Latest Updates
-
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...! -
ரம்ஜான் ஸ்பெஷல் ஆப்கானி மட்டன் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கரும்புள்ளிகளை சாதாரணமா நினைக்காதீங்க.. அது கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
பாபா வாங்காவின் தலைசுற்ற வைக்கும் உலக அழிவு பற்றிய கணிப்பு..எந்த வருடத்தில் உலகம் அழியப்போகுதாம் தெரியுமா? -
சுக்கிர பெயர்ச்சி: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்.. உங்க ராசி இதுல இருக்கா?
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மாமியாரால் கணவன்-மனைவிக்கு இடையே சண்டை உருவாகலாம்…
கிரக நிலைகளின் படி உங்களது ராசிக்கான பலனை தெரிந்து நடந்து கொள்வதன் மூலம் வாழ்வில் முன்னேற்றத்தை அடைந்திட முடியும். அதன்படி, இன்றைய தினம் உங்களது ராசிக்கான பலனை இப்போது தெரிந்து கொள்வோம்...
பிரச்சனை இல்லாத வாழ்க்கையை பெற வேண்டுமென்பதே அனைவரது விருப்பமும். அதிலும், வருகின்ற பிரச்சனையை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதனை புத்திசாலித்தனமாக கையாளுவது என்பது மிகவும் நல்ல விஷயம் தான். அதற்காக தான் தினசரி ராசிபலன் உதவுகிறது. கிரக நிலைகளின் படி உங்களது ராசிக்கான பலனை தெரிந்து நடந்து கொள்வதன் மூலம் வாழ்வில் முன்னேற்றத்தை அடைந்திட முடியும். அதன்படி, இன்றைய தினம் உங்களது ராசிக்கான பலனை இப்போது தெரிந்து கொள்வோம்...


மேஷம்
இன்றைய தினம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாள். செல்வ வளம் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வேலை தேடி வருபவர்களுக்கு, நண்பர்களின் உதவியுடன் நல்ல வாய்ப்பு ஒன்று கிடைக்கப்பெறுவீர்கள். வர்த்தகர்கள் இன்று மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். அலட்சியப்போக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கிவிடும். குடும்பத்தாரோடு நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பு கிட்டும். குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. ஆரோக்கியத்தில் சற்று ஏற்ற இறக்கமான நிலைமை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மாலை 4:00 மணி வரை

ரிஷபம்
அலுவலகத்தில் உங்களது பேச்சிலும், நடத்தையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். சக ஊழியர்களுடனான பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம். பிரச்சனை வளர அனுமதிக்காதீர்கள். அரசு பணியில் உள்ளவர்கள் இன்றைய தினம் பரபரப்பாக காணப்படுவர். வணிகர்கள் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள். பங்கு சந்தை தொடர்பான பணி செய்வோர் நல்ல பலனை பெற வாய்ப்புள்ளது. பண விவகாரம் தொடர்பாக வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உடல்நிலை பற்றி பேசும்போது, இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 3:50 மணி வரை

மிதுனம்
அலுவலகத்தில் எதிர்பார்த்த முடிவுகளை பெற வாய்ப்புள்ளது. முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படலாம். மாற்று வேலை பற்றி யோசித்தவர்களுக்கு, நல்ல சலுகைகள் கிடைக்கப் பெறுவீர்கள். வணிகர்கள் நல்ல லாபம் பார்க்க வாய்ப்புள்ளது. வணிகர்கள், அரசு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க முடியும். பண வரவு திருப்தி அளிக்கும். இருந்தாலும், வரவிற்கு ஏற்ப செலவுகளும் அதிகரிக்கக்கூடும். வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டும். அதனால், எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். வீட்டில் அமைதியான சூழல் நிலவும். பெற்றோரின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறுவீர்கள். உடல்நிலையை பற்றி பேசினால், போதுமான ஓய்வு தேவைப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:45 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கடகம்
சொந்த பிரச்சனையில் பிறர் தலையீட்டை அனுமதிக்காமல் இருப்பது நல்லது. பிறரின தவறான வழிநடத்தல்களால் முடிவுகள் எடுப்பதை தவிர்த்திடவும். இல்லையெனில், குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகக்கூடும். தந்தை, தாயின் உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். நிதி நிலை நன்றாக இருக்கும். திட்டமிட்டபடி சரியாக யோசித்து செலவிடுவீர்கள். அலுவலகத்தில் வழங்கப்பட்ட சில முக்கிய வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சியுங்கள். வணிகர்கள், இன்றைய தினம் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:25 மணி முதல் 12:15 மணி வரை

சிம்மம்
சொத்து தொடர்பாக விவகாரங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சட்ட விவகாரங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. இல்லையெனில், பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில், ஒதுக்கப்பட்ட வேலைகளை சரியாக நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இதனால், உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற முடியும். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்றைய பண பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணை இன்று நல்ல நிலையில் இருப்பார். அதனால், உங்களுடன் அதிக நேரம் செலவிட விரும்பலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 35
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:35 மணி முதல் மாலை 3:00 மணி வரை

