Latest Updates
-
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சுக்கிரனால் பணத்தை அள்ளப் போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார் தெரியுமா?
வைகாசி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில் சுக்கிரன் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. சிலருக்கு பணவரவு அபரிமிதமாக இருக்கும்.
வைகாசி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில் சுக்கிரன் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. சிலருக்கு பணவரவு அபரிமிதமாக இருக்கும். சிலருக்கு செலவுகள் வரும். இன்றைய தினத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களில் இன்றைய தினம் யாருக்கு அதிர்ஷ்டமழை பொழியப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ் வளர்ச்சிக்காக புதுசா திட்டமெல்லாம் போட்டு அதுல ஜெயிச்சி காட்டுவீங்க. வியாபாரத்துல லாபமும் கிடைக்கும். வருமானமும் இன்னிக்கு பெருகிடும். பேங்க் பேலன்ஸும் கூடும். பிள்ளைங்களால சுபச் செலவுங்க வந்துடும். எதிர்பாத்துட்டு இருந்த இடத்துல இருந்து உதவிகள் உங்களை தேடி வரும். கூடவே உங்களை தேடி இனிப்பான செய்திகளும் வந்துடும்.
ராசியான நிறம் : மஞ்சள்
ராசியான எண் : 9
ராசியான நேரம் : காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனை திருப்திகரமா இருக்கும். எந்த வேலையையும் உற்சாகமா செய்வீங்க. இன்னிக்கு வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால குடும்பத்துல சந்தோஷம் ஏற்படும். அதோட குடும்பத்துல இருந்து வந்த பிரச்சனைங்களும் விலகி ஓடிடும். பெண்களுக்கு ரொம்ப நாள் ஆசைகள் இன்னிக்கு பூர்த்தியாகிடும்.
ராசியான நிறம் : ரோஸ்
ராசியான எண் : 6
ராசியான நேரம் : காலை 4 மணி முதல் காலை 8 மணி வரை

மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க கூட மனசு விட்டு பேசுறதுனால மனசுக்கு நிம்மதி உண்டாகும். பொறுமையா இருந்தீங்கன்னா எந்த பிரச்சனையையும் சமாளிக்கலாம். இன்னிக்கு மனைவி வழி சொந்தக்காரங்க மூலமா உதவி ஒத்தாசைகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிக்கு தடங்கல் ஏற்படலாம். இன்னிக்கு பண வரத்து தாராளமா இருந்தாலும் அதுக்கு தகுந்த மாதிரி செலவுங்களும் வந்துடும்.
ராசியான நிறம் : இளம் பச்சை
ராசியான எண் : 7
ராசியான நேரம் : காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை

கடகம்
கடக ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, முன்னே பின்னே தெரியாதவங்க கூட அநாவசியமா பேசுறதை அவாய்ட் பண்றது நல்லது. இல்லேன்னா பிரச்சனையில மாட்டிக்குவீங்க. பிசினஸ்ல பெரிய அளவுல இண்வெஸ்ட் பண்றதை அவாய்ட் பண்ணிடுங்க. கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல, தேவையில்லாம வண்டியில வெளிய சுத்த வேணாம்.
ராசியான நிறம் : வெள்ளை
ராசியான எண் : 2
ராசியான நேரம் : காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்குள்ள அந்நியோன்யம் கூடிடும். பிள்ளைங்களோட இருந்து வந்த மனஸ்தாபமும் இன்னிக்கு காணாம போகும். உங்களுக்கு புது நம்பிக்கையும் தெம்பும் பிறந்திடும். இதுவரைக்கும் படுத்தி வந்த நோய் நொடிகளும் பறந்துடும். அதனால உங்க ஹெல்த் கண்டிஷனும் ரொம்ப அற்புதமா இருக்கும்.
ராசியான நிறம் : சிவப்பு
ராசியான எண் : 10
ராசியான நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி
கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல வியாபாரம் மந்தமா இருக்கும், லாபமும் எதிர்பாத்த அளவுல இருக்காது. கூடப்பொறந்தவங்களால நல்லது நடந்துடும். இன்னிக்கு ரொம்ப சோம்பலா ஃபீல் பண்ணுவீங்க. ஃப்ரண்ட்ஸுங்க மூலமா எதிர்பாத்த உதவி, ஒத்தாசை கிடைக்குறதுல தாமதம் ஏற்படலாம். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு கொஞ்சம் மக்கர் பண்ணும்.
ராசியான நிறம் : பச்சை
ராசியான எண் : 14
ராசியான நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

