Latest Updates
-
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா?
இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு செலவு ஜாஸ்தியாகும் சிக்கனமா இருங்க...
சார்வரி புத்தாண்டு பிறந்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் எந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், யாருக்கு வருமானம் நிறைய வரும் யாருக்கு செலவு அதிகம் வரும் என்ற கேள்விகள் வரலாம்.
சார்வரி புத்தாண்டு பிறந்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் எந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், யாருக்கு வருமானம் நிறைய வரும் யாருக்கு செலவு அதிகம் வரும் என்ற கேள்விகள் வரலாம். உங்களின் கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன்கள் மூலம் பதில் கிடைக்கும். இன்றைய தினம் சிலருக்கு அதிர்ஷ்ட மழை பொழியும். இன்றைய ராசிபலனை படிங்க யாருக்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
இன்னிக்கு உங்க குடும்பத்துல சந்தோஷம் கொடுக்கக்கூடிய சம்பவங்கள் நடந்துடும். வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்குறதுல ஆர்வமா இருப்பீங்க. பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷனம் ரொம்ப நல்லா இருக்கும். பிசினஸ்ல பலமான போட்டி இருந்தாலும் கூட, வியாபாரம் அமோகமா நடந்து லாபமும் கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் பிற்பகல் 1:30 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு குடும்பத்துல சந்தோஷமும் அமைதியும் நிலவும். பிள்ளைங்களும் ரொம்ப சுறுசுறுப்பா இருப்பாங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு லாபம் அமோகமா இருக்கும். கவர்மெண்ட் உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு கவுரவப் பதவியும் தேடி வரும். இன்னிக்கு உங்க நிதி நிலைமையும் அமோகமா இருக்கும்கிறதுனால, ரொம்பவே உற்சாகமா இருப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : காலை 6:20 முதல் காலை 11:30 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு நீங்க மத்தவங்க கிட்ட அநாவசியமா கோபப்படுற சூழ்நிலை உண்டாகிடும். அதனால கொஞ்சம் எச்சரிக்கையோட நடந்துக்கோங்க. மத்தவங்களுக்கு கடன் கொடுக்குறதையோ, கடன் வாங்குறதையோ அவாய்ட் பண்றது நல்லது. மொத்தத்துல இன்னிக்கு பேசாம அமைதியா இருக்குறது ரொம்பவே நல்லது. நீங்க ரொம்பவே மனக்குழப்பதோட நடந்துக்குவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 14
சாதகமான நேரம் : காலை 5:30 முதல் காலை 8:30 மணிவரை

கடகம்
இன்னிக்கு உங்க குடும்பத்துலு சுபகாரியங்கள் நடந்துடு. உத்தியோகம் பாக்குறவங்களுக்கு புதுசா வாய்ப்புகள் கிடைக்கலாம். பிசினஸ் நடத்துறவங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். இன்னிக்கு நீங்க எந்த வேலையையும் ரொம்பவே சந்தோஷத்தோட செய்வீங்க.
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : மாலை 5:30 முதல் இரவு 8:30 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு உத்தியோகம் பாக்குறவங்களுக்கு எதிர்பாத்துட்டு இருந்த சலுகை கிடைச்சிடும். குடும்பத்துலயும் பணவரத்து ரொம்பவே தாராளமா இருக்கும். சுபகாரிய முயற்சிங்களம் வெற்றிய கொடுக்கும். இன்னைக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் ரொம்ப அற்புதமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : பிற்பகல் 12:30 முதல் மாலை 5:30 மணிவரை

கன்னி
இன்னிக்கு உத்தியோகம் பாக்குறவங்களுக்கு வேலைச்சுமை கூடிடும். பிசினஸ் ரீதியா நீங்க எடுக்குற புது முயற்சிங்களுக்கு கூட இருக்குறவங்களே குழி பறிப்பாங்க. எச்சரிக்கையா இருங்க. குடும்பத்துலயும் எதிர்பாராத செலவுங்க வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : காலை 11:30 முதல் பிற்பகல் 1.30 மணிவரை