கன்னி
இன்றைய தினம் அலுவலகத்தில் உங்களுக்கு பணி சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சிறு வேலையை கூட மிகவும் கவனமாக செய்ய வேண்டும். உங்களது தவறு, உயர் அதிகாரிகளின் கடுமையான அணுகுமுறைக்கு வழி வகுத்துவிடும். வணிகர்கள், இன்றைய தினம் கடும் சவாலை சந்திக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அதனால் கவலைப்பட தேவையில்லை. உங்களது கடுமையான உழைப்பிற்கேற்ற பலனை விரைவில் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். வீட்டு பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். அத்தகைய சூழலில், வார்த்தைகளை பார்த்து கவனமாக பயன்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, உலகை அச்சுறுத்தும் தொற்றுநோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

துலாம்
இன்றைய தினம் மிகவும் பரபரப்பாக காணப்படுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தொழில் வாழ்க்கை எதுவாக இருந்தாலும், அவற்றில் உங்களது பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். நாளை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறீர்கள். தங்கள் மற்றும் வெள்ளி வர்த்தகம் செய்வோர், இன்று நல்ல பொருளாதார பலனை பெற முடியும். செலவுகளை யோசித்து செய்வது நல்லது. வீட்டில் பெரியவர்களுடனான உறவு வலுப்பெறும். ஆரோக்கியம் பற்றி பேசுகையில், நேரத்திற்கு சாப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் மிகவும் நல்ல நாளாகவே அமையும். நீண்டகால முயற்சிகளில் வெற்றி காணப் போகிறீர்கள். இத்தனை நாளாக மனதிற்குள் இருந்துவந்த கவலை நீங்க போகிறது. வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடன்பிறப்புகள், கல்வித்துறையில் பெரிய வெற்றி பெற போகிறார்கள். பெற்றோருடனான உறவு வலுப்பெறும். அரசு வேலையில் உள்ளவர்களுக்கு, இன்று நல்ல செய்தி தேடி வரப்போகிறது. வங்கி பணியில் உள்ளவர்கள் முன்னேற்றத்தை காணப்போகிறார்கள். வணிகர்கள், தங்களது கடின உழைப்பிற்கான பலனை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. புதிதாக தொழில் தொடங்கியோர், பெரிதும் பயனடைவர். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்றைய தினம் நேர்மறை ஆற்றலால் நீங்கள் சூழ்ந்து காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

தனுசு
இன்றைய தினம் சிறப்பான தொடக்கமாக அமையாது. வீட்டு உறுப்பினர்களுடனான விவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. இன்று முழுவதுமே பயனற்ற விஷயங்களால் வீணாகிவிடும். உயர் அதிகாரிகளின் முன்பு மரியாதையுடன் நடந்து கொள்ளவும். உங்களது குறைகளை பிறர் சுட்டுக்காட்டும் போது அதனை திறந்த மனதுடன் கேட்டுக் கொள்ள வேண்டும். வணிகர்கள் எதிர்பார்த்த லாபத்தை பெறமுடியாமல் போகலாம். அதிகப்படியான செலவுகளை தவிர்க்கவும். உடல்நலம் பெற்றி பேசினால், கண் தொடர்பான பிரச்சனை ஏற்படலாம். அதுபோன்ற நேரங்களில், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

மகரம்
உங்களது செயல்முறைகளை ஒழுங்குபடுத்தாவிட்டால், உடல்நலம் பாதிக்கப்படக்கூடும். வேலையை போலவே, ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கடினமாக உழைத்து போதிலும், உழைப்பிற்கேற்ற பலனை பெற முடியாது. இத்தகைய சூழலில் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். வெகு விரைவில், உங்களுக்கான பலனை அடைவீர்கள். வணிகர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். புதிய தொழில் குறித்த முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை செலவிட வாய்ப்பு கிடைக்கும். தாமதமான கடன் தொகை, திரும்ப வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 முதல் 9:45 மணி வரை

கும்பம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். இல்லையெனில், நிறைய சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதுபோன்ற நேரங்களில், புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற வேண்டுமென, கூடுதல் பணிச்சுமையை பெற்றுக் கொள்ள வேண்டாம். இப்படி செய்தால், ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வேலையை போல ஆரோக்கியமும் முக்கியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். திருமண வாழ்க்கையில் மன அழுத்தமான சூழல் நிலவும். மாமியார் தரப்பு குறுக்கீடு உங்கள் இருவருக்குமிடையே சச்சரவை ஏற்படுத்தக்கூடும். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறப்பாக வாய்ப்பு தேடி வரும். உடல்நலம் பற்றிய கவலை தேவையில்லை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 33
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:45 மணி முதல் மாலை 3:00 மணி வரை

மீனம்
இன்றைய தினம் அவ்வளவு நன்றாக இருக்காது. திடீர் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது, பந்தயம் கட்டுவது போன்ற செயல்களை தவிர்த்திடவும். நிதி சார்ந்த முடிவுகளை கவனமாக எடுப்பது நல்லது. இல்லையெனில், எதிர்காலத்தில் வருத்தம் மட்டுமே மிஞ்சும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். இன்று மிகவும் சோர்வாக காணப்படுவீர்கள். மன அழுத்தத்தால் கூட உடல்நலம் பாதிக்கக்கூடும். பிரச்சனைகளை குளிர்ந்த மனத்தோடு தீர்வு காண்பது நல்லது. கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள, உங்களது வாழ்க்கை துணையின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:05 மணி முதல் மாலை 6:00 மணி வரை



Click it and Unblock the Notifications











