட்னரோட நீங்க ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க. பிரச்சினைகளை பேசி தீர்ப்பீங்க. உங்க பாய் ஃபிரண்ட் இல்லைன்ன கேர்ள் ஃபிரண்டுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் வாங்கி கொடுப்பீங்க ரொம்ப ஸ்பெஷலான நாளாக அமையும். உங்க நிதி நிலைமை இன்னைக்கு சுமாராகத்தான் இருக்கும். பழைய கடன் பிரச்சினைகள் இப்ப வந்து குடைச்சலை கொடுக்கும். அதுவே உங்களுக்கு பெரிய தலைவலியை கொடுக்கும். பணத்தை பத்திரமாக சேமித்து வையுங்கள். வேலை செய்யிற இடத்தில உங்களுக்கு ரொம்ப நல்ல நாள். எல்லா வேலைகளையும் உற்சாகமாக சந்தோஷமாக செய்து முடிப்பீங்க. வியாபாரிகளுக்கு இன்றைக்கு ரொம்ப சாதாரணமான நாள். ரியல் எஸ்டேட் துறைகள் வீடு, நிலங்களில் முதலீடு செய்வதற்கு முன்னாடியும் லீகல் அட்வைஸ் கேட்டுக்கங்க. அட்வைஸ் கேட்டுக்கங்க ரொம்ப நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை

தனுசு

தனுசு

இன்னைக்கு உங்களுக்கு ரொம்ப நல்ல நாள். எதிர்ப்புகளை சமாளித்து ஜெயிப்பீங்க. அலுவலகத்தில உங்க சீனியர்ஸ் கிட்ட பேசும் போது கவனமாக இருங்க. திருமணமான தம்பதியினருக்கு ரொம்ப நல்ல நாள். உங்க சுற்றுச்சூழல் ரொம்ப அமைதிய இருக்கும். வீட்ல குடும்ப உறுப்பினர்கள் கிட்ட ரொம்ப அன்பா பழகுவீங்க. பணம் விசயத்தில ரொம்ப கவனமாக இருங்க. இன்றைக்கு ரொம்ப பணம் அதிகம் சம்பாதிப்பீங்க. உடல் நல விசயத்தில ரொம்ப கவனமாக இருங்க அஜாக்கிரதையாக இருக்காதீங்க அப்புறம் கவலைப்பட வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 12

அதிர்ஷ்ட நேரம் : காலை 8.30 மணி மாலை 6 மணி

மகரம்

மகரம்

இன்னைக்கு உங்க வேலையில நீங்க ரொம்ப பிஸியா இருப்பீங்க. உங்க சீனியர்ஸ் உங்களுடைய வேலையை பார்த்து பாராட்டுவார். பிசினஸ் செய்பவர்களுக்கும் இன்னைக்கு ரொம்ப நல்ல நாள். உங்க லைப் பார்ட்டனரோட நீங்க ரொம்ப நேரம் செலவு பண்ணுவீங்க. உங்க நிதி நிலைமை ரொம்ப நல்லா இருக்கும். பணம் நிறைய இருக்குன்னு தாம் தூம்னு ரொம்ப செலவு பண்ணாதீங்க. எல்லா பணமும் விரையமாகி அப்புறம் நீங்க வெறும் பாக்கெட்டோடுதான் வீட்டுக்கு திரும்பணும் ஜாக்கிரதை. உங்க பெற்றோர்கள் கிட்ட எதையும் தெளிவா பேசுங்க இல்லாட்டி அவங்க உங்களை தவறா புரிஞ்சுக்குவாங்க. உங்க உடல் ஆரோக்கியம் இன்னைக்கு அற்புதமாக இருக்கும்.

ராசியான நிறம் : பர்ப்பிள்

ராசியான எண் : 5

ராசியான நேரம் : இரவு 7.05 மணி முதல் இரவு 10 மணி வரை

கும்பம்

கும்பம்

குடும்ப உறுப்பினர்கள் கிட்ட ரொம்ப ஒற்றுமையாகவும் சந்தோஷமாக பேசுவீங்க. திருமணமான தம்பதியர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக பேசுங்க இன்னைக்கு அவங்களுக்கு சுமாரான நாள்தான். ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கங்க. பண விசயத்தில இன்னைக்கு உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். பொருளாதார நிலை உற்சாகத்தை கொடுக்கும். பிசினஸ்ல இன்னைக்கு ரொம்ப நல்ல நாள். உங்க வேலைகளை நீங்க இன்னைக்கு சிறப்பா செய்து முடிப்பீங்க. மாணவர்களுக்கு இன்னைக்கு ரொம்ப முக்கியமான நாள். தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களுக்கு வெற்றிகள் பரிசாக கிடைக்கும். சந்தோஷ செய்திகள் தேடி வரும். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும்.

ராசியான நிறம் : அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 7.55 மணி நண்பகல் 12 மணி

மீனம்

மீனம்

இன்னைக்கு உங்க திருமண வாழ்க்கையில ரொம்ப அற்புதமாக இருக்கும். உங்க வாழ்க்கை துணையை நீங்க நல்லா கவனிங்க. உங்க நிதி நிலைமை இன்றைக்கு ரொம்ப உற்சாகத்தை கொடுக்கும். நிதி விவகாரத்தில் சில மாற்றங்களை செய்வீங்க. வேலை செய்யிற இடத்தில நீங்க தேவையற்ற பேச்சுக்கள் வீண் விவாதங்கள் செய்யாதீங்க. உங்க கூட வேலை செய்யறவங்க, சீனியர்ஸ்கள் கிட்ட விவாதம் செய்யவே செய்யாதீங்க. இன்னைக்கு நீங்க முக்கிய முதலீடு எதுவும் பண்ணாதீங்க. அது நஷ்டத்திலதான் முடியும். வேலை செய்யிற இடத்தில இருக்கிற மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 11

அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5.55 மணி காலை 10 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 15th November 2019 Friday

Check out the daily horoscope for 15th november 2019 friday. Read on...
Story first published: Thursday, November 14, 2019, 22:44 [IST]
Desktop Bottom Promotion