துலாம்
துலா ராசி நேயர்களே, இன்னிக்கு குடும்பத்துல இருந்து வந்த பிரச்சனைகள் குறைய வாய்ப்பிருக்கு. பிள்ளைங்களால தண்டச்செலவுங்க வந்துடும். எந்த ஒரு விஷயத்துலயும் ரொம்ப போராடி தான் ஜெயிப்பீங்க. குடும்ப உறுப்புனர்களுக்காக மருந்து மாத்திரைன்னு செலவுங்க வந்துடும்.
ராசியான நிறம் : மஞ்சள்
ராசியான எண் : 15
ராசியான நேரம் : காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, இன்னிக்கு குடும்பத்துல சொந்தக்காரங்களால தேவையில்லாத பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கு. கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க. வீடு, வண்டி, வாகனத்தை சரி பண்ணி தூசி தட்டி சுத்தமா வச்சிக்கோங்க. அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல் அக்கறை காட்டுறது நல்லது.
ராசியான நிறம் : சிவப்பு
ராசியான எண் : 5
ராசியான நேரம் : காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை

தனுசு
தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு புது பொருட்களை வாங்கி சந்தோஷப்பட்டுக்குவீங்க. கடன் பிரச்சனைகளும் இன்னிக்கு காணாம போகும். பிள்ளைங்க மூலமா சுபச் செய்திகள் தேடி வந்துடும். பெத்தவங்க கூட இருந்து வந்த மனஸ்தாபமும் விலகிடும். ஃப்ரண்ட்ஸுங்க கிட்ட எதிர்பாத்த உதவி கிடைக்கும். குடும்பத்துல செலவுகளும் கண்ட்ரோல்ல இருக்கும். மனசுக்கு சந்தோஷம் குடுக்குற சம்பவங்களும் நடந்துடும்.
ராசியான நிறம் : மஞ்சள்
ராசியான எண் : 9
ராசியான நேரம் : காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

மகரம்
மகர ராசி நேயர்களே, இன்னிக்கு கூடப்பொறந்தவங்க ரொம்ப ஒத்தாசையா இருப்பாங்க. பண வரத்து அமோகமா இருந்தாலும், செலவுகளை கண்ட்ரோல் பண்ணி சிக்கனமா செலவழிச்சா பாக்கெட் காலியாகாம தப்பிக்கலாம். பிசினஸ்லயும் எதிர்பாத்த லாபம் கிடைக்கும். ஹெல்த் கண்டிஷன்ல சின்னச் சின்ன பாதிப்புகளும் வந்துடும்.
ராசியான நிறம் : நீலம்
ராசியான எண் : 17
ராசியான நேரம் : பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

கும்பம்
கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க கூட மனசு விட்டு பேசுறதுனால மனசுக்கு உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்துடும். கூடப்பொறந்தவங்க முலமா சுபச்த செய்திகளும் உங்களை தேடி வரும். பிள்ளைங்களும் பொறுப்போட நடந்துக்குவாங்க. கல்யாண சுப காரிய பேச்சுவார்த்தைகளும் இன்னிக்கு வெற்றிகரமா முடியும்.
ராசியான நிறம் : கரு நீலம்
ராசியான எண் : 8
ராசியான நேரம் : இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை

மீனம்
மீன ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க பூர்வீக சொத்து பத்து மூலமா பணம் உங்களை தேடி வரும். கூடப்பொறந்தவங்க கூட ஒத்துமையும் சந்தோஷமும் அதிகரிக்கும். திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகளை தொடங்க இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. இன்னிக்கு பண வரத்தும் ரொம்பவே தாராளமா இருக்கும். ஹெல்த் கண்டிஷன்லயும் இன்னிக்கு நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும்.
ராசியான நிறம் : இளம் சிவப்பு
ராசியான எண் : 12
ராசியான நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை



Click it and Unblock the Notifications