For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ராசிப்பலன் (01.03.2021): இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…

இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 01 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மார்ச் 01 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Daily Horoscope For 01st March 2021 Monday In Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மனரீதியாக இன்று நீங்கள் நலமாக இருக்க மாட்டீர்கள். மிகவும் குழப்பமான மனநிலையில் காணப்படுவீர்கள். எனவே, மனதை அமைதியாக வைத்து பொறுமையாக வேலைகளை செய்யுங்கள். இன்று அலுவலகத்தின் சூழ்நிலை சரியாக இருக்காது. உங்கள் தவறுகளால் உயர்அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. எந்தவொரு முக்கியமான வணிக முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்குமாறு வணிகர்கள் இன்று அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசுகையில், நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலுவாக இருக்க தினமும் யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:45 மணி முதல் பிற்பகல் 2:20 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று நீங்கள் எவரிடமும் சிந்திக்காமல் பேசுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில், உங்கள் வார்த்தைகளால் நீங்களே சிக்கலில் சிக்கலாம். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, முக்கிய பணிகளில் கவனம் செலுத்தினால் நல்லது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் வாங்கிய கடனை மெதுவாக திருப்பிச் செலுத்த முயற்சிக்க வேண்டும். திருமண வாழ்க்கை இருந்து வந்த மோசமான நிலைமை மாறி, மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். வேலை முன்னணியில் இன்று சாதாரணமாக இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, மன அழுத்தத்தைத் தவிர்த்திடவும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:45 மணி முதல் இரவு 8:00 மணி வரை

மிதுனம்

மிதுனம்

தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். குடும்பத்துடன் நல்லுறவை வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். மேலும், அவர்களின் விருப்பு வெறுப்புகளை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் இன்று அவர்களின் கடின உழைப்பின் பலனைப் பெறலாம். உயர் பதவியை அடைவதன் மூலம் சம்பள உயர்வு சாத்தியமாகும். வியாபாரிகள், பெரிய முதலீடு செய்ய சாதகமான நாள். கடினமான போராட்டத்திற்குப் பிறகு நீங்கள் இன்று நிறைய பணம் சம்பாதிக்க முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:45 மணி முதல் இரவு 8:00 மணி வரை

கடகம்

கடகம்

இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். மிகவும் நன்றாக உணருவீர்கள். வணிகர்களுக்கு லாபம் நிறைந்த நாளாக இருக்கப்போகிறது. அத்துடன் உங்கள் வணிக நோக்கமும் அதிகரிக்கக்கூடும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்க வழிப்பிறக்கும். மேலும், பிறருக்கு நிதி ரீதியாக உதவவும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில சிக்கல்கள் இருக்கலாம். ஆரோக்கியத்தின் பார்வையில் இன்று சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 8:20 மணி வரை

சிம்மம்

சிம்மம்

உத்தியோகஸ்தர்களுக்கு, இன்று கடினமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் எந்தவொரு வேலையையும் அவசரமாக செய்ய வேண்டாம். உங்கள் தவறுகளால், பாதகமான முடிவை நீங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளின் எந்தவொரு பெரிய பிரச்சனையும் முடிவுக்கு வரலாம். மேலும், நீங்கள் நிதி நன்மைகளை கூட பெறலாம். இன்று, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்தியல் வேறுபாடுகள் சாத்தியமாகும். கோபம் அல்லது விவாதத்திற்கு பதிலாக அமைதியாகப் பேசினால் நல்லது. நிதி நிலை நன்றாக இருக்கும். உடல்நலம் பற்றிப் பேசினால், நீங்கள் ஒவ்வொரு நாளும் லேசான உடற்பயிற்சி செய்தால், மிகவும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கன்னி

கன்னி

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலையை முழு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்ய வேண்டும். சக ஊழியர்களுடனும் உங்கள் முதலாளியுடனும் நல்ல உறவைப் பேண முயற்சிக்கவும். உங்கள் தந்தையின் வியாபாரத்துடன் தொடர்புடையவராக இருந்தால், இன்று ஒரு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் உடன்பிறப்புகளுடன் இன்று நிதி குறித்து ஒரு தகராறு ஏற்படலாம். உங்கள் நடத்தையை சீரானதாக வைத்து விஷயத்தை அமைதியாக கையாள முயற்சிப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் இனிமையான முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் காதல் அதிகரிக்கும். உடல்நலம் பற்றி பேசினால், நெரிசலான பகுதிக்கு செல்வதைத் தவிர்த்து, சமூக விலகலைப் பின்பற்றுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9:00 மணி வரை

