Latest Updates
-
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
சனி பௌர்ணமி... எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும்? தெரிஞ்சிக்கங்க?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
Recommended Video
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
உங்களுடைய பேச்சுக்களினால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். புதிய உறவுகளினால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். கடல்வழிப் பயணங்களின் மூலமாக, உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். பெரிய பெரிய மகான்களுடைய அறிமுகம் கிடைக்கும். தொழிலில் பங்குதாரர்களுடைய ஆதரவினால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பிரௌன் கலர் இருக்கும்.

ரிஷபம்
சம வயதினரிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. மனைவியிடம் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. தொழிலில் உள்ள போட்டிகளைச் சமாளித்து வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். உடன் பிறப்புகளிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் தற்போது நிறைவேறும். இன்று உங்களுடைய நீண்ட நாள் ஆசை ஒன்று இன்று நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

மிதுனம்
உங்களுக்குள் புதிய சிந்தனைகள் தோன்றும். போட்டிகளில் ஈடுபடுகின்ற போது, கொஞ்சம் கவனமாக இருங்கள். நீங்கள் எதிர்பார்த்த உதவிகளினால் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் காணாத உறவினர்களுடைய வருகையினால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்
தலைமைப் பதவியில் உள்ள அதிகாரிகளிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளுங்கள். செய்யும் வேலைகளில் சற்று கவனத்துடன் செயல்படுங்கள். தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்ப்பதன் மூலமாக, பல்வேறு நன்மைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் பிள்ளைகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

சிம்மம்
அரசாங்கத் தரப்பிடம் இருநு்து உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேற சற்று கால தாமதங்கள் ஏற்படும். வந்து சேரும் சுப செய்திகளால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
உங்களுடைய சேமிப்புக்ள அதிகரிக்க ஆரம்பிக்கும். வேளாண்மை சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று தேக்க நிலை ஏற்படும். சொத்து சேர்க்கைகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடைய வருகையின் காரணமாக மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உயர் பதவிகளுக்கான வாய்பபுகள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்
தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய நபரைச் சந்திக்கும் வாய்பபுகள் உண்டாகும். வெளியூர்ப் பயணங்களால் நீங்கள் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பணிபுரிகின்ற இடங்களில் உங்களுக்கு செல்வாக்குகள் அதிகரிக்கும். புனித யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பயணங்களின் போது, கொஞசம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
வாகனப் பயணங்களின் மூலம் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உண்டாகும். அதனால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் உள்ள கவலைகள் குறைவதற்கான சூழல்கள் உருவாகும். வீட்டுக்குப் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். வீடு மற்றும் மனை விவகாரங்களில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். எதிலுமே கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு
உங்களுடைய எடுத்துரைக்கின்ற பேச்சுத் திறமையினால் பெரும் லாபம் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். நண்பர்களுடன் வெளியூர்ப் பயணங்களினால் மகிழ்ச்சி உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். கால்நடைகளின் மூலம் லாபம் ஏற்படும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தன லாபங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
பெரியோர்களுடைய முழு ஆதரவினால் உங்களுடைய பரம்பரை சொத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் சற்று குறையும். உயர் அதிகாரிகளுடைய நட்பு உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய முழு முயற்சிகளால் சேமிப்புகள் உயரும். கடிதப் போக்குவரத்தின் மூலமாக உங்களுக்குச் சாதகமான செய்திகள் வந்து சேரும். பொருள் சேர்க்கைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்
நீங்கள் நினைத்த முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். அறக் காரியங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, மகிழ்ச்சி அடைவீர்கள். தந்தையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும். நண்பர்களுடைய உதவியினால் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். விவாதங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்நீல நிறமும் இருக்கும்.

மீனம்
தூர தேசப் பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். பிள்ளைகளின் மூலமாக உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். போட்டிகளில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். சர்வதேச வணிகத்தில் நீங்க்ள எதிர்பார்த்த மேன்மை உங்களுக்குக் கிடைக்கும். உறவுகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications