For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கி அதற்கு வரியும் வசூலிக்கும் நாடுகள்என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!

|

உலகின் மிகப் பழமையான வேலை, நீண்ட காலமாக இருக்கும், வெறுக்கத்தக்க மற்றும் வீழ்ச்சியடைந்த நிலையில் செய்யப்படும் வேலைத் தேர்வாக இருப்பது விபச்சாரம்தான். தடைகள் இருந்தாலும் சரி மற்றும் சட்டப்பூர்வ அந்தஸ்து இருந்தாலும் சரி, வறுமை அல்லது எதிர்பாராத அழுத்தங்கள் காரணமாக இது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கப்போகிறது.

சில நாடுகள் இந்த நடைமுறையை முற்றிலும் கடுமையாக தடைசெய்துள்ளன, வேறுசில நாடுகள் இதற்கு சட்டபூர்வமான அனுமதி அளிப்பதன் மூலம் விபச்சாரத்தை ஒழுங்குபடுத்த முயற்சித்துள்ளன, பாலியல் தொழிலாளர்களுக்கு உடல்நலம் மற்றும் சமூக நலன்களை வழங்குகின்றன. இந்த பதிவில் விபச்சாரத்திற்கு சட்டபூர்வ அனுமதி அளித்துள்ள நாடுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நியூசிலாந்து

நியூசிலாந்து

2003 ஆம் ஆண்டு முதல் கிவிகளுக்கு விபச்சாரம் சட்டப்பூர்வமாக உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சட்டங்களின் கீழ் உரிமம் பெற்ற விபச்சார விடுதிகள் கூட செயல்படுகின்றன, அதாவது மற்ற ஊழியர்களைப் போலவே தொழிலாளர்களும் சமூக நலன்களையும், அரசின் சலுகைகளையம் பெறுகிறார்கள்.

ஆஸ்திரியா

ஆஸ்திரியா

ஆஸ்திரியாவில் விபச்சாரம் முற்றிலும் சட்டபூர்வமானது. விபச்சாரத்தில் ஈடுபட வேண்டிய பெண்கள் பதிவு செய்ய வேண்டும், அவ்வப்போது உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும், 19 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் மற்றும் வரி செலுத்த வேண்டும். இருந்த போதிலும் இங்கு கடத்தல் மற்றும் கட்டாய விபச்சாரமும் அதிகம்.

பங்களாதேஷ்

பங்களாதேஷ்

ஆண் விபச்சாரம் இங்கு சட்டவிரோதமானது, ஆனால் மற்ற அனைத்தும் சட்டபூர்வமானது. பங்களாதேஷில் கடுமையான மைனர் பெண்களின் கடத்தல் பிரச்சனை உள்ளது, இது ஊழலால் நீடித்தது. பிம்பிங் மற்றும் விபச்சார விடுதியை வைத்திருப்பதும் சட்டப்பூர்வமானது.

MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க கல்லீரல் மது அருந்தியதால் ஆபத்தான நிலைக்கு போயிருச்சுனு அர்த்தமாம்...!

 பெல்ஜியம்

பெல்ஜியம்

விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவது மட்டுமல்லாமல், கைரேகை தொழில்நுட்பம் மற்றும் கீ கார்டுகளுடன் முறையான நவீன விபச்சார விடுதிகளை நடத்துவதன் மூலம் அவர்கள் விபச்சாரத்துடன் தொடர்புடைய களங்கம், வன்முறை மற்றும் பயத்தை அகற்ற முயற்சிக்கின்றனர்.

கொலம்பியா

கொலம்பியா

கொலம்பியாவில் பாலியல் துறையில் வேலை செய்வது சட்டப்பூர்வமானது, இருப்பினும் பிம்பிங் இல்லை. விபச்சாரம் குறிப்பாக கார்டஜினா மற்றும் பாரன்குவிலா போன்ற நகரங்களில் பரவலாக உள்ளது.

டென்மார்க்

டென்மார்க்

விபச்சாரம் இங்கு சட்டப்பூர்வமானது. மாற்றுத்திறனாளிகள் சிலருக்கு கூடுதல் செலவினங்களைச் செலுத்துவதன் மூலம் அரசாங்கம் அவர்களுக்கு வேலை கொடுக்க உதவுகிறது.

MOST READ: இந்த பழங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுமாம்... சர்க்கரை நோயாளிகள் இவற்றை தாராளமாக சாப்பிடலாம்...!

ஈக்வடார்

ஈக்வடார்

பாலியல் தொழில் தொடர்பான அனைத்தும் இங்கு சட்டப்பூர்வமானது. இங்கு எந்த பிரச்சினைகளும் இல்லாமல் உடலை விற்கலாம், ஒரு விபச்சார விடுதி நடத்தலாம் அல்லது சட்டரீதியான மாற்றங்கள் இல்லாமல் பிம்பாக இருக்கலாம். ஒருவரை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது மட்டுமே இங்கு பெரிய பிரச்சினையாகும்.

பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரான்சில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக உள்ளது, இருப்பினும் பொது இடங்களில் விபச்சாரத்தில் ஈடுபடுவது இன்னும் சட்டவிரோதமானது. Pimping சட்டவிரோதமானது மற்றும் விபச்சார விடுதிகள் 1946 இல் பிரான்சில் போருக்குப் பிறகு சட்டத்திற்குப் புறம்பானது.

ஜெர்மனி

ஜெர்மனி

இங்கு 1927 ஆம் ஆண்டு விபச்சார சட்டப்பூர்வமாக்கப்பட்டது மற்றும் முறையான அரசு நடத்தும் விபச்சார விடுதிகள் உள்ளன. விபச்சாரத்தில் தொழிலாளர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது, மேலும் அவர்கள் வரி செலுத்த வேண்டும் மற்றும் ஓய்வூதியம் போன்ற சமூக நலன்களையும் பெறுகிறார்கள்.

MOST READ: இந்த 5 ராசிக்காரங்க பண்றது எல்லாமே பொய் சத்தியம்தானாம்... இவங்கள தெரியாமகூட நம்பிராதீங்க...!

நெதர்லாந்து

நெதர்லாந்து

பாலியல் தொழிலார்களுக்கு மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்று நெதர்லாந்து. விபச்சாரம், மற்ற விஷயங்களைப் போலவே இங்கே சட்டப்பூர்வமாக உள்ளது. மற்ற இடங்களில் தடைசெய்யப்பட்ட விஷயங்களைக் கையாள்வதில் அவர்கள் எப்போதும் சற்று திறந்த வழியைக் கொண்டுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Countries Around The World That Have Legalized Prostitution in Tamil

Check out the countries around the world that have legalized prostitution.
Story first published: Thursday, May 5, 2022, 11:38 [IST]
Desktop Bottom Promotion