For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ராசிப்பலன் (06.01.2021): இன்று இந்த 3 ராசிக்காரர்களும் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளதாம்…

இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 06ஆம் தேதி புதன்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 06ஆம் தேதி புதன்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Daily Horoscope For 06th January 2021 Wednesday In Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

பணத்தின் அடிப்படையில் நாள் அவ்வளவு நன்றாக இருக்காது. செலவுகள் அதிகரிக்கக்கூடும். எனவே, நிதி சார்ந்த விஷயங்களில் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுப்பது நல்லது. வேலை முன்னணியில் இன்று மிகவும் பரபரப்பாக காணப்படுவீர்கள். செய்யும் வேலையில் முழு கவனம் செலுத்த முடியும். வேலை அல்லது வணிகம் எதுவாக இருந்தாலும், இன்று சிறந்ததை வழங்க முயற்சிப்பீர்கள். குடும்ப பொறுப்புகள் சற்று அதிகரிக்கக்கூடும். அத்தகைய சூழலில், உங்களுக்கென சிறிது நேரம் செலவிட்டால், மனஅழுத்தம் இல்லாமல் தவிர்க்கலாம். வாழ்க்கைத் துணையிடம் பேசும் போது வார்த்தைகள் பார்த்து பயன்படுத்த வேண்டும். ஆரோக்கியம் பற்றி பேசினால், வழக்கத்தை விட இன்று சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று வேலை முன்னணியில் நல்ல நாளாக இருக்கும். முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வை கூட பெறலாம். வணிகர்கள் இன்று பெரிய லாபத்தை பெற வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை சரிவர முடிக்க முடியும். தனிப்பட்ட வாழ்க்கை இன்று மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். உடன்பிறந்தோர், பெரிய வெற்றி எதாவது பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணைடனான உறவில் இனிமை இருக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. உடல்நலம் பற்றி பேசும்போது, நீங்கள் இன்று மிகவும் சோர்வாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பீச்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 மணி முதல் இரவு 10:10 மணி வரை

மிதுனம்

மிதுனம்

உத்தியோகஸ்தர்களுக்கு இன்று பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். உயர் அதிகாரிகளிடமிருந்து அழுத்தம் அதிகரிக்கலாம். உங்களது அலட்சியப்போக்கால், உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இத்தகைய சூழலில், மனதை அமைதியாக வைத்திருங்கள். சிறு தவறு கூட, உங்களின் கடின உழைப்பை வீணாக்கக்கூடும். பால் பொருட்களை வர்த்தகம் செய்பவர்கள், இன்று நல்ல பலனைப் பெறலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். நீண்ட கால நிதி பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். குடும்ப பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். அத்தகைய சூழலில், கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. இல்லையெனில், உறவில் விரிசல் உண்டாகலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கடகம்

கடகம்

வேலை முன்னணியில் இன்று நீங்கள் சில சிக்கல்களை சந்திக்கலாம். உங்கள் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம். அதனால், உயர் அதிகாரிகள் அதிருப்தி அடையலாம். வியாபாரிகள், இன்றைய தினம் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பழைய கடனை திருப்பிச் செலுத்த முடியும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கியம் இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் மதியம் 1:25 மணி வரை

சிம்மம்

சிம்மம்

பணத்தின் அடிப்படையில் இன்றைய தினம் சிறப்பானதான இருக்கும். திடீர் நிதி ஆதாயங்கள், உங்கள் வங்கி இருப்பை பலப்படுத்தும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். வீட்டில் பெரியவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் மரியாதையும் நற்பெயரும் அதிகரிக்கும். உங்கள் எல்லா வேலைகளையும் விடாமுயற்சியுடன் செய்து முடிப்பீர்கள். வணிகர்கள் இன்று பெரும் நிவாரணத்தைப் பெறலாம். நிலுவையில் உள்ள சில சட்ட விஷயங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. பழைய நண்பர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைப்பதன் மூலம் நீங்கள் நன்றாக உணருவீர்கள். இன்றைய தினம் நீங்கள் மிகவும் கவனமா இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

கன்னி

கன்னி

உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த, நீங்கள் இன்று சில முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். இருப்பினும், அதற்காக தவறான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், சிக்கலில் சிக்கக்கூடும். வேலை முன்னணியில் இன்று நல்ல முடிவுகளைப் பெறலாம். உங்கள் கடின உழைப்பு பலனளிக்கும். மேலும், சில பெரிய வெற்றிகளைப் பெறுவும் வலுவான வாய்ப்புள்ளது. இன்று பதவி உயர்வை பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவுயம் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையிடம் முறையாக நடக்க முயற்சிக்கவும். உடல்நிலை பற்றி பேசினால், இன்று புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை

