Just In
- 44 min ago
ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா?
- 2 hrs ago
இந்த நேரத்தில் உடலுறவு வைச்சுகிட்டா கர்ப்பமாவதற்கு 99% வாய்ப்பிருக்காம் தெரியுமா?
- 4 hrs ago
ஃபிட்டா இருக்கணுமா? அப்ப இத வாரத்துக்கு 6 நாள் ஃபாலோ பண்ணுங்க..
- 5 hrs ago
வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உங்களுக்கு இந்த மோசமான நோய் வராதாம்...!
Don't Miss
- Sports
1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி
- News
சேலத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா - பள்ளி உடனடியாக மூடல்
- Automobiles
அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா?
- Education
டான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை!
- Finance
கிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..!
- Movies
மீனுக்குட்டி அன்ட் கன்னுக்குட்டி.. செம்ம க்யூட் போங்க.. அனிதாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நெனச்சத நெனச்சபடி நடத்தி முடிக்கிற ரெண்டு ராசிக்காரங்க இவங்க தான்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகள் நீங்கள் நினைத்தபடி, நல்ல பலன்கள் உண்டாகும். புதிய நபர்களுடைய அறிமுகமும் நட்பும் கிடைக்கும். உங்களுடைய வாக்குத் திறமையினால் வெளியிடங்களில் பெருமை உண்டாகும். நிர்வாகத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். கடன் பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.
MOST READ: சனிபகவானின் சூப்பர் ஹீரோ எந்த ராசிக்காரர் தெரியுமா?... இவங்க தான் அது...

ரிஷபம்
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எந்த காரியமாக இருந்தாலும் அதைக் கொஞ்சம் நிதானமாகச் செயல்பட வேண்டியது அவசியம். தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுடைய சிந்தனையின் போக்குகளில் கொஞ்சம் கூடுதலாக மாற்றங்க்ள தேவைப்படுகிறது. கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்
சர்வதேச வணிகங்கள் தொடர்புடைய வணிகத்தில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். வெளிநாட்டுப் பயணங்களால் உங்களுக்கு வெற்றி உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் நினைத்த முயற்சிகள் நிறைவேற ஆரம்பிக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

கடகம்
தொழில் சார்ந்த எண்ணங்கள் இன்று உங்களுக்கு மேலோங்கி இருக்கும். மாணவர்கள் தங்களுடைய புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு துறை சார்நத அறிவுகள் மேம்படும். உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் குறைந்து ஒற்றுமை மேலோங்கி இருக்கும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும். நெருக்கம் அதிகரிக்கும். எந்த காரியத்தைச் செய்தாலும் அதை தன்னம்பிக்கையுடன் ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்
சுய தொழில் செய்கின்றவர்களுக்கு நல்ல மேன்மையான சூழல் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்வது அவசியம். தொழில் சம்பந்தப்பட்ட அலைச்சல்கள் ஏற்படும். ஆனால் அதனால் லாபமும் உண்டாகும். பல நாட்களாக இருந்து வந்த சிக்கல்களை கொஞ்சம் அமைதியாகக் கையாண்டு முடிப்பீர்கள். உங்களுடைய சகோதரர்களால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி
உங்களுடைய கணவன், மனைவிக்கு இடையே கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு உயர ஆரம்பிக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும். காரியத் தடைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த மாற்றங்க்ள உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.
MOST READ: தனுசு ராசியில் சனியோடு சேரும் சந்திரன் - புணர்ப்பு தோஷத்தால் பிரச்சினை வருமா?

துலாம்
உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் குழந்தைகளின் மூலமாக சுப வரயச் செலவுகள் உண்டாகும். ஆன்மீகத்தில் உங்களுடைய எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். நீங்கள் செய்யும் வேலைகளால் மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். நீங்கள் திட்டமிட்ட பயணங்களில் சில மாற்றங்கள் நேரிடலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்
கால்நடைகளின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். உங்களுடைய தாயினுடைய ஆதரவினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். வேள்விகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொண்டு மந்திர உபதேசங்கள் உண்டாகும். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். புத்திக்கூர்மை வெளிப்படும். பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
புதிதாக வேலை தேடுவதற்கு முயற்சி செய்கின்றவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உங்களுடைய உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி, நன்மை உண்டாகும். உங்களுடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். அரசு அதிகாரிகளின் மூலம் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து எதிர்பார்த்த கடனுதவிகள் கைக்கு வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

மகரம்
கடல் வழியிலான பயணங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு பெரும் நன்மைகள் உண்டாகும். உங்களுக்கும் உஙகளுடைய பெற்றோர்களுக்கும் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, அன்பு அதிகரிக்கும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். உங்களுடைய உயர் கல்விக்கான முயற்சிகள் சிறந்த பலன்களைத் தரும். புனித யாத்திரைகள் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்
சந்திராஷ்டமம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். பணியில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்குளுக்கு வீண் கவலைகள் மனதுக்குள் வந்து போகும். உங்களுடைய செயல்பாடுகளில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். போட்டிகளில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். எந்த விலையுயர்ந்த பொருள்களைக் கையாண்டாலும் அதில் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.
MOST READ: சாப்பிடதும் வயிறு திம்முனு ஆயிடுதா?... அப்ப இதெல்லாம் சாப்பிடவே சாப்பிடாதீங்க...

மீனம்
உங்களுடைய உள்ளத்தில் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியிடத்தின் தொடர்புகளினால் உங்களுக்கு நன்மை உண்டாகும். உங்களுடைய நண்பர்களுடன் கொஞ்சம் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. மனதுக்குள் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். இதுவரை கைக்கு வந்து சேர வேண்டிய பண வரவுகள் கைக்கு வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமாகவும் இருக்கும்.