துலாம்

துலாம்

இன்று சில சந்தர்ப்பங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகளை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின், நிலுவை பணிகள் அனைத்தும் நிறைவடையும், அதேபோல் நீங்கள் தடைப்பட்ட ஊதிய உயர்வையும் பெறலாம். வியாபாரிகள், இன்று மிகப்பெரிய நிதி ஆதாயத்தைப் பெறலாம். உங்கள் வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். அன்பும் ஒற்றுமையும் குடும்பத்தில் நிலைத்திருக்கும். பணத்தின் அடிப்படையில் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். தேவையில்லாமல் செலவிடுவதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று, உங்கள் உடல்நலமே உங்களுக்கு முன்னுரிமையாக இருக்க வேண்டும். எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும், ஓய்வெடுக்க நேரம் ஒதுக்க வேண்டும். திடீர் வருமானத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று ஒரு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்பை உயர் அதிகாரிகள் கவனிக்கலாம். தொழிலதிபர்கள் ஒரு முக்கிய வேலையாக வெளியூர் செல்லக்கூடும். உங்கள் வணிகத்தை உருவாக்க, நீங்கள் சில புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், குடும்பத்தாரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4 மணி வரை

தனுசு

தனுசு

இன்று உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். அதிகப்படியான மகிழ்ச்சி உங்களை சிக்கலில் சிக்க வைக்கக்கூடும்.உத்தியோகஸ்தர்கள் இன்று சற்று மந்தமாக செயல்படுவீர்கள். உங்கள் சில பணிகள் முழுமையடையாமல் இருக்கலாம். இது தொடர்ந்தால், உங்கள் முதலாளி கடுமையான முடிவை எடுக்க முடியும். வர்த்தகர்கள் இன்று ஒரு பெரிய வாய்ப்பைப் பெறலாம். இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்வது நல்லது. தடைப்பட்ட பணத்தை பெறலாம். பணம் தொடர்பான சில பெரிய வேலைகளைச் செய்ய இன்று சாதகமாக இருக்காது. உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று கால்கள் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

மகரம்

மகரம்

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாழ்க்கை துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் உங்கள் திறமையைக் காட்ட இது சரியான நேரம். கடினமாக உழைத்தால், விரைவில் பெரிய முன்னேற்றத்தை அடையலாம். சொந்தமாக சிறு வணிகத்தைத் தொடங்க விரும்பினால், இன்று நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். அன்புக்குரியவருடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் பற்றி பேசினால், இன்று ஒரு கலவையான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இருண்ட இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக செயல்படவும். பணம் தொடர்புடைய கவலைகள் அதிகரிக்கக்கூடும். நிதிக் தட்டுப்பாடுகளைத் தவிர்க்க வேண்டுமெனில், உங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களுக்கு பணம் செலவழிப்பதைத் தவிர்க்கவும். வேலையைப் பற்றி பேசுகையில், பதவி உயர்வு எதிர்பார்பவர்கள் கடினமாக உழைப்பதில் பாரபட்சம் காட்டக்கூடாது. உணவுப் பொருட்களை வர்த்தகம் செய்பவர்களுக்கு ஒரு பெரிய பொருளாதார நன்மை கிடைக்கும். இன்று நீங்கள் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். வீண் விவாதத்தால் பாதிப்பு உங்களுக்கு தான். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். உடல்நலம் பற்றிப் பேசினால், வானிலை மாற்றத்தால் சிக்கல் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை

மீனம்

மீனம்

இன்று உங்கள் மனநிலையை சரியாக வைத்திருக்க முயற்சிக்கவும். அற்ப விஷயங்களுக்காக கோபப்படுவதைத் தவிர்க்கவும். உடல்நிலையைப் பொறுத்தவரை, நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பீர்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஓய்வெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரிகள், இன்று ஒரு குறுகிய பயணத்தை மேற்கொள்ளலாம். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் முக்கியமானதாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டின் பெரியவர்களிடமிருந்து பாசத்தையும் ஆசீர்வாதங்களையும் பெறுவதன் மூலம் நீங்கள் நேர்மறையாக உணர்வீர்கள். வீட்டு வசதிக்காக நீங்கள் சிறிது பணத்தை செலவிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 01st March 2021 Monday In Tamil

Check out the daily horoscope for 01st March 2021 Monday in Tamil. Read on.
Story first published: Sunday, February 28, 2021, 23:46 [IST]
Desktop Bottom Promotion