துலாம்

துலாம்

இன்று அலுவலகத்தில் உங்கள் பணி மிகவும் பாராட்டத்தக்கதாக இருக்கும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடனான ஒருங்கிணைப்பும் சிறப்பாக இருக்கும். வணிகர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றம் காண்பார்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் புதிய உடைகள் மற்றும் நகைகளை வாங்கலாம். திருமண வாழ்க்கையில் இருந்துவந்த மந்த நிலை நீங்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மாலையில் நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். நல்ல ஆரோக்கியத்தை பெற்றிருப்பதன் மூலம் நீங்கள் மன ரீதியாகவும் வலுவாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:10 முதல் மதியம் 2:00 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று மனதளவில் நன்றாக உணரமாட்டீர்கள். அதனால், எந்தவொரு விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாது. பொருளாதார முன்னணியில் இன்று வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். இன்று நேரத்தை பார்த்து செலவு செய்ய வேண்டும். மேலும், சேமிப்பில் கவனம் செலுத்த முடியும். இன்று பண பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையின் இயல்பில் கடுமையான தன்மை இருக்கும். அதனால் விவாதங்கள் உருவாகலாம். வேலையில் புத்திசாலித்தனமாக செயல்படுவதன் மூலம் தொல்லைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் நீண்ட காலம் நீடிக்காது என்பதால் அது குறித்த கவலைப்படத் தேவையில்லை. இன்றைய தினம் அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் 6:00 மணி வரை

தனுசு

தனுசு

உங்கள் திருமண வாழ்க்கையில் சில முரண்பாடுகள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும். அலுவலக வேலையில் அதிக கவனமாக செலுத்தவும். சிறு அலட்சியம் கூட பெரிய இழப்பை ஏற்படுத்தலாம். வணிகர்கள் இன்று சில பொருளாதார சிக்கல்களை சந்திக்க நேரிடும். முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். தவறான முடிவுகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை பொறுமையுடன் கையாளவும். பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் நீங்கும். வீண் சண்டைகளில் மூக்கை நுழைத்தால், மன அமைதியை இழக்க நேரிடும். வரவிற்கேற்ப செலவுகளை செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:25 மணி முதல் மாலை 3:00 மணி வரை

மகரம்

மகரம்

தனிப்பட்ட வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்தியல் வேறுபாடுகள் ஏற்படலாம். அத்தகைய சூழல்களில் கோபப்படாமல் அமைதியாக பேசுவது நல்லது. விவாதங்களால் வீட்டின் அமைதி குலையும். இன்று, வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில மாற்றங்கள் இருக்கும். பொருளாதார முன்னணியில், இன்று நல்ல நாளாக இருக்கும். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சிக்கவும். வியாபாரிகளுக்கு சிக்கல்கள் அதிகரிக்கக்கூடும். புதிய வணிக திட்டத்தை பற்றி யோசித்து குழப்பமடைவீர்கள். அனுபவசாலிகளின் ஆலோசனையை பெற்ற பின்னரே உங்கள் இறுதி முடிவை எடுக்கவும். இன்று உடல்நலம் பாதிப்பை சந்திக்கலாம். உடல் ரீதியாக நீங்கள் மிகவும் பலவீனமாக உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:10 மணி முதல் மதியம் 2:25 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக செயல்படவும். உங்கள் பேச்சுத்திறனால், அனைத்து பிரச்சனைகளையும் சுலபமாக கையாளுவீர்கள். பணத்தின் அடிப்படையில், இன்று கலவையான முடிவுகள் இருக்கும். பண வரவு திருப்தியளிக்கும். பழைய கடன்களை செலுத்த முடியும். உடன்பிறப்புகளுடனான உறவு வலுவாக இருக்கும். அலுவலகத்தில் உங்களது செயல்திறனால் திருப்தி அடைவர். உடல்நலம் பற்றி பேசினால், சிறிய பிரச்சனைகள் ஏற்படலாம். கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

மீனம்

மீனம்

உங்கள் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையிடமிருந்து நிறைய அன்பும் ஆதரவும் கிடைக்கும். இன்று நீண்ட கால குடும்ப பிரச்சினைகளை தீர்க்க முடியும். வேலை முன்னணியில், இன்று சில பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். நிறைய மன அழுத்தத்தை உணர முடியும். வணிகர்கள் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு நன்மைகளைப் பெறலாம். இன்று அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும். ஏனெனில், வீண் செலவுகளால் பொருளாதார நிலை கெடலாம். இன்று நீங்கள் கடன் வாங்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். எந்தவொரு சட்ட விஷயமாக இருந்தாலும், நீங்கள் வழக்கறிஞரை அணுகுவதற்கு இன்று நல்ல நாள். பரபரப்பான வாழ்க்கை சூழலால் உங்கள் உடல்நிலை பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 06th January 2021 Wednesday In Tamil

Check out the daily horoscope for 06th January 2021 wednesday in Tamil. Read on.
Story first published: Tuesday, January 5, 2021, 20:23 [IST]
Desktop Bottom Promotion