துலாம்
இன்னிக்கு எதிர்பாக்காம திடீர் செலவுகள் வந்து கையை கடிக்கும். உத்தியோகம் பாக்குறவங்க கூட வேலை பாக்குறவங்க கிட்ட நிதானமாக பேசுறது நல்லது. அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது. மனசுலயும் சந்தோஷம் கூடிடும். பிசினஸ் ரீதியா இருந்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமா குறையும். சமூகத்துல பெரிய மனுஷங்களை மீட் பண்றதுனால மனசுக்கும் ரொம்ப இதமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நேரம் : காலை 10:30 முதல் மாலை 4 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க மூலமா நல்ல செய்திங்க உங்க காதுக்கு வந்துடும். பிசினஸ்ல எதிர்பாத்ததை விட லாபம் பெருகிடும். உங்க சொந்தக்காரங்களும் ஒத்தாசை பண்ணுவாங்க. செய்யுற முயற்சிங்கள்ளல வெற்றி கிடைச்சிடும். பணவரத்தும் ரொம்ப அமோகமா இருக்கும். குடும்பத்துலயும் சந்தோஷம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நேரம் : பிற்பகல் 4:00 முதல் இரவு 8:20 மணிவரை

தனுசு
இன்னிக்கு பிசினஸ் உங்களுக்கு ரொம்ப நல்லா நடந்து லாபமும் பெருகிடும். நெனச்ச காரியம் நல்லபடியா நடக்கும். கூடப்பொறந்தவங்க கூட ஒத்துமை கூடிடும். திடீர் பணவரத்து வந்து சந்தோஷத்தை கொடுக்கும். கடன் பிரச்சனை காணாம போகும். காதலை தொலைபேசியிலேயே பேசி என்ஜாய் பண்ணுங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : காலை 8:40 முதல் நண்பகல் 12:30 மணிவரை

மகரம்
இன்னிக்கு பிசினஸ்ல சுனக்கமான நிலைமை தான் இருக்கும். எதிர்பாத்துட்டு இருந்த உதவி, ஒத்தாசை கிடைக்கும். உத்தியோகத்துல இருந்த பிரச்சனையும் கணிசமா குறையும். வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால வீடே கலகலப்பா மாறிடும். கூடவே தண்டச்செலவுங்களும் வந்து கையை கடிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ நிறம்
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : காலை 8:25 முதல் நண்பகல் 12:55 மணிவரை

கும்பம்
இன்னிக்கு குடும்பத்துலு பிள்ளைங்களால வீண் பிரச்சனைங்க வந்து முளைச்சிடும். பிசினஸ்லயும் லாபம் அமோகமா இருக்கும். தண்டச்செலவுங்களும் தேடி வந்து உங்க கையை கடிச்சிடும். அதனால உங்க மனசுலயும் குழப்பமும் கவலையும் கூடிடும். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும். இருந்தாலும் இந்த சூழ்நிலையில அதை ஒத்தி போடுறது நல்லது. செலவை குறைச்சு சிக்கனமாக இருங்க மக்களே.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 29
சாதகமான நேரம் : மாலை 5:30 முதல் இரவு 9:50 மணிவரை

மீனம்
இன்னிக்கு உங்களுக்கு உத்தியோகத்துல இருந்த போட்டி பொறாமை குறையும். நல்ல நல்ல செய்திங்களால மனசும் தெம்பாயிடும். வீட்டுப் பெண்களுக்கு கையில பண வரத்தும் இருக்கும். அதோட குடும்பத்துல இருக்குறவங்க கிட்ட ஒத்துமை கூடிடும். எதிர்பாக்காம சுபச்செய்திங்க உங்க காதுக்கு வந்துடும். எடுக்குற முயற்சிங்கள்லயும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் நண்பகல் 12:05 மணிவரை



Click it and Unblock the Notifications











