இந்த 5 ராசிக்காரங்க இன்னைக்கு ரொம்ப சிக்கனமா இருங்க இல்லாட்டி பணம் செலவாயிரும்...

வெற்றி என்பது தோல்விகளில் இருந்து பாடம் படிப்பதுதான். இன்றைய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து உங்க ராசிக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம். உங்க எல்லா கேள்விகளுக்கு ஈஸியான விடை கிடைக்கும்.

வெற்றி என்பது தோல்விகளில் இருந்து பாடம் படிப்பதுதான். இன்றைய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து உங்க ராசிக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம். உங்க எல்லா கேள்விகளுக்கு ஈஸியான விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கு நீங்க கவனமாக இருங்க. நிதானமாக போங்க, பேச்சில் கவனமாக இருங்க யாருகிட்டையும் இன்றைக்கு வம்பு வச்சிக்காதீங்க. பணம் விசயத்தில கவனமாக இருங்க. உங்களுக்கு நிறைய தடங்கல் வருதேன்னு மன உளைச்சல் ஏற்படும். மத்தவங்க விசயத்தில தலையிட வேண்டாம். புதுசா எதையும் ட்ரை பண்ணாதீங்க. கவனமா பேசுங்க. வீட்ல சண்டை வரும் விட்டுக்கொடுத்து போகாட்டி விரிசல் வந்துரும் கவனம். ஸ்டூடண்ஸ் படிப்பில மட்டுமே கவனமா இருங்க. குரூப் ஸ்டடி பண்றேன்று விளையாட்டுதனமா இருக்காதீங்க அப்புறம் எக்ஸாம் எழுதும் போது நீங்கதான் கஷ்டப்படனும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 1

சாதகமான நேரம் : காலை 9:20 முதல் மாலை 6:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்றைக்கு ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க. வீட்ல சொந்தக்காரங்க வருவாங்க. பெண்கள் வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீங்க. குடும்பத்தில ரொம்ப குதூகலமாக இருப்பீங்க. ப்ரண்ட்ஸ் மூலமாக உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியா நடக்கும் லாபம் கிடைக்கும். செலவு சிக்கனமாக இருக்கட்டும். விரைய செலவு வேண்டாம். தேவையில்லாம பணத்தை எதிலையும் முதலீடு பண்ணாதீங்க. மாணவர்கள் நல்லா படிங்க தெளிவா புரிஞ்சு படிங்க.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 10:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

உங்க காட்டுல இன்னைக்கு பணமழை பெய்யப்போகுது. உங்க வருமானம் இரட்டிப்பாகும். நீங்க கொடுத்த கடன்கள் வசூலாகும். வரவே வராதுன்னு நினைச்ச பணம் உங்க கைக்கு வரும். வியாபாரத்தில நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சந்தோஷமாக நடக்கும். பெரிய மனிதர்களோட அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு நகை வாங்கி கொடுப்பீங்க. சொந்த பந்தங்கள் சகோதர சகோதரிகள் ஒற்றுமை அதிகரிக்கும். சொந்தக்காரங்கள் வருவதால மகிழ்ச்சி தாண்டவமாடும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 27

சாதகமான நேரம் : காலை 7:45 முதல் மாலை 4:30 மணிவரை

கடகம்

கடகம்

உங்க குடும்பத்தில குதூகலமாக இருப்பீங்க. ரொம்ப சந்தோஷ சமாச்சாரங்கள் நடக்கும். சொந்தக்காரங்ககிட்டயிருந்து உதவி கிடைக்காட்டி பரவாயில்ல உங்க செயலில் தைரியமாக இறங்குங்க. வீட்ல வம்பு வழக்கு வேண்டாம். வீண் பிரச்சினைகளை தவிர்த்துடுங்க. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனமாக செலவு பண்ணுங்க பண வருமானம் வரும். காதல் வாழ்க்கையில கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 9:30 மணிவரை

சிம்மம்

சிம்மம்

அம்மாவோட ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க. கொஞ்சம் உங்களுக்கு மந்தமாகத்தான் இருக்கும். யாருக்காவது ட்ரீட்மெண்ட் எடுக்க மருத்துவமனைக்கு போவீங்க செலவு வரும். தேவைக்கு அதிகமாக பேசாதீங்க. உங்க ப்ரண்ட்ஸ் என்ன சொல்றாங்களோ அவங்க கிட்ட ஆலோசனை கேளுங்க. சொந்தக்காரங்களோட ஹெல்ப் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : விடிகாலை 4:50 முதல் நண்பகல் 12:05 மணிவரை

கன்னி

கன்னி

இன்னைக்கு உங்க ஹெல்த் கண்டிசன் நல்லா இருக்கும். சொந்தக்காரங்க வீட்டுக்கு வருவாங்க பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற சம்பளம் தேடி வரும். வழக்கு விசயங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் பாசிட்டிவ் பதில் கிடைக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பணவரவு சிறப்பாக இருக்கும். நிறைய சேமிப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : காலை 10:10 முதல் நண்பகல் 3:15 மணிவரை

துலாம்

துலாம்

உங்க ஹெல்த் கண்டிசன் சுமாராக இருக்கும். ஒருமாதிரி டல்லா ஃபீல் பண்ணுவீங்க. சொந்தக்காரங்க ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்ணுவாங்க. வீட்டில் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு படிப்பில் கவனக்குறைவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். பணம் பல வழிகளில் வந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். பொறுமையாக இருங்க பிரச்சினைகள் தீரும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

உங்களுக்கு சுப செலவுகள் செய்ய நேரிடும். உங்க தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 20

சாதகமான நேரம் : முற்பகல் 11:30 முதல் இரவு 9:00 மணிவரை

தனுசு

தனுசு

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சுமாரான நாள்தான். ரொம்ப டல்லா இருக்கும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். நெருங்கியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சிக்கனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 3

சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 11:05 மணிவரை

மகரம்

மகரம்

இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டில் உங்க பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடன் பிரச்சினைகள் தீரும். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 18

சாதகமான நேரம் : காலை 7:30 முதல் நண்பகல் 2:00 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்களை வாங்குவீங்க. வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு புதிய இடம் வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். சுபகாரிய முயற்சிகளில் பாசிட்டிவ் ரிசல்ட் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 35

சாதகமான நேரம் : விடிகாலை 5:05 முதல் பிற்பகல் 3:40 மணிவரை

மீனம்

மீனம்

இன்றைக்கு உங்க அப்பாவின் உடல் நலத்தில் கவனமாக இருங்கள். இன்று குடும்பத்தில் வீட்டுக்கு வரும் உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சிக்கனமாக செலவு பண்ணுங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 5

சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, March 